13 0

Posted by  in Latest News

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

“சீன அரசாங்கத்துடனான எமது கலாசார உறவுகள் நான்கு நூற்றாண்டுகளுக்கும் பழமை வாய்ந்தனவாகும். எனினும், இலங்கையினதும் மற்றும் சீனாவினதும் செயற்பணி இன்று வர்த்தகத்திற்கு மாத்திரம் மட்டுப்பட்டுள்ளது. இலங்கையின் புவித் தோற்றம் மற்றும் புவியியல் வேறுபாடுகள் முதலிய அம்சங்கள் பல கருத் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பெரிதும் துணைபுரிகின்றன. சீனாவுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளையும் மற்றும் முதலீடுகளையும் ஊக்குவிப்பதில் வர்த்தக கூடகத்தினால் பதினான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டு வருகின்ற பணிகளை பாராட்டிற்கு உட்படுத்த வேண்டும். இலங்கை சீன வர்த்தக முதலீட்டு சபைகளின் நேரடியான வழிகாட்டலில் இலங்கையின் வாழ்க்கைத் தொழில் பயிற்சி நிறுவகம், ஜனாதிபதி செயலகம் என்பவற்றின் நேரடி கண்காணிப்பில், இலங்கை மக்களின் சீன மொழி அறிவுத் திறனை வளர்க்கும் பொருட்டு இந்தக் கருத் திட்டத்தை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத் திட்டத்தினூடாக ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதே எமது குறிக்கோள்” என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க சுட்டிக் காட்டினார்.

நேற்று, கொழும்பு 07 எனும் முகவரியிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கைக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி, இலங்கையிலுள்ள வேலையில்லாத பட்டதாரிகளினதும், அரச ஊழியர்களினதும், தனியார் துறை ஊழியர்களினதும், சுற்றுலா வழிகாட்டுநர்களினதும், சுற்றுலா ஆலோசகர்களினதும் சீன மொழி அறிவை மேம்படுத்தும் நோக்கில், அரச தொழில்முயற்சியாளர்களின் தொழில் வழிகாட்டிகள் திணைக்களத்தின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற தொழில் திறன்கள் மற்றும் இளைஞர் ஊக்குவிப்பு 2023-2019 எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க…,

கடந்த பத்து ஆண்டுகளினுள் இலங்கையில் சீனாவின் முதலீடுகள் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளன. பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, அது உயர் மட்டத்தில் காணப்படுகின்றது. சீனா நேரடியாக பல வெளிநாட்டு முதலீடுகளில் ஈடுபட்டிருப்பது போக்குவரத்து, மின்சாரம், சக்தி முதலியன அடங்கிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலாகும். இங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுவது யாதெனில், இந்து சமுத்திரத்தில்  நிதிகளுக்கும் மற்றும் செயற்பாடுகளுக்கும் கேந்திர நிலையமாக இலங்கையை பரிவர்த்தனை செய்யும் அபிலாஷையை அடைந்து கொள்ளும் பொருட்டு சர்வதேச துறைமுக நகர கருத் திட்டத்தை நிர்மாணிப்பதாகும்.

இலங்கையில் மின்சக்தி உற்பத்தி சம்பந்தமாக சீனத் தொடர்புடைய நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்னுற்பத்திக் கருத் திட்டம் மிகவும் முக்கியமான ஒரு முதலீட்டுக் கருத் திட்டமாகும். அதனூடாக, முழு இலங்கை நாட்டிற்கும் மின்சாரத்தை வழங்கும் கரும பணிக்கு பெரும் உதவி கிடைப்பது நாம் பெற்ற ஒரு வெற்றியாகும்.  பாரியளவில், மூலதன கருத் திட்டங்கள் தொடர்பில் சீனாவின் கருத் திட்டங்களுக்கு எம்மால் அனுசரணை வழங்க முடிந்தமையையிட்டு நான் பெரிதும் பெருமைப்படுகின்றேன். எனினும், நான் குறிப்பாக கவனம் செலுத்துவது சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி ஆகிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களிலாகும். சீன அரசாங்கத்தினால், இது தொடர்பாக முக்கியமான ஒரு பொறுப்புப் பணியை நிறைவேற்ற முடியும் என நான் நம்புகின்றேன். உங்களது விருப்பத்தின் பிரகாரம், உங்களின் வர்த்தக ரீதியான அபிலாஷைகளை நீங்கள் அடைந்து கொள்ளக் கூடிய வகையிலும், சீனாவுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையிலும், மீளப்புதுப்பிக்கத்தகு சக்தித் துறை முதலீடுகளின் நிமித்தம் தங்களை இணைத்துக் கொள்ளவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

சீன மொழியை கதைக்கக் கூடிய ஒரு குழுவினரை இலங்கையில் உருவாக்கும் பொருட்டு ஒரு திட்டத்தை தயாரிப்பது மிகவும் முக்கியமான ஒரு செயற்பாடாகும். எம்மிடம் தற்போதிருக்கின்ற கருத் திட்டங்களையும் மற்றும் உத்தேச கருத் திட்டங்களையும் இதனூடாக இலகுவாக முன்னெடுத்துச் செல்லலாம். அது மட்டுமன்றி இரு நாடுகளுக்கும் இடையில் முதலீடுகளை பாரியளவில் அதிகரித்துக் கொள்ளவும் முடியும். சீன மொழிபெயர்ப்பாளர்களாக, ஆங்கில சீன ஆசியர்களாக தொழில் வாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்கும் ஒரு திட்டத்தை தயாரிப்பதும் மற்றும் இலங்கையின் இளைஞர்களையும் யுவதிகளையும் பணியில் ஈடுபடுத்தக் கூடிய வகையில் சீனாவின் கம்பனிகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றுடன் இணைந்து அத்தகைய இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பயிற்சியளிப்பதும் இந்தக் கருத் திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இதனூடாக, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு கணிசமான நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் என நான் நம்புகின்றேன். அது மட்டுமன்றி வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும் தாராளமாக கிடைக்கும் எனவும் நம்புகின்றேன்” என்றும் கூறினார்.

Leave a comment

* required