03 0

Posted by  in Latest News

பதாகைகளை ஏந்தி நிற்பதால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது….” 

இ.மி.ச. நிலைத்திருப்பது மின்சார நுகர்வோரினால்தான்.…”

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

‘எமக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கும் கரும பணிதான், குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, முழு நாட்டு மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவது. திருகோணமலைப் பகுதியில் காணப்படுகின்ற வளங்களை பயன்படுத்தி, குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அதிகளவில் சாத்தியம் காணப்படுகின்றது.  எனினும், இந்த கரும பணிகளை மேற்கொள்ளும் போது, நாம் பொது மக்களுக்கும், சுற்றாடலுக்கும் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து செயல்படுதல் வேண்டும். அந்த அபிவிருத்தியினால் 100 மற்றும் 200 குடும்பங்களை அவற்றின் நிலைகளிலிருந்து வேறு நிலைகளுக்கு தள்ளுவதாகவிருந்தால், அத்தகைய அபிவிருத்தியில் பிரயோசனம் கிடையாது. மக்களின் ஒத்துழைப்புடன் நிகழ்ந்தால் மாத்திரமே, அது உண்மையான அபிவிருத்தியாக மாறும். கொழும்பில் இருந்து கொண்டு, உரிய பிரிவுகளுக்கு அறிவுரைகளை நாம் வழங்க முடியும், 1000 மெகாவொட்டு சக்தியை உற்பத்தி செய்து மின்சாரத்தை அதிகரிக்கும்படி. எனினும், அதனூடாக 1000 உள்ளங்கள் பாதிக்கப்பட்டால், அந்த குறித்த கருமத்தை செய்தாலும், அது உண்மையான அபிவிருத்தியாகாது. நாம் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. அவ்வாறு நாங்கள் ஜனநாயக ரீதியில் செயல்படும் போதும், தேவையற்ற விதத்தில் செல்வாக்குச் செலுத்துவதற்கும் மற்றும் முறையற்ற விதத்தில் பிரயோசனம் அடைவதற்கும் முற்பட்டால், நாமும் நேரடியாக, கடுமையாக நடவடிக்கையை எடுக்க வேண்டும். அநியாயமான கோரிக்கைகளுக்கு நாம் செவிசாய்க்க முடியாது. நாம் நாட்டின் முழு மக்களினதும் நலனை கருத்திற் கொள்ள வேண்டும். எனக்கு தேவைப்படுவது வேலை செய்ய அன்றி, வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதற்கு அல்ல. என்ன நிகழ்ந்தது என்று சொல்லுவதை பார்க்கிலும், எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்து, நாட்டின் அபிவிருத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதான் எனக்கு தேவை’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.

கிழக்கு மாகாண, இ.மி.ச. பிரதிப் பொது முகாமையாளர் அலுவலகத்தை பார்வையிடுவதற்காக கடந்த தினத்தில், சென்ற வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள். இந்த நிகழ்வில், மின்வலு சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச அவர்களும் கலந்து கொண்டார்கள்.

பார்வையிடும் விஜத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள்….,

‘இன்று, இந்த நாட்டில் 99% வீதமான மக்களுக்கு மின்சாரத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு இருந்தாலும், அனைவரும் இந்த சேவை பெற்றுக் கொள்வதில்லை.  அதற்கு காரணம்தான் எமது மின்சார உற்பத்திச் செலவு. ஒரு மின்சார அலகிற்கு 65 ரூபா, 45 ரூபா அளவுகளில் காணப்படுவது. எனினும், நாம் ஒரு மின்சார அலகை விற்பனை செய்வது 16.00 ரூபா விலைக்கு. நாம் அதிக நட்டத்தில்தான் இந்த சேவையை வழங்குவது. இந்த நட்டத்தை தொடர்ந்தும் சுமக்க முடியாது. அவ்வாறிருந்தாலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். இதற்கு ஒரேயொரு தீர்வுதான் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய வழிகளுக்கு நகர்வது. இந்த இடத்திற்கு வந்த போது நான் கண்டது, ஒன்றுதான் இலங்கையின் அடையாளம். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், மலாய் என்ற இனங்களின் ஒற்றுமை. இந்த ஒவ்வொரு இனமும் எனது இடம், எனது நாடு என்று கருதுகின்றன. அதுதான் இன்று நாட்டிற்கு தேவை. இதுதான் நாட்டின் சக்தி’.

‘இலங்கை மின்சார சபை, திருகோணமலையிலிருந்து ஒரு பெரும் பணியை செய்யப் போகுகின்றது, இந்தப் பிரதேசத்தில் அதிகமான மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்கி. இந்தப் பகுதி மக்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பது போலவே, நாட்டின் தேசிய மின்சார முறைமைக்கும் பாரிய பங்களிப்பைப் பெற்றுக் கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றேன். திருகோணமலையிலிருந்து ஹபரனவுக்கும் மற்றும் ஹபரனவிலிருந்து வேயாங்கொடவுக்கும் அதிகளவான மின்சார செலுத்துகை மார்க்கங்களை நாம் உருவாக்குவோம். அதிலிருந்து தெரியும், கொழும்பிலிருந்து தூரமாகவிருந்தாலும், எந்தளவு சேவையை இந்த திருகோணமலை பிரதேசத்திற்கும், மின்சக்தித் துறை வழங்குகின்றது என்று’.

‘அரச சேவையிலுள்ள பழக்கம்தான், இன்றிலிருந்து நாளை வரைக்கும் கோவைகளை தள்ளிவிடுவது. இலங்கை மின்சார சபையில், இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டும். எமக்கு ஒரு விண்ணப்பம் கிடைத்தால், 72 மணித்தியாலங்கள் கழிய முன்னர், அதற்கு பதில் அளிக்க வேண்டும். ஏப்ரல் மாதம் முதலாவது வாரம் அளவில் நாம் மின்சார நுகர்வோருக்கு உண்மையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்போம். இன்று, இலங்கை மின்சார சபையில் (இ.மி.ச.) ஏகபோகத்தன்மை இருப்பதால், அது மின்சார நுகர்வோர் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி என்று செயல்படுகின்றது. எனினும், நுகர்வோர்தான் எமது பொக்கிஷம், நுகர்வோரால்தான் இ.மி.ச. நிலைத்திருக்கின்றது என்று எண்ணி, நுகர்வோருக்கு திருப்தியை ஏற்படுத்துவதனூடாக செயல்படுதல் வேண்டும் என்ற கருத்தை நாடு முழுதிலும் பரவச்செய்யும் ஒரு வேலைத்திட்டத்திற்கு நாம் நகர்வோம். நாம் பெறுகின்ற சம்பளத்திற்கு ஏற்ற சேவையை நாம் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்’.

‘சுதந்திரம் கிடைத்து 71 ஆண்டுகள் கழிந்தாலும், நாம் இன்னும் அபிவிருத்தி அடையாது ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்கின்றோம். எம்மால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்றில்லை. அவ்வாறு செய்ய வேண்டும் என்ற தேவை இல்லாதிருப்பதுதான். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக ஒரு காணியை சுவீகரிக்கச் சென்றால், சிலர் கூறுகின்றனர், ஐயோ, இந்த அபிவிருத்தியை மேற்கொண்டால் பறவைகள் அங்குமிங்கும் செல்லும் என்று. பறவைகளை பார்ப்பதற்கு முன்னர் எமது மக்களை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். பறவைகளையும் வாழ இடமளிக்க வேண்டும். அதற்கும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும். மின்னுற்பத்தி நிலையங்களை ஆரம்பிக்கச் சென்றால், கூறுகின்றார்கள் இந்த இடத்தில் வயல் காணிகள் இருக்கின்றன என்று. வயல் காணிகளும் அவசியம்தான். அதே போன்று, எமது மக்களையும் வாழ வைக்க வேண்டும். அதற்கு மின்சாரம் தேவை. நாட்டின் அபிவிருத்திற்கு நாம் தோழ்கொடுக்க வேண்டும். இன்று, எமது நாட்டின் அபிவிருத்தி 4%, 5% என்ற வீத அளவுகளில் காணப்படுகின்றது. எனினும், அந்த அபிவிருத்தி 10%, 12% வீதங்களில் இருக்க வேண்டும். இவ்வாறான பிரதேசங்களில் அது 20 % வீதமான இருக்க வேண்டும். பதாகைகளை ஏந்தி நிற்பதால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. பேச்சுவார்த்தைகளின் மூலமாக பிரச்சினைகளை தீர்த்து, ஒற்றுமையுடன் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்’. எனவும் கூறினார்கள்.

Leave a comment

* required