Posted by superadmin in Latest News
‘ப்ரோட்லேண்ட் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படும் 35 மெகாவொட்டு மின்சாரத்தை தேசிய மின்சார முறைமைக்கு சேர்க்க முடியுமாயின், அவரசர மின்சாரக் கொள்வனவை செய்வதற்கு தேவை ஏதுமிருக்காது……….’
x நாம் டீசல் பீதிற்கு இடமளிக்கப் போவதில்லை.
x பிரதேசங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்திகள் இ.மி.ச. அனுசரணையில் மீண்டும் இயல்நிலைக்கு கொண்டுவரப்படும்.
x எல்.என்.ஜி. எரிவாயு மூல மின்னுற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்
‘ப்ரோட்லேண்ட் மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு சில பிரச்சினைகளினால் வதிவிடங்களை இழந்துள்ள மக்களின் உள்ளங்களில் நிலவும் அவநம்பிக்கையை களைந்து, சரியான ஒரு தீர்வை பெற்றுக் கொடுப்பதுதான் எனக்கு தேவை. ஏற்கெனவே, இந்தப் பிரதேசங்களில் அபிவிருத்திப் பணிகள் தடைப்பட்டுள்ளன. இ.மி.ச. அனுசரணையில், 3 கி.மீ. நீளமான வீதியை அமைத்துக் கொடுப்பதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். இந்த விடயங்கள் உரிய முறையில், நான் உறுதியளித்தது போல் நிகழ்கின்றனவா என்பதை அவதானிப்பதற்காக ஏப்ரல் மாதம் முதலாம் வாரத்தில் நான் இந்தப் பிரதேசத்திற்கு வருவேன். குறித்த கருத் திட்டத்தினால் வதிவிடங்களை இழந்திருக்கின்ற மக்களுக்கு இந்த வருடம் ஏப்ரல் மாதமாகும் போது நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் தெரிவித்தார்கள்.
தேசிய மின்சார முறைமைக்கு 35 மெகாவொட்டு மின்சாரத்தை சேர்க்க பங்களிப்பு செய்யும் என எதிர்பார்க்கப்பபடும் ப்ரோட்லேண்ட் மின்னுற்பத்தி கருத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளினால் தமது வதிவிடங்களை இழந்து, பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து பார்க்கும் நிமித்தம் குறித்த பிரதேசத்திற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயத்தின் போது அமைச்சர் அவர்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்கள்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள்,
‘இந்த மின்னுற்பத்தி நிலைய கருத் திட்டம் தாமதிப்பதால் நட்டம் ஏற்படுவது எங்களுடைய மின்சார நுகர்வோருக்கே. ப்ரோட்லேண்ட் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படும் 35 மெகாவொட்டு மின்சாரத்தை தேசிய மின்சார முறைமைக்கு சேர்க்க முடியுமாயின், அவரசர மின்சாரக் கொள்வனவை செய்வதற்கு தேவை ஏதுமிருக்காது. எனினும், இந்த 35 மெகாவொட்டு மின்சாரம் கிடைக்கவில்லை என்பதை காரணம் காட்டி, நாம் அவசர மின்சாரக் கொள்வனவை செய்யப் போவதில்லை என தீர்மானித்தோம். நுகர்வோர்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் அவர்களை பாதுகாப்பதுதான் எமக்கு தேவை. எந்த விதத்திலும் மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ளாத வகையில், வீணாதல், மோசடி, ஊழல் என்பவற்றை ஒழித்து, மக்களுக்கு, நன்மைகளை பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுப்போம்’.
‘எல்.என்.ஜி. எரிவாயு மூல மின்னுற்பத்தி நிலையங்களின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். செலுத்தப்படும் அநாவசிய மின்சாரக் கட்டணங்களை அதனூடாக குறைப்பதுதான் எமது ஒரேயொரு அபிலாஷை. இவ்வளவு காலமும் இந்த மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் இழுத்தடிக்கப்பட்டது ஏன் என்பதுதான் பிரச்சினை. எமது ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் திடமாக இந்த மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க வேண்டும் என தீர்மானம் எடுத்ததால், 16 மாதங்கள் போன்ற ஒரு காலப் பகுதியில் இதனை செயற்படுத்த முடிந்தாலும், செலுத்தப்படும் மின்சாரக் கட்டணத்தை 5% – 10% வீதத்தால் குறைக்க முடியும் என நினைக்கின்றோம். இதற்கு தடையாக இருக்காமல், நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லெண்ணத்துடன் செயல்பட வேண்டும். இவ்வளவு காலமாக சரியான நேரத்தில் சரியான தீர்மானம் மேற்கொள்ளப்படாததால்தான் மக்களின் கனவுகள் நனவாகியிருக்கின்றன. இந்த நிலையை முற்றிலும் ஒழிப்பதுதான் எமக்கு தேவை. அரசியல்வாதிகள் இருப்பது தற்காலிக தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கல்ல. நிலையான, நிரந்த, நீண்டகால தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்குத்தான். ஆகையால்தான் நாங்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். நாம் டீசல் பீதிற்கு இடமளிக்காது, மக்களின் நலனை கருத்திற் கொண்டுதான் செயல்படுவோம்’ எனவும் குறிப்பிட்டார்கள்.
இந்த நிகழ்வில், மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட அவர்களும் கலந்து கொண்டார்கள்.