Posted by superadmin in Latest News
- இலங்கையின் வர்த்தகத் துறையில் அமெரிக்காவின் விஷேட கவனம்
- மின்சக்தித் துறையிலும் மற்றும் வர்த்தகத் துறையிலும் முதலிடுமாறு அமெரிக்காவுக்கு தாராளமான அழைப்பு
எதிர்காலத்தில் இலங்கைக்கு மட்டுமன்றி முழு உலக நாடுகளுக்கும் ஏற்படக் கூடிய சக்தி நெருக்கடிக்கு நிலையான தீர்வுகளைக் காணுதல் மற்றும் இலங்கையை உலக நாடுகளுக்கு மத்தியில் முதன்னிலை அடையச்செய்தல் ஆகிய நோக்கில், அமெரிக்காவின் தூதுவர் அலையினா டெப்லிட்ஷ் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார்.
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு வளாகத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் விஷேடமான முக்கிய பல விடயங்கள் பற்றி இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சனத்தொகை, தொழில் நுட்ப வளர்ச்சி என்பவற்றின் காரணமாக உலகத்தில் மின்சாரத்திற்கான கேள்வி பிரமாண்டமான அளவில் அதிகரித்துள்ளதால், எம்மிடமுள்ள மட்டுப்பட்டளவான சக்தி வளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும், எதிர்வருகின்ற ஒரு சில ஆண்டுகளில் உண்மையாக மின்சாரத்திற்கான கேள்வியைப் பூர்த்தி செய்யும் பிரச்சினை நிச்சயமாக எழும் எனவும், பிரச்சினைக்குரிய அத்தகைய நிலைமையிலிருந்து மீளவேண்டுமானால், நாம் நிச்சயமாக நிலையான ஒரு தீர்வைக் காண வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருனாநாயக்க கூறினார். ஆகையால், இதன் நிமித்தம் இலங்கை மீளப்புதுப்பித்தகு சக்தி மூலங்களின் பால் நகர்ந்துள்ளது எனவும் கூறிய அமைச்சர், சூரிய சக்தி, காற்று சக்தி முதலிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களினூடாக இலங்கை ஏற்கெனவே கணிசமான ஒரு முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனவும் சுட்டிக் காட்டினார்.
இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அமெரிக்காவின் தூதுவர், மின்சார விநியோகத்தை பொறுத்த வரையில் ஏனைய நாடுகளை விடவும் இலங்கை முன்னிலையிலுள்ளது என சுட்டிக் காட்டினார். இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாடு மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் இவ்வாறு விஷேட கவனத்தை செலுத்துவது, ஒரு நாடு என்ற வகையில் மேற்கொள்ளப்படுகின்ற ஒரு விஷேட செயற்பாடாகும் எனவும், அதனூடாக ஒரு நாடு என்ற ரீதியில் தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கும் மற்றும் அபிவிருத்தி பாதையில் பயணிப்பதற்கும் இலகுவாக அமையும். அதே போன்று, இலங்கை ஏற்கெனவே பின்பற்றி வருகின்ற சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி உற்பத்தி நடவடிக்கைகளில் தான் விஷேட கவனம் செலுத்தியதாகவும், அந்தத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளில் தனது நாட்டு முதலீட்டுத் தரப்புகளை ஈடுபடுத்தக் கூடிய சாத்தியம் இருக்கின்றது எனவும் கூறினார்.
அதே போன்று, இலங்கை இயற்கை அழகும், இனிமையும், எளிலும் பொருந்திய ஒரு நாடு என்பதால் வெளிநாட்டவர்களின் விஷேட கவனம் ஈர்க்கப்படுகின்றது. ஆகையால், அதனூடாக பல வர்த்தக வாய்ப்புகளை முன்னெடுக்க முடியும் எனவும் கூறிய தூதுவர், இலங்கையின் கலாசார மரபுரிமைகளுக்கும் மற்றும் அழகியலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாத தொழில்முயற்சிகளை தேடிக்கண்டறிந்து, அத்தகைய தொழில்முயற்சிகளுக்கு அமெரிக்காவின் முதலீட்டு வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவும் உடன்பட்டார்.
அமெரிக்காவின் தூதுவரினது மேற்குறித்த கருத்துக்கள் தொடர்பில் நன்றியை தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க, தனது நாட்டின் தொழில்முயற்சிகள் மற்றும் மின்சக்தித் துறை என்பன தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும், அதனூடாக, அமெரிக்காவுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற இராஜதந்திர உறவுகளையும், நட்புறவுகளையும் வலுப்படுத்த தான் எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிந்து, தனது நாட்டில் முதலீடு செய்யுமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு தாராளமாக அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.