Posted by superadmin in Latest News
“நவீன வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்ட புதிய ஒரு தொலைபேசி நிலையம் ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதியாகும் போது இலங்கை மின்சார சபைக்கு (இ.மி.ச.) ……”
“மின்சார நுகர்வோருடன் மிகவும் நெருங்கிய முறையில் இயங்கக் கூடிய ஒரு நிறுவனமாக இலங்கை மின்சார சபையை பரிவர்த்தனை செய்வதுதான் எமக்கு தேவை…”
ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்
‘இலங்கை மின்சார சைபயில் (இ.மி.ச.) செலவுகளை குறைத்து, நட்டத்தை இல்லாமல் செய்யும் ஒரு வேலைத் திட்டத்திற்கு நாம் விரைவில் நகர வேண்டும். நுகர்வோர்தான் எமது அடிப்படை இலக்காக இருக்க வேண்டும். அந்த எண்ணக்கருவில் இருந்து கொண்டுதான் நாம் பணியாற்ற வேண்டும். மின்சார நுகர்வோருடன் மிகவும் நெருங்கிய முறையில் இயங்கக் கூடிய ஒரு நிறுவனமாக இலங்கை மின்சார சபையை பரிவர்த்தனை செய்வதுதான் எமக்கு தேவை’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
சிற்றம்பழம் ஏ கார்டினெர் மாவத்தை எனும் முகவரியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபை தலைமை அலுவலக வளாகத்திற்கு இன்று (22) காலையில், திடீர் அவதானிப்பு விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
இந்த அவதானிப்பு விஜயத்தின் போது அமைச்சர் அதிக கவனம் செலுத்தியது இலங்கை மின்சார சபையின் தொலைபேசி நிலையங்களின் இயக்கச்செயற்பாடு பற்றியாகும். அது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்……
‘இந்த தலைமை அலுவலகத்திலுள்ள பழுதுபார்ப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் பணிகள் ஆகியவற்றை கூடுமான விரைவில் மேற்கொள்ளும்படி இந்த சந்தர்ப்பத்தில் உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்துகின்றேன். அதே போன்று, இலங்கை மின்சார சபையின் தொலைபேசி நிலையத்தின் பணிகளை மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொண்டு, அதனூடாக மின்சார நுகர்வோருக்கு கூடுமான வரையில் மிகவும் நெருங்கிய சேவைகளை வழங்கக் கூடிய ஒரு நிறுவனமாக இலங்கை மின்சார சபையை பரிவர்த்தனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் நிமித்தம், தற்பொழுதிருக்கின்ற வசதிகளுக்கு மேலதிகமாக நவீன வசதிகளையுடைய நவீனப்படுத்தப்பட்ட தொலைபேசி நிலையத்தை ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதியாகும் போது திறந்து வைக்க நாம் எதிர்பார்க்கின்றோம்’ எனவும் கூறினார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நாரஹேன்பிட்ட பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்ட இ.மி.ச. புதிய அலுவலக வளாக நிர்மாணப் பணிகள் இன்று வரை நிறைவு செய்யப்படாதிருப்பதால், அவற்றை மேற்கொள்வதிலுள்ள ஆற்றல் பற்றி ஆராய்ந்து, விரைவில் அந்தப் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும், நுகர்வோருக்கு பயனுள்ள, வினைத்திறன் வாய்ந்த, தரமான அதே போன்று தொடர்ச்சியான ஒரு மின்சார சேவையை வழங்கும் பொருட்டு இ.மி.ச. பதவியணியினரினதும் தேவைகளையும் வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டியிருப்பதால், உத்தேச புதிய அலுவலக கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.