18 0

Posted by  in Latest News

‘நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் வேலைத்திட்டத்திற்கு நகர வேண்டும்……………….’

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்
‘எமக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று கதைத்தாலும், உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளதா என்றால் அது கேள்விக்குறியது. சுதந்திரம் என்ற இந்த சொற்பதத்தை பிரயோகித்து, ஒரு சில சுயநலவாதிகள் தாண்தோன்டித்தனமாக நடந்து கொள்கின்றனர். எமக்கு அவசியம் யாதெனில் நாட்டிற்காக குரல் எழுப்பபக் கூடிய சிறந்த தலைவர்களை உருவாக்குவதுதான். நாம் நிறைவேற்று அதிகாரத்தை உருவாக்கி, 71 ஆண்டு காலமாக இந்த நாட்டை ஆட்சிசெய்துள்ளோம். அன்று, 1978 ஆம் ஆண்டில் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை கொண்டுவரப்பட்டது இந்த நாட்டிற்கு பொருத்தம் என்று நினைத்ததால்தான். எனினும், ஜே.ஆர். ஜயவர்த்தன, லலித் அத்துலத் முதலி, காமினி திஸாநாயக்க, ரனசிங்க பிரேமதாச, ரனில் விக்ரமசிங்க ஆகிய அனைவரும் இது நல்லது என கூறினாலும், அதிக காலம் செல்ல முன்னர் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அவ்வளவு நல்லதல்ல என எல்லோரும் கூறத் தொடங்கினர். இந்த முறைமையை ஒழிக்க வேண்டும் என்ற அபிப்பிராயத்திற்கு வந்தனர். இன்றும் நாம் கூறுவது, பொது மக்களுக்கு, இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஒரு வேலைத்திட்டத்திற்கு நகர வேண்டும் என்றுதான். இதனால் நிகழ்வது ஒருவரை சுற்றி வலம் வருவது மாத்திரம்தான். ஆகையால், நாம் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும். ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமருக்கும் இதனை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது. நான் இந்த நேரத்தில், எதிர்கட்சிகளிடமும் கேட்டுக் கொள்வது யாதெனில், சகல கட்சிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நாட்டிற்கு தேவையான ஒரு பாராளுமன்ற முறைமைக்கு, அதன் நிமித்தம் தேவையான பெறுமானங்களை சேர்த்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த ஒன்றுபடுங்கள் என்றுதான். எமக்கு தேவை அரசியலமைப்பு அல்ல. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து, இந்த நாட்டு மக்களின் உள்ளங்களில் நிலைத்திருக்கக் கூடிய ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதுதான். நான் மீண்டும் வலுயுறுத்துவது என்னவென்றால், நாம் துரிதமான காரத்திரமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று. தேர்தல் காலங்களில் வந்து, நான் வருவது இந்த முறையை ஒழிப்பதற்கு, மாற்றுவதற்கு என்று மக்களிடம் கூறுவது மட்டுமல்ல. அதனை செயலில் காட்டவும் வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி, அதனூடாக உருவாக்கப்படுகின்ற புதிய ஒரு அரசியலமைப்பினூடாக நாம் தேர்தலை நடத்த வேண்டும். அந்த அரசியலமைப்பு நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, நாட்டின் பௌத்த சமயத்திற்கு முதலிடத்தை வழங்கி, ஏனைய சமயங்களுக்கும் சம அந்தஸ்துகளை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த நாடு ஒரே இடத்தில் தடைப்பட்டு நிற்கின்றது. இந்த நிலைமையை மாற்றியமைக்க, அரசியலில் துரிதமான ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க சுட்டிக் காட்டினார்.

நேற்று (17) ஆம் திகதி மொனராகல் மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 40 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய, தேசிய மின்சார முறைமைக்கு இணைக்கப்படவுள்ள சூரிய சக்தி உற்பத்திப் பேட்டையின் முதல் கட்டப் பணிகளை அவதானிக்கும் விஜயத்தில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.

‘இன்று ஒவ்வொருவரும் கூறுவது நான் ஜனாதிபதியாகுவேன் என்று. அது அல்ல அவசியம். வாக்குறுதியளித்து வருவது ஏற்கெனவேயிருக்கின்ற அரசியலமைப்பை மாற்றுவேன் என்று. ஜனாதிபதி அதனை செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். பிரதமருக்கு அந்த ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், எதிர்கட்சியிலுள்ளவர்களில் ஒரு சிலரின் தேவையை மாத்திரம் கருத்திற் கொள்ளாது, இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து, நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் செய்ய வேண்டியதை நாம் செய்ய வேண்டும். காமினி திஸாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்கள் அவர்களின் உயிர்களைத் துறந்ததும் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்றுதான். அவர்கள், அன்று அறிந்திருந்தார்கள், இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டமை ஒரு சிலருக்கு நல்லதாக இருந்தாலும், இந்த முறை நாட்டிற்கு அவ்வளவு பொருத்தமில்லை என்று. இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினூடாக நல்ல விடயங்கள் செய்யப்பட்டாலும், அநேகமானோர் செய்தது, நாட்டிற்கு பாதகமான விடயங்களே. நாம் அனைவரும் இந்தத் தடவை தேர்தலில் இறங்கியது, இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க என்று கூறி. எங்களை விட்டும் மறைந்த வணக்கத்திற்குரிய சோபித்த தேரர் அவர்கள் கூறியதும் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்றுதான்’எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a comment

* required