Posted by superadmin in Latest News
- அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு எல்.என்.ஜி. எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை தாபிப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை
- இலங்கையில் எல்.என்.ஜி. எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை தாபிப்பதற்குரிய சீன அரசாங்கத்தின் முதலீட்டு வாய்ப்புகள் எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்குள் உறுதிசெய்யப்படும்
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கத்தின் தூதுவர் Cheng Xueyuan அவர்கள் நட்பு ரீதியில் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களை சந்தித்தார்கள்.
கடந்த தினம் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கையின் மின்னுற்பத்தி தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது. ஏற்கெனவே, இலங்கையின் மின்சக்தித் துறை மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களுக்கு நகர்ந்துள்ளமை தொடர்பில் சீன தூதுவரின் விஷேட கவனம் செலுத்தப்பட்டது. எல்.என்.ஜி. எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பில் காணப்படுகின்ற நிலை பற்றியும் தூதுவர் அமைச்சர் அவர்களிடம் வினவினார். இதன் போது, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒரு எல்.என்.ஜி. எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை தாபிப்பதிலுள்ள ஆற்றல் தொடர்பாகவும் அமைச்சருக்கும் மற்றும் தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையில் மின்சக்தி உற்பத்திற்கான பிரதான பாரம்பரிய சக்தி மூலம் நீர் வளமாகும் எனவும், அதனூடாக குறைந்த விலையில் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மின்சார நுகர்வோருக்கு வினைத்திறன் வாய்ந்த ஒரு சேவையை வழங்கக் கூடியதாக இருந்தாலும், காணப்படுகின்ற சகல நீர் மூலங்களும் ஏற்கெனவே மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அதே போன்று, நாளாந்தம் மின்சாரத்திற்காக அதிகரித்து வருகின்ற தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு எரிபொருள், நிலக்கரி போன்ற சக்தி மூலங்ளுக்கு நகர்ந்தாலும், அவற்றுக்கு காணப்படுகின்ற விலை மற்றும் ஏனைய பிரச்சினைகள் என்பவற்றின் காரணமாக சூரிய சக்தி, காற்று சக்தி அதே போன்று எல்.என்.ஜி. எரிவாயு போன்ற சக்தி மூலங்களுக்கும் நகர்ந்தமை பற்றியும் சீன தூதுவருக்கு அமைச்சர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். எதிர்காலத்தில், இலங்கையில் தாபிப்பதற்கு உத்தேசிக்கப்படும் எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்பாகவும் அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் மேலும் சீன தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்கள்.
மின்னுற்பத்தி மற்றும் மின்சார விநியோகம் ஆகியவற்றில் இலங்கை மிகவும் உயர்ந்த நிலையிலுள்ளதாகவும், மேலும் மின்சக்தித் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு எல்.என்.ஜி. எரிவாயு மின்னுற்பத்தி நிலைய தொழில் நுட்பம் தொடர்பில் தனது நாட்டு உதவியை பெற்றுத் தருவதற்கு சீன அரசாங்கத்தின் சார்பாக தான் உடன்படுவதாகவும் தூதுவர் கூறினார். அதே போன்று, எல்லா சந்தர்ப்பங்களிலும் பொது மக்களினதும் மற்றும் அரசாங்க ஊழியர்களினதும் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனத்தைச் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும் எனவும் கூறிய சீன தூதுவர், தனது நாட்டின் மின்சாரக் கருத் திட்டங்களை பார்வையிடுவதற்கு வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறினார். மேலும், இலங்கையில் எல்என்.ஜி. எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களின் நிமித்தம் முதலீடு செய்வதற்குள்ள ஆற்றல் பற்றி எதிர்வரும் ஒரு சில வாரங்களுக்குள் தேடிப்பார்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.