21 0

Posted by  in Latest News

  • கெரவலப்பிட்டிய 300 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய மின்னுற்பத்தி நிலையத்திற்கான கேள்வி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது முற்றிலும் வெளிப்படைத்தன்மையிலாகும்.
  • மீண்டும் டீசல் பீதிக்கு ஆளாகுவதா, இல்லையென்றால் எல்.என்.ஜீ. ஊடாக புதிய ஒரு முறைமையை உருவாக்கி செயல்படுவதா என தீர்மானிக்க வேண்டும்.
  • விலையை அதிகரிப்போம் என்று சொல்லுகின்ற விலைச்சூத்திரத்திற்கு நான் இடமளிக்கப் போவதில்லை.
  • நுகரவோருக்கு ஏதாவது நன்மையை வழங்கக் கூடிய சாத்தியம் இருந்தால், அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்க வேண்டும்.

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

மீண்டும் டீசல் பீதிக்கு ஆளாகுவதா, இல்லையென்றால் எல்.என்.ஜீ. ஊடாக புதிய ஒரு முறைமையை உருவாக்கி செயல்படுவதா என தீர்மானிக்க வேண்டும். நீரிலிருந்து ரூ. 3.00 – 3.50, சிறிய நீர் வலுக் கருத் திட்டத்திலிருந்து ரூ.10.00 – ரூ.11.00, நிலக்கரியிலிருந்து ரூ.11.00 – 12.00, எல்.என்.ஜி. வாயுவிலிருந்து ரூ. 14.00 – ரூ.16.00, டீசலிலிருந்து ரூ.23.00 – ரூ.60.00 என்ற அளவுகளில் நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு செலவு செய்கின்றோம். இது தான் உண்மையான நிலை. நாங்கள் செய்வது நுகர்வோருக்கும், நாட்டிற்கும் நல்ல விடயங்கள். எனினும், உண்மையான நிலையை வேறுபடுத்திக் கூறும் ஒருசிலர் இருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. எனக்கு தேவையும், உள்நாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பளிப்பதாகும். இதனை சீனாவுக்கு பெற்றுக் கொடுப்பது தவறு. எமது நாட்டில் பெற்றுக்கொள்ளக் கூடிய எல்லாவற்றையும் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, அந்த வாய்ப்பை உள்நாட்டு நிறுவனங்களுக்கு அளிப்பதுதான் எனக்கு தேவை. எனினும், நிலைமை சரியாக இருக்க வேண்டும்” என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க கூறினார்.

இன்று (21) முற்பகல் அமைச்சு வளாகத்தில், கெரவலப்பிட்டிய 300 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய ஒன்றிணைந்த இரட்டைச் சூழற்சி மின்னுற்பத்தி நிலையத்திற்கான கேள்வி மனு ஒப்பந்தம் வழங்கல் தொடர்பாக நடைபெற்ற திறந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க,

“அறியாத ஒருவனாக என்னால் வேலை செய்ய முடியாது. இது இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான ஒரு கம்பனி என்ற வகையில்தான், இந்த கேள்வி மனு ஒப்பந்தத்தினூடாகவே, கூடுமான விரைவில் பெற்றுக் கொள்ள தேவை என்பதால்தான் நாம் இந்த விடயத்தை அமைச்சரவைக்கு முன்வைத்தோம். நாம் எதனையும் மறைக்கவில்லை. அமைச்சரவையில் இருக்கின்ற அனைவரும் கூறியதும் இது மிகவும் நல்லது, குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும் என்றால், நாம் சட்டமா அதிபரின் அனுமதியை பெறுவோம் என்று. சட்டமா அதிபரும் சொல்லியிருந்தால், நாட்டின் நலன் கருதி இது எடுக்கப்பட்டிருக்கின்றது என்று, இதில் இருக்கின்ற தடங்கல் என்ன. நாம் எதனையும் மறைக்கவில்லை. அமைச்சரவைக்கு முழுமையான விபரங்களை வழங்கினோம். அரசாங்கத்தின் ஆதரவுடன், சட்டமா அதிபரும் இது சரி என்று தீர்ப்பு வழங்கியிருந்தால், அந்த பயணத்தை எம்மால் செல்ல முடியும். அப்போது எங்களுக்கு இருப்பது, கூடுமான விரைவில், முடியுமான அளவு குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகும். அதிக செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற இடங்களை மூடிவிட வேண்டும். குறைந்த செலவில் உற்பத்தி செய்யக் கூடியவற்றை, ஏன் அதிக விலைக்கு வாங்க வேண்டும். இதனை மேலும் செய்வது ஒரு பாவச்செயலாகும். இதுதான் உண்மையான நிலை. என்னைப் போல் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் மற்றும் பாராளுமன்றத்திற்கும் தேவைப்படுவது நுகர்வோருக்கு சலுகையை வழங்குவதாகும்.

அடுத்த ஆண்டாகும் போது நுகர்வோருக்கு ஏதாவது நன்மையை முடியுமானால், அதைத்தான் நாம் செய்ய முயற்சிக்க வேண்டும். இது நாம் தனியாக எடுத்த தீர்மானமல்ல. இலங்கை மின்சார சபையை முன்னெடுத்துச்செல்வதற்கு நடவடிக்கை எடுப்பது எமது பொறியியலாளர்கள். நாம், அவர்களுடன் கலந்துரையாடித்தான் இதையெல்லாம் தீர்மானிக்கின்றோம்.

‘நானும், இராஜாங்க அமைச்சரும் மற்றும் எனது அமைச்சும் ஒன்றிணைந்து எல்லா பிரச்சினைகளையும் கூடுமான வரையில் தீர்த்துவைப்போம். அது அல்லாமல், ஒருவரை அல்லது இருவரை இலக்குக்கொள்வதல்ல செய்ய வேண்டியது. இலங்கை மின்சார சபையின் ஐந்தொகையில் தற்பொழுது 420 பில்லியன் ரூபா நட்டமாகப் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு 27 பில்லியன் ரூபா நட்டம் பதிவாகியிருந்தது. இந்த வருடம் மதிப்பிடப்பட்டிருக்கின்றது, 89 பில்லியன் ரூபா நட்டம் என. முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் எனக்கும் பொறுப்பு இருக்கின்றது, இராஜாங்க அமைச்சருடன் இணைந்து இந்த நட்டத்தை இல்லாமல் செய்வதற்கு. இல்லையென்றால் இதற்கு பலியாகுவது எமது நுகர்வோரே. எல்லா நேரத்திலும், நுகர்வோருக்கு சுமையை திணித்து சரி, விலையை அதிகரிக்க வேண்டும் எனும் விலைச்சூத்திரத்திற்கு நான் இடமளிக்கப் போவதில்லை. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு செலவாகும் செலவைத்தான் குறைக்க வேண்டும். இன்று, 4096 மெ.வொ. ஒட்டுமொத்த சக்தி உற்பத்திக் கொள்திறன் வசதிகள் எமது கைவசமிருக்கின்றன. இந்த சக்தி உற்பத்திக் கொள்திறன் வசதிகளிலிருந்து 14,500 பில்லியன் மின்சார அலகுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மின்சார அலகுகளில், ஒரு மின்சார அலகை உற்பத்தி செய்வதற்கு செலவு செய்யப்படும் செலவு 22.77 ரூபா. நாம் விற்பனை செய்யும் விலை 16.21 ரூபா. இதனால் ஏற்படும் நட்டத்தை இல்லாமல் செய்வதுதான் நாம் செய்ய வேண்டியது. இதனை சட்டபூர்வமாக செய்வது எப்படி என்பதுதான் எமக்கு அவசியம். நாம், அவசரநிலை மின்சாரக் கொள்வனவை நிறுத்தியது ஏன். அதிலிருந்து நாட்டிற்கு நட்டம் ஏற்படுவதால்தான். எனினும், நாம் ஒரு வகையில் சாவாலை பொறுப்பேற்றோம். தப்பித்தவறியேனும், நாம் அவசரநிலை மின்சாரக் கொள்வனவை செய்திருந்தால், அதுதான் நாட்டிற்கு செய்யும் பெரும் துரோகம். கேள்வி மனுக்களை அழைத்தல் விடயத்திற்கு, பல வருடங்கள் கழிகின்றன. யார் அதற்கு பலியாகுவது. எமது அப்பாவி மக்கள். இந்த அவசரநிலை மின்சாரக் கொள்வனவுத் தேவை அடுத்த வருடத்திலும் எழும். அதனை இல்லாமல் செய்வதற்குத்தான் நாம் நினைத்தது’ என அமைச்சர் கூறினார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ். பட்டகொட,

“இலங்கையில் பின்பற்றப்படும் கேள்வி நடைமுறை பற்றி எல்லோருக்கும் தெரியும். நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறை இருக்கின்றது. இந்த அமைச்சின் மூலம் கேள்வி மனுக்கள் அழைக்கப்படும் போது, நிதி அமைச்சினால் ஒரு தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு நியமிக்கப்படுகின்றது. அமைச்சில் கேள்வி மனு பற்றிய ஒரு குழு இருக்கின்றது. இந்த அமைச்சுடன் சம்பந்தப்படும் கேள்வி மனுக்கள் அழைக்கப்படும் போது, அந்தக் குழுவின் தலைவராக இருப்பது நானல்ல. நான் அதில் ஒரு உறுப்பினர் மட்டுமே. இந்தக் கேள்வி மனுக்கள் அழைக்கும் நடபடிமுறை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, சீலாரத்ன தேரர் அவர்கள் ஒரு வழக்கை தாக்கல் செய்தார்கள், நான் எனது கம்பனிக்கு அந்தக் கேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்கப்போகுகின்றேன் என்று. ஊடகங்களில் பேசப்பட்டது இந்த கேள்வி மனு ஒப்பந்தம் மோசடியானது, சர்வதேச போட்டித்தரப்புகளை அழைத்து எமது கம்பனிக்கே அந்த கேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்கப்போவதாக. அது மட்டுமன்றி செம்சுன், சமிட், சொஜிக் போன்ற கம்பனிகளும் என்னை குற்றஞ்சாட்டின. இந்தக் கேள்வி மனு ஒப்பந்தத்திற்கு ஆரம்பத்திலிருந்தே, ஊடகங்களினூடாக தடைகள் போடப்பட்டு வந்தன. இந்தக் கேள்வி மனு ஒப்பந்தத்திற்கு இறுதியில் தகுதிபெற்றது செம்சுன் கம்பனியே. அந்த நேரத்தில், லக்தனவி கேள்வி மனு பற்றிய குழுவை கடுமையாக விமர்சித்து, கஷ்டத்தில் போட்டது. முதலில் கூறப்பட்டது லக்தனவி நிறுவனத்திற்கு வழங்கப்படப்போகுகின்றது என்று. அடுத்ததாக கூறப்பட்டது செம்சுன் கம்பனிக்கு வழங்கப்படப்போகுகின்றது என்று. இந்த இரண்டரை வருடமும் கழிந்தது இந்தப் பிரச்சினையால்தான். தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு இரண்டு தடவைகள் லக்தனவி நிறுவனத்தை நிராகரித்தாலும், அதிக காலம் செல்வதால், தொழில் நுட்பக் குழு மீண்டும் அந்தக் கேள்வி மனு ஒப்பந்தத்தை லக்தனவி நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்தது. அந்த நேரத்தில், நானும் மற்றும் கேள்வி மனு பற்றிய குழுவினரும் சிபாரிசு செய்தோம், லக்தனவி நிறுவனத்திற்கு குறித்த அந்தக் கேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்குமாறு. நானும் சிபாரிசு செய்திருந்தும் இந்தக் குற்றம் தற்பொழுது என் மீது சாட்டப்படுகின்றது. தொழில் நுட்பக் குழு இரண்டு தடவைகள் லக்தனவி நிறுவனத்திற்கும், அதே நேரம் தொழில் நுட்ப உட்குழு இரண்டு தடவைகள் windforce நிறுவனத்திற்கும் வழங்குமாறு கூறுவதால், அமைச்சர் அடங்கலாக அமைச்சரவை தீர்மானித்தது, அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கு சாத்தியம் இருந்தால் நல்லது என்று. அவ்வாறில்லையெனில், 2021 ஆம் ஆண்டில் வரவுள்ள ஒரு மின்னுற்பத்தி நிலையமும் எமக்கு இல்லாது போகும். இது தான் உண்மையான நிலை” எனவும் குறிப்பிட்டார்.

ஜேர்மனியின் தூதுவராலயப் பிரதிநிதிகள், அமெரிக்காவின் தூதுவராலயப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, windforce மற்றும் LTL முதலிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரும் அழைப்பின் பேரில், இந்தத் திறந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required