Posted by superadmin in Latest News
- திடீர் சோதனையிடுகைகளை மேற்கொண்டதனூடாக வருமானம்130 மில்லியன் ரூபாவை விஞ்சியது
மின்சாரத்தை களவாக பாவித்த 2522 நபர்களை, இ.மி.ச. விஷேட திடீர் சோதனையிடுகைப் பிரிவின் மூலம் 2018 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளின் பயனாக சட்டத்தின் முன் நிறுத்த முடிந்துள்ளது. அதனால் கிடைத்த மொத்த வருமானம் 130,285,824.83 ரூபா அளவில் இருக்கும் என இலங்கை மின்சார சபையின் விஷேட சோதனையிடுகைப் பிரிவு தெரிவிக்கின்றது. இதில் 120,134,324.83 ரூபா இ.மி.ச. நஷ்டஈடாகவும், 10,151,500.00 ரூபா நீதிமன்றக் கட்டணமாகவும் அறிவிடப்பட்டுள்ளன.
மின்சார மாணிவாசிப்பு கருவிகளை மாற்றியமைத்து மின்சாரத்தை மோசடியாக பெற்றமை தொடர்பில் 2269 சம்பவங்களும் மற்றும் மின்சார மாணிவாசிப்பு கருவிகளுக்கு கொழுக்கிகளை திணித்து, சட்டமுறையற்ற விதத்தில் மின்சாரத்தை பெற்றமை தொடர்பில் 253 சம்பவங்களும் 2018 ஆம் ஆண்டு இ.மி.ச. விஷேட திடீர் சோதனையிடுகைப் பிரிவின் மூலம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புகளினூடாக கண்டறியப்பட்டுள்ளன.
இன்று, ஒட்டுமொத்தமாக, மக்களுக்கு 100% வீத மின்சார உரித்தை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. இதனை சட்டமுறையான ஒரு உரிமை என கருதி, நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் பெற்றுக் கொடுப்பது விடய அமைச்சரினதும் மற்றும் விடய அமைச்சினதும் குறிக்கோளாகும். அதிகளவு பற்றாக்குறையும் மற்றும் அதிக எரிபொருள் விலைகள் நிலவிய போதிலும், தொடர்ந்தும் மின்சாரத்தை விநியோகிக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. இத்தகைய ஒரு நிலையில், சட்டமுறையற்ற விதத்தில் மோசடியாக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதால், பொருளாதார ரீதியில் இலங்கை மின்சார சபைக்கு அதிக நட்டம் ஏற்படுகின்றது என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். இதன் காரணமாக, தேசிய பொருளாதாரத்தில் பாதகமான தாக்கம் ஏற்படுவதாகவும், அமைச்சர் ரவி கருனாநாயக்க மேலும் குறிப்பிட்டார். இந்த நிலையில், ஏற்கெனவே இ.மி.ச. திடீர் சோதனையிடுகைப் பிரிவின் செயற்பாடுகளை வலுப்படுத்தி, தேவையான சகல சட்டமுறையான நடவடிக்கைகளின் நிமித்தம் உதவுவதற்கு தான் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயல்பட தயாராகவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மோசடியாக மின்சாரத்தை பாவிப்பது தொடர்பில் தகவல் ஏதும் இருந்தால், அது பற்றி 0112422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொண்ட அமைச்சர் ரவி கருனாநாயக்க, அமைச்சிலும் மற்றும் இலங்கை மின்சார சபையிலும் இயங்குகின்ற 1901 மற்றும்1987 என்ற தொலைபேசி இலக்க சேவைகளை அதன் நிமித்தம் பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார். இந்த விடயத்தை ஒரு தேசிய கருமமாக கருதுமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.