17 0

Posted by  in Latest News

நிலக்கரி தொடர்பான கேள்வி மனு நடடிவக்கையினூடாக 725 மில்லியன் ரூபா நிதியை எம்மால் சேமிக்க முடிந்தது.
ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

‘எதிர்காலத்தில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நிலக்கரியை கொள்வனவு செய்யும் ஒரு முறையியலை நாம் தயாரித்துள்ளோம்…………,

கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
‘இந்த ஆண்டு சனவரி மாதத்தில், நாம் அறிந்த வகையில், மின்சாரத்தை கொள்வனவு செய்யும் விடயத்தை, இறுதி வரையும் மேற்கொள்ளாமல், கேள்வி மனுக்கள் அழைக்கப்பட்டமை பலருக்கு ஒரு பிரச்சினையாக தென்பட்டது. நாம் செய்தது கேள்வி மனுக்களை அழைத்தமைதான். இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களுடனும் மற்றும் பொது முகாமையாளருடனும் கலந்துரையாடி, அவர்களுக்கு பிரச்சினைகள் இருந்தாலும், நாம் உத்தேசித்திருந்த அவசரநிலை மின்சாரக் கொள்வனவை முதல் தடவையாக நிறுத்தினோம்’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க கூறினார்.
தற்போது மின்சக்தித் துறையில் காணப்படுகின்ற பிரச்சினைக்குரிய பல விடயங்கள் பற்றி ஊடகங்களுக்கு அறியப்படுத்தும் பொருட்டு அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க….
‘நான் இந்த அமைச்சை பொறுப்பேற்று இற்றைக்கு 52 நாட்கள். இந்த 52 நாட்களுக்குள், எமது இந்த அமைச்சை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் ஒரு வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நான் இந்த அமைச்சை பொறுப்பேற்ற போது, இ.மி.ச. 2019 ஆம் ஆண்டு 8700 கோடி நட்டம் என்றுதான் பதிவாகியிருந்தது. நான் ஒரு போதும் நிதி அமைச்சருக்கு சுமையாக இருக்க முடியாது. ஆகையால், இந்த நட்ட நிலைமையை இலாபமாக பரிவர்த்தனை செய்யும் பொருட்டு நாம் பேச்சுவாரத்தைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதே போன்று, மின்சார நுகர்வோரை பாதிக்கின்ற வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை எனவும் அன்று கூறினேன். இன்றும் கூறுகின்றேன், எங்களது முதல் கேள்வி மனுவாக இருந்தது யாதெனில் நிலக்கரி தொடர்பான கேள்வி ஒப்பந்தமாகும். அந்தக் கேள்வி மனு ஒப்பந்தம் வழங்கப்பட்டதனூடாக 725 மில்லியன் ரூபா நிதியை எம்மால் சேமிக்க முடிந்தது.

அவசரநிலை என்று ஒவ்வொரு வருடமும் கதைப்பது ஒரு வேடிக்கையான விடயம். நாம் அத்தகைய நிலையை இல்லாதொழிக்க வேண்டும். 2012 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தேசிய மின்சார முறைமைக்கு மின்சாரத்தை இணைக்கும் எந்த ஒரு மின்னுற்பத்திக் கருத் திட்டமும் தாபிக்கப்படவில்லை. ஆகையால், கூடுமான விரைவில், குறைந்த ஆகுசெலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு வழியை நாம் தேடிக்கண்டுகொள்ள வேண்டும். இலங்கை மின்சார சபையின் நட்டத்திற்கு காரணமான பல மின்னுற்பத்தி இயந்திரங்கள் இருக்கின்றன. இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான களணிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து 50.46 ரூபா செலவில் ஒரு மின்சார அலகு உற்பத்தி செய்யப்படுகின்றது. வடக்கிலும் மற்றும் அதிலுள்ள ஏனைய பகுதிகளிலும் 68.00 ரூபா செலவில் ஒரு மின்சார அலகு உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆகையால் தான், நாம் சிந்தித்தோம், இவ்வாறு அதிகளவில் செலவு செய்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி, அதிலும் பார்க்க குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு. இதனூடாக எதிர்பார்க்கப்படுவது இ.மி.ச. நட்டத்தைக் குறைப்பதற்காகும்.
2868 மெ.வொ. மின்சக்தியை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்கள் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமாகவுள்ளன. 1300 மெ.வொ. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அத்தகைய மின்னுற்பத்தி நிலையங்கள் தனியார் துறைக்கு சொந்தமாகவுள்ளன. இந்த அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்தும்  4056 மெ.வொ. மின்சார உற்பத்தி கிடைக்கின்றது. ஒரு மின்சார அலகை உற்பத்தி செய்வதற்கு மொத்தம் 22.76 ரூபா செலவு செய்யப்படுகின்றது. எனினும், அவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு மின்சார அலகு 16.26 ரூபா விலையில் விற்பனை செய்யப்படுவதால் ஏற்படும் இடைவெளிதான் நாம் அடைகின்ற நட்டம். இந்த நட்டத்தை குறைப்பதுதான் எனதும், எனது அமைச்சின் செயலாளரதும் மற்றும் இலங்கை மின்சார சபையினதும் ஒரேயொரு அபிலாஷை. இதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இந்த நட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ள இரண்டு மின்னுற்பத்தி இயந்திரங்களை இனங்கண்டு, அதற்கான பரிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின், இன்று இ.மி.ச. அனுபவிக்கின்ற இந்த நட்டத்தை இலாபமாக பரிவர்த்தனை செய்ய முடிந்திருக்கும். அவ்வாறு செய்யாததால் வந்த விளைவுதான் ஆறாயிறுத்து நூறு கோடி நட்டம். எமது அரசாங்கத்திற்கு தேவை என்னவெனில், பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில், விலைகளை குறைக்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்குவதாகும். அதே போன்று, இலங்கை மின்சார சபையை பாதுகாப்பதுமாகும். அதன் நிமித்தம் இ.மி.ச. ஊழியர்களுடன் கலந்தரையாடி, சுமுகமான ஒரு பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதை கூறிக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
‘நான் இதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர், ஒ ருகுழுவை நியமித்து, தயவான ஒரு வேண்டுகோளை விடுத்தேன், இந்த அமைச்சிலுள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுமாறு. அந்த நேரத்தில் பலர் சந்தேகப்பட்டனர். எனினும், நாம் இன்று செய்துகாண்பித்துள்ளோம் அன்று நாம் கூறியதை. ஓரிருவராவது இந்த அமைச்சில் 24 மணித்தியாலங்களும் இருந்தாவது சரி, உண்மையான விடயத்தை அல்லது சரியான விடயத்தை அறிந்துகொண்டால், அரசியலை இலக்காகக்கொண்டு ஓரிருவர் செய்கின்ற இந்த அநியாயத்தை நியாயமாக பரிவர்த்தனை செய்துகொள்ள முடியும் என்று’ அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட…..
‘இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், நிலக்கரியின் கொள்வனவில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இது உலகத்தில் காணப்படுகின்ற மிகச்சிறந்த கொள்வனவு முறையாக மாற்றியமைக்கப்பட்டது.  சகல விநியோகத் தரப்புகளும் பதிவு செய்யப்பட்டன. இது நீண்டகாலம் மற்றும் குறுங்காலம் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு 5 கேள்வி மனு ஒப்பந்தம் என்ற நிலைக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டது. போட்டி குறைவடைந்துள்ளது. தற்பொழுது எந்த ஒரு நபருக்கும் தன்னை விநியோகத் தரப்பாக பதிவு செய்து கொள்ளலாம். தற்பொழு 24 விநியோகத் தரப்புகள் இருக்கின்றன. இது வரை, எந்த விதமான பிரச்சினையுமின்றி நாம் 14 கேள்வி மனு ஒப்பந்தங்களை வழங்கியுள்ளோம். கடந்த நாட்களில் நாம் இந்துனீசியாவின் தறைமுகத்தையும் 25 -வது விநியோகத் தரப்பாக இணைத்துக் கொண்டோம். ஆகையால்,700 மில்லியன் ரூபா விலை குறைவடைந்தள்ளது. எங்களுடைய நோக்கம் முடியுமான வரை போட்டியை அதிகரித்து, விலையை குறைப்பதாகும். ஆகையால், இந்த மாதத்தில் ரஷ்யாவின் வெனினோ துறைமுகத்தையும் நாம் இணைத்துக் கொண்டோம்.  26-வது விநியோகத் தரப்பாக வெனினோ துறைமுகம் இணைத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, அடுத்த கேள்வி மனு அழைத்தலின் போது 11 மில்லியன் ரூபா விலை குறைவடைந்தது. வெனினோ துறைமுகம் பதிவு செய்யப்பட்டது மட்டுத்தான், ஊடகங்களில், அமைச்சர் ரஷ்யா சென்று கேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்கி விட்டார், அதனால் 6000 மில்லியன் நட்டம் என்று பேசப்பட்டது.  இந்த துறைமுகம் உள்ளீர்க்கப்பட்டதனால் மட்டும் 700 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்தது. இலங்கையில் ஒரு நாளும் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாத வகையில் நிலக்கரியைக் கொள்வனவு செய்யும் ஒரு முறையியலை நாம் தயாரித்துள்ளோம் என நான் மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் திரு சுலக்ஷன ஜயவர்த்தனவும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

Leave a comment

* required