Posted by superadmin in Latest News
“ஜனாதிபதி அடங்கலாக எமது அரசாங்கம் இத்தகைய நபர்களை எந்த விதத்திலும் பாகாக்கப் போவதில்லை…”
ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்
“எங்களுடைய இளம் சந்ததியினரை போதைகளுக்கு அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை மட்டுமன்றி நாட்டின் எதிர்காலத்தையும் நாசமாக்கும் இத்தகைய குற்றவாளிகளுக்கு பாதுகாப்பளிப்பது யார் என்று நாம் தேடிப்பார்க்க வேண்டும். நாளைய எதிர்காலத்தில் தேசத்தை ஆளக்கூடிய எமது அப்பாவி இளைஞர் யுவதிகளை நாசமாக்கும் இத்தகைய செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். நான் எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த நாள் முதல், இந்த போதைவஸ்து செயற்பாட்டை ஒழிப்பது தொடர்பில் எனது கவனத்தை செலுத்தி வந்துள்ளேன். கடந்த தேர்தல் காலங்களில், இத்தகைய பிரச்சினையினால் எமக்கு துப்பாக்கி சூடுகள் தீக்கப்பட்டு, பெரும் பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டன. எங்களது நற்பண்புகளுக்கு அழுக்கு ஏற்படுத்தப்பட்டது. ஆகையால், எந்த விதமான மன்னிப்பும் கிடையாது. உலகத்தில் எந்த மூலைமுடுக்குகளில் இருந்தாலும், இத்தகைய குற்றவாளிகளை கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். ஜனாதிபதி அடங்கலாக எமது அரசாங்கம் இத்தகைய நபர்களை எந்த விதத்திலும் பாதுகாக்க போவதில்லை என நான் உறுதியளிக்கின்றேன்” என்று மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க குறிப்பிட்டார்.
இன்று (11) ஆம் திகதி முற்பகல் மேல் மாகாண சபையின் ஆளுநர் அசாத் சாலி அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ சந்திப்பையடுத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். மாகாண சபைகளிலுள்ள பிரச்சினைகளுக்கு தேசிய மட்டத்தில் தீர்வுகாணுதல் மற்றும் அது தொடர்பில் மின்சக்தித் துறையை செயற்படுத்த வேண்டிய விதம் பற்றி ஆராய்ந்து பார்த்தல் முதலிய நோக்கங்களின் நிமித்தம் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க…,
“மாகாண மட்டங்களிலுள்ள பிரச்சினைகளை தேசிய மட்டத்தில் தீர்ப்பதற்கு, மின்சக்தித் துறையின் சார்பாக நாம் செயற்பட வேண்டிய விதம் பற்றி தேடிப்பார்ப்பதற்காகத்தான் இன்று இங்கு வந்தேன். மக்களின் வாழ்வாதார நிலையை கட்டியெழுப்ப, அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை தீர்க்க, பிரச்சினைகளை குறைக்க, கஷ்டங்களையும் மற்றும் அழுத்தங்களையும் குறைக்க இந்த உபாயத்திட்டத்தை தேடுகின்றோம். அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுக்கப்படும் நிதியில் ஏறக்குறைய 25% வீதமான நிதி ஊழல்களாலும் மற்றும் மோசடிகளாலும் வீணாகுவதாக கணக்காய்வாளர் அதிபதி கடந்த தினங்களில் சுட்டிக் காட்டினார். இதனை நான் சொன்னது 2000 ஆம் ஆண்டில். இத்தகைய பிரச்சினைகள் இருக்கின்றன. கணக்காய்வாளர் அதிபதி அத்தகைய ஒரு கூற்றை வெளியிடுவதை நான் பாராட்டுகின்றேன். சொல்வது போலவே அத்தகைய பிரச்சினைகளுக்கு செயல் ரீதியில் தீர்வுகாணுவதும் அவசியமாகும். பிரச்சினைகளை இழுத்தடித்துச் செல்வதல்ல முறை. அத்தகைய பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும். எடுக்க வேண்டிய தீர்மானத்தை உடனடியாக எடுத்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆகையால், பிரச்சினைகள் இருக்கின்ற, மோசடிகள் இருக்கின்ற இடங்களை கண்டறிந்து, அவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா இடங்களிலும் மோசடி என்று மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகின்றது. ஆகையால், கஷ்டப்பட்டு பணியாற்றுகின்றவர்களுக்கும் பிரச்சினைகள் வரும். எனவே, பிரச்சினைகள் இருக்கின்ற இடங்களை சரியாக இனங்காண வேண்டும். இதன் நிமித்தம் நான் அமைச்சு மட்டத்தில் நல்லதொரு தீர்மானத்திற்கு வந்துள்ளேன். அமைச்சுகளில் பிரச்சினைகள் ஏற்படுவது ஏதாவது ஒன்றை செயற்படுத்திய பின்னர்தான். நான் ஊடகங்களுக்கும் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் தாராளாமாக அழைப்பு விடுத்திருக்கின்றேன், எனது அமைச்சில் ஏதாவது மோசடிகள், ஊழல்கள் அல்லது முறைகேடுகள் நிழந்தால், அவை நிகழுவதற்கு முன்னர், அவை பற்றி ஆராய்ந்து பார்த்து செயல்படுமாறு. ஏதாவது ஒன்று நிகழ்ந்த பின்னர் அதற்கு தீர்வுகாணுவதை விடவும், நிகழ்வதற்கு முன்னர் தடுப்பது முக்கியம். ஏனைய அமைச்சுகளிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
எமக்கு ஒரு அரசியலமைப்பு தேவை. இருந்தாலும், எம்மால் அந்த அரசியலமைப்பை பலாத்காரமாக திணிக்க முடியாது. ஆகையால், மக்களினூடாக, மக்கள் எதிர்பார்க்கின்ற அபிலாஷைகளை அடைந்து கொள்ளக் கூடிய வகையிலான ஒரு அரசியலமைப்பை முன்வைக்க வேண்டும். சிங்களவர், தமிழர், பறங்கியர், மலையாளி முதலிய சகல இன மக்களுக்கும், இது எனது நாடு என்று சொல்லிக் கொண்டு, சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தும் ஒரு அரசியலமைப்பைத்தான் உருவாக்க வேண்டும். நாட்டின் ஒருமைப்பாடு, பௌத்த சமயத்திற்கு முதலிடம் வழங்குதல், மற்றும் ஏனைய சமயங்களுக்கும் சம அந்தஸ்துகளை வழங்குதல் போன்ற விடயங்கள் உள்ளடங்குவது அவசியமாகும். சுயநலவாதிகளினால், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை ஏற்படுத்த, இன்று இது ஒரு அடிப்படையாக, இந்த விடயம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.