15 0

Posted by  in Latest News

ஊடக அறிவித்தல்

கெரவலப்பிட்டிய 300 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய எரிபொருளிலில் இயங்கும் ஒன்றிணைந்த இரட்டைச் சுழற்சி இயற்கை எரிவாயு சக்தி மூல மின்னுற்பத்தி நிலையத்திற்கான கேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்குதல்

1. இலங்கை மின்சார சபையினது சகல மின்னுற்பத்தி நிலையங்களும் நிர்மாணிக்கப்படுவது 20/2009 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தினது ஏற்பாடுகளின் பிரகாரம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட 20 ஆண்டுகளுக்கான நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்திற்கு அமையவாகும். குறித்த நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தில் உள்ளடங்காத எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையத்தையும் நிர்மாணிக்க முடியாது.

2. இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம், எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையத்தையும் போட்டிக் கேள்வி நடைமுறையை பின்பற்றி கேள்வி மனுக்கள் அழைக்கப்படாமல் நிர்மாணிக்க முடியாது. 1 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய சூரிய சக்தி மூலமான மின்னுற்பத்தி நிலையமாக இருந்தாலும் கூட, அத்தகைய ஒரு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்க முடிவதும் உரிய கேள்வி நடைமுறையை பின்பற்றி கே்ளவி மனுக்கள் அழைக்கப்படுவதன் மூலமாக மாத்திரமே. அவ்வாறில்லையெனில், அமைச்சரவை அனுமதித்த விலையின் கீழ் தேவையான மின்சாரம் கொள்வனவு செய்யப்படும்.

3. 2019 ஆம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கென உத்தேசிக்கப்பட்டுள்ள 300 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய இயற்கை எரிவாயுவில் இயங்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு, சட்டபூர்வமான முறையில், சர்வதேச கேள்வி மனுக்கள் 2016.11.16 ஆம் திகதி அழைக்கப்பட்டன. மிகவும் அதிகளவான ஒரு போட்டி ஏற்படுத்தப்பட்டமையினால், இந்தக் கேள்வி மனு ஒப்பந்தம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வதற்கு ஏறக்குறைய இரண்டு வருட காலம் சென்றுள்ளது.

4. இலங்கை மின்சார சபையின் கேள்வி மனு அழைத்தல் தொடர்பான சகல விடயங்களும் தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழு, கொள்வனவு பற்றிய குழு, கொள்வனவு பற்றிய மேன்முறையீட்டு சபை, கொள்வனவு பற்றிய ஆணைக்குழு, நிதி அமைச்சு, அமைச்சரவை, உயர் நீதிமன்றம் என்பன போன்ற சகல நிறுவனங்களினதும் சிபாரிசுகளுக்கு/அனுமதிகளுக்கு அல்லது மேற்பார்வைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

5. ஆகையால், இந்தக் கேள்வி மனு ஒப்பந்தம் தொடர்பில், 08 கேள்வி மனுக்கள் கிடைத்திருந்தன. தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசுகளையும், கேள்வி மனு பற்றிய குழுவின் சிபாரிசுகளையும், கொள்வனவு பற்றிய மேன்முறையீட்டு சபையின் சிபாரிசுகளையும், கொள்வனவு பற்றிய ஆணைக்குழுவின் சிபாரிசுகளையும், நிதி அமைச்சின் சிபாரிசுகளையும், பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவைக் குழுவின் சிபாரிசுகளையும், அமைச்சரவையின் சிபாரிசுகளையும் கருத்திற் கொண்டு, இந்தக் கேள்வி மனு ஒப்பந்தத்தை  GCL, Windforce & RenewGen எனும் கம்பனிக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6. இந்தக் கம்பனிக்கு, 2019 ஆம் ஆண்டில் நிர்மாணிப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான கேள்வி மனு ஒப்பந்தத்தை, 2019 ஆம் ஆண்டு வரை வழங்க முடியாது போனமை மற்றும் பின்பற்றுவதில் எழுந்த சிக்கல்வாய்ந்த செயன்முறைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய மின்சாரத்திற்கான பற்றாக்குறை முதலிய அம்சங்களை கருத்திற் கொண்டு, குறித்த மின்னுற்பத்தித் திட்டத்திற்கு இணங்க, 2021ஆம் ஆண்டில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 300 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய இயற்கை எரிவாயுவில் இயங்கும் குறித்த மின்னுற்பத்தி நிலையத்திற்கான இந்தக் கேள்வி மனு ஒப்பந்த விடயத்தில் பங்குபற்றிய லக்தனவி நிறுவனத்திற்கு, குறித்த கேள்வி மனு ஒப்பந்தத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த 02 தீர்மானங்கள் எட்டப்பட்ட போது, கடந்த 02 வருட காலத்தினுள் தொழில் நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசுகளும், கேள்வி மனு பற்றிய குழுவின் சிபாரிசுகளும், கொள்வனவு பற்றிய மேன்முறையீட்டு சபையின் சிபாரிசுகளும், கொள்னவு பற்றிய ஆணைக்குழுவின் சிபாரிசுகளும், நிதி அமைச்சின் சிபாரிசுகளும், பொருளாதார முகாமைத்துவம் பற்றிய அமைச்சரவைக் குழுவின் சிபாரிசுகளும், அமைச்சரவையின் சிபாரிசுகளும் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளன.

7. கொள்வனவு தொடர்பான நடைமுறையினுள், பல குழுக்களின் சிபாரிசுகளை கருத்திற் கொண்டு, மிகவும் நியாயமான முறையில் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் எந்த விதத்திலும் தன்னிச்சையான ஒரு தீர்மானமல்ல. அனைத்துத் தரப்புகளினதும் தேவைகளுக்கு செவிசாய்க்கும் அரசாங்கத்தினது கொள்கையின் காரணமாக, 02 வருட காலமாக, சகல தரப்புகளுக்கும் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய சிறந்த ஒரு தீர்மானமாக இது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

8. இந்தக் கேள்வி மனு ஒப்பந்தம் வழங்கப்பட்ட போது, ஒரு சீன நிறுவனத்திற்கு, அதிக விலையில் அந்தக் கேள்வி மனு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக பல பொய்யான பிரச்சாரங்கள் ஊடகங்களினூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், இந்த அனைத்து பொய்யான பிரசாரங்களையும் அமைச்சு கடுமையாக நிராகரிக்கின்றது.

9. இந்த மின்னுற்பத்தி நிலையங்களில் ஒரு மின்னுற்பத்தி நிலையம் தொடர்பான கேள்வி மனு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது சீனாவுக்கு அல்ல. ஆனால், ஒரு உள்நாட்டு நிறுவனமாகிய GCL, Windforce & RenewGen எனும் நிறுவனம், அமெரிக்காவின் GE கம்பனியிலிருந்து பெறப்பட்ட மின்னுற்பத்தி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் அமெரிக்காவின் ஒரு நிறுவனம், சீனாவின் GCL எனும் கம்பனி ஆகிய மூன்று தரப்புகளும் பங்குகொள்கின்ற ஒரு திட்டத்திற்கு அமையவாகும்.

10. இந்த நாட்டிற்கான அமெரிக்காவின் தூதுவரும் கூட இந்தக் கேள்வி மனு ஒப்பந்தம் நியாயமான முறையில் வழங்கப்பட்டமையிலும் மற்றும் அமெரிக்காவின் ஒரு நிறுவனமாகிய GE கம்பனியின் தொழில் நுட்பத்திலும் தான் நம்பிக்கை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

11. இந்த இரண்டு கேள்வி மனு ஒப்பந்தங்களும் செயற்படுத்தப்பட்டதனூடாக, உள்நாட்டு கம்பனிகளாகிய லக்தனவி நிறுவனம் மற்றும் Wind Force நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும், சீனாவின் கம்பனியாகிய CGL நிறுவனமும், ஜோ்மனியின் கம்பனியாகிய Siemons நிறுவனமும், அமெரிக்காவின் கம்பனியாகிய GE நிறுவனமும் பங்காளர் தரப்புகளாக பங்களித்துள்ளன.

12. இதன் காரணமாக, அதிக விலையில் சீன நாட்டு கம்பனிக்கு கேள்வி மனு ஒப்பந்தம் வழங்கப்பட்டது எனும் பொய்யான பிரச்சாரங்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. போட்டிக் கேள்வி அடிப்படையில் கேள்வி மனுக்கள் அழைக்கப்பட்டு, அதனூடாக ஆகக்குறைந்த நியாயமான கேள்வி விலையில் கேள்வி மனுக்களை சமர்ப்பித்திருந்த பொருத்தமான கேள்வி மனு தாரர் தரப்புக்கே குறித்த கேள்வி மனு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்பதை பொது மக்களுக்கு அறியப்படுத்த விரும்புகின்றேன்.

சுலக்ஷன ஜயவர்த்தன
பணிப்பாளர் (அபிவிருத்தி) மற்றும் ஊடகப் பேச்சாளர்
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு

Leave a comment

* required