27 0

Posted by  in Latest News

‘எந்த ஒரு காரணத்திற்காகவும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க நான் இடமளிக்க மாட்டேன்……’

‘ஜனாதிபதியும், பிரதமரும் தற்பொழுது ஒரே கருத்தில் இருக்கின்றனர். ஏனைய கட்சிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அச்சமின்றி முன்வருமாறு…..’

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

‘நாட்டிற்கு மிகவும் நல்லதுதான் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது. இது, நாட்டிற்கு உகந்ததல்ல என தீர்மானமாகிவிட்டது. ஆகையால், இப்பொழுது நாட்டிற்கு தேவை யாதெனில் இந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதுதான். தேர்தல் காலம் வந்ததும் மக்களுக்கு, ஆசையூட்டி, பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதில்லை நாம் செய்ய வேண்டியது. ஜனாதிபதியும், பிரதமரும் அவர்களை சார்ந்தவர்களும் இம்முறை தேர்தலில் களமிறங்கியது, இந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்று மக்களுக்கு வாக்குறுதியளித்துத்தான். நாம் இன்றும் கூட அந்த கருத்தில்தான் இருக்கின்றோம். அப்படியென்றால், நாம் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எதிர்கட்சிகளில் இருக்கின்றவர்களுக்கும் நாம் கூறுவது, ஒரே அபிப்பிராயத்திற்கு வந்து, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இல்லாதொழித்து, இந்த சந்தர்ப்பத்தில், நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லுமாறு. 71 வருட காலமாக இந்த நாடு, ஆட்சி முறையில் சில சில மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தில் எந்த வித உண்மையான ஒரு மாற்றத்தையும் நாம் இன்னும் காணவில்லை. மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு ஒரு சில காலம் எடுப்பதால், அதுவும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாபதி முறையை ஒழிப்பது, நாட்டிற்கு பாராளுமன்றத்தினூடாக முன்னேறிச் செல்லக் கூடிய ஒரு முறையியலை ஏற்படுத்தும் ஒரு ஜனநாயகத்திற்கு முக்கியமானதாக அமையும்’ எனவும் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் கூறினார்கள்.
மொனராகல் மாவட்டத்தில், மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களை பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் மின்னுற்பத்திக் கருத் திட்டங்களை பார்வையிடும் பொருட்டு, கடந்த தினத்தில் மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் பாகமாக, க்லிடிசீரியா எனும் தாவரங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய தாவர மூல சக்தி மின்னுற்பத்திக் கருத் திட்டத்தை அவதானிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வேளையிலேயே, அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் …..,
‘தாவர சக்தியிலிருந்து எவ்வாறு மின்சாரத்தை உற்பத்தி செய்வது, எவ்வாறு எங்களுடைய அப்பாவி மக்களுக்கும் குடும்பங்களுக்கும் அவற்றிலிருந்து கிடைக்கும் நன்மைகளை பெற்றுக் கொடுப்பது என்று பார்ப்பதற்காகத்தான் நாம் இங்கு வந்தோம். இந்த தாவர சக்தி மூல மின்னுற்பத்திக் கருத் திட்டத்தினூடாக கிடைக்கும் நன்மைகளை உரிய குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுப்பதுதான் எனது குறிக்கோள். அதே போன்று ஒரேயொரு முக்கிய அபிலாஷைதான் எமது அப்பாவி நுகர்வோரை பாதுகாப்பது. எக்காரணம் கொண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நான் இடமளிக்க மாட்டேன். அவ்வாறு செய்தால், நாம் இலங்கை மின்சார சபையை பாதுகாப்பது எப்படி. இலங்கை மின்சார சபையிலுள்ள (இ.மி.ச.) 30,000 ஊழியர்களினதும் மற்றும் அதன் நிறுவனக் கட்டமைப்பினதும் நிலைகளை உயர்வடையச் செய்து, இந்த ஆண்டு நட்டம் என கணிப்பிடப்பட்டுள்ள 8900 ரூபா நட்டத்தை குறைத்துக் கொள்வது எவ்வாறு என்று தேடிப்பார்த்து, குறைந்த உற்பத்திச் செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு முறையியலைப் பிரயோகிக்கும் ஒரு செயற்பாட்டில்தான் நாம் இப்பொழுது இறங்கியுள்ளோம்’.

‘யார் முன்வைத்தாலும் செய்ய வேண்டியது நல்லதென்றால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோம். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது ஜே.ஆர். ஜயவர்த்தன அவர்கள். அப்போது, லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்ற அனைவருக்கும் அன்று அது நாட்டிற்கு உகந்தது என்று தெரிந்திருந்தாலும், அதன் பின்னர் இந்த முறைமை நாட்டிற்கு நல்லதல்ல என்பது புரிந்தது. அது ஏகமனதாக நிறூபிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும், பிரதமரும் தற்பொழுது ஒரே கருத்தில் இருக்கின்றனர். நான் அழைப்பு விடுக்கின்றேன் ஏனைய கட்சியிலுள்ளவர்களுக்கும், அச்சமின்றி இந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்து, எம்மை விட்டும் மறைந்த வணக்கத்திற்குரிய சோபித்த தேரர் அவர்கள் அன்று கண்ட கனவை நனவாக்க உதவுமாறு’ எனவும் கூறினார்கள்.

Leave a comment

* required