Posted by superadmin in Latest News
- நிலக்கரி கம்பனியின் கேள்வி மனுக்களை அழைக்கும் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையின் காரணமாக அண்ணளவான கொள்வனவிலிருந்து, அதற்கு உயர்ந்த விலையில் கொள்வனவு செய்வதை தவிர்த்ததால் மூன்று மில்லியன் டொலர் நிதி சேமிப்பு
- 2020 ஆம் ஆண்டளவில் மன்னார் மாவட்டத்தில் 100 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத் திட்டம் தேசிய மின்சார முறைமைக்கு இணைக்கப்படும்
- மொனராகல், சியம்பலாண்டுவ பகுதிகளில் 100 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய ஒரு புதிய சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத்திட்டம்
- நாட்டிலுள்ள பிரதான நகரங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத்திட்டங்கள்
கேள்வி மனுக்களை அழைக்கும் நடைமுறையை செயற்படுத்தும் போது, மிகவும் வெளிப்படையாக செயல்படுவதனூடாக மட்டும்தான், பொது மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை பாதுகாத்து, இலாபகரமான விதத்தில் நிறுவனத்தை நிருவகித்து செல்ல முடியும் எனவும், ஆகையால், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் கேள்வி மனுக்களை அழைக்கும் போதும் மற்றும் அத்தகைய கேள்வி மனுக்களை திறக்கும் போது முற்றிலும் வெளிப்படையாக செயல்பட வேண்டும் எனவும் கூறிய, மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை, இலங்கை அணு சக்தி சபை, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை அணு சக்தி ஒழுங்குறுத்துகை சபை, இலங்கை தனியார் மின்சார நிறுவனம், இலங்கை நிலக்கரி கம்பனி மற்றும் லங்கா ட்ரான்ஸ்போமெர்ஸ் லிமிற்றட் போன்ற நிறுவனங்களின் தற்போதைய முன்னேற்றங்களை அவதானிக்கும் நிமித்தம் இன்று (08) ஆம் திகதி முற்பகல் நடைபெற்ற முற்போக்கு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை மின்சார சபை, இலங்கை அணு சக்தி சபை, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை, இலங்கை அணு சக்தி ஒழுங்குறுத்துகை சபை, இலங்கை தனியார் மின்சார நிறுவனம், இலங்கை நிலக்கரி கம்பனி மற்றும் லங்கா ட்ரான்ஸ்போமெர்ஸ் லிமிற்றட் போன்ற நிறுவனங்களின் தலைவர்களும், இலங்கை மின்சார சபையின் உப தலைவரும் கலந்துகொண்ட அதே நேரம் மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச அவர்களும் இந்த முற்போக்கு மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
இந்தக் கூட்டத்தில், முக்கியமாக விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர் கவனம் செலுத்தியது யாதெனில் நிறுவனக் கட்டமைப்பினுள் நிகழும் முறைகேடுகளை குறைத்து, மக்களின் நம்பிக்கை உறுதியாகும் வகையில் செயல்பட வேண்டிய விதம் பற்றியாகும். குறிப்பாக, கடந்த காலத்தில் முற்றிலும் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கம்பனியின் கேள்வி மனுக்கள் அழைத்தல் நடைமுறையின் மூலமாக அண்ணளவாக நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டதால், அதற்கு உயர்ந்த விலையில் அந்த நிலக்கரியை கொள்வனவு செய்வதை தவிர்த்து, அதனூடாக 03 மில்லியன் டொலர் நிதியை சேமிக்க அந்த நிறுவனத்தினால் முடிந்துள்ளது எனவும், எதிர்காலத்தில் கேள்வி மனுக்களை அழைக்கும் போதும் மற்றும் அத்தகைய கேள்வி மனுக்களை திறக்கும் போது வெளிப்படைத்தன்மையை அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.
தனது நிறுவனக் கட்டமைப்பை மிகவும் சிறந்த முறையில் இனங்கண்டு கொண்டு, அதன் செயற்பாட்டை வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்வதற்கும், ஊழியர்களின் உரிமைகளையும் மற்றும் நலன்புரி விடயங்களையும் நிறைவேற்றி, நாட்டினுள் உற்பத்தி வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும், அதனூடாக புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் திட்டமிடுவது அவசியம் எனவும் அமைச்சர் ரவி கருனாநாயக்க மேலும் கூறினார்.
இலங்கை ஏற்கெனவே தனது மின்சக்தித் துறையை குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி உபாயத்திட்டங்களின் பால் நகரச் செய்வதற்கு தனது கவனத்தை செலுத்தியுள்ளது என்றும், அத்தகைய செயற்பாடு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பிரதான நகரங்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய சக்தி மின்னுற்பத்தி நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறிய விடய அமைச்சர், மொனராகல், சியம்பலாண்டுவ பகுதிகளில் 100 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய ஒரு சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நிர்மாணிக்கவும், 2020 ஆம் ஆண்டளவில் மன்னார் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 100 மெ.வொ. சக்தி உற்பத்திக் கொள்திறனுடைய சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை தேசிய மின்சார முறைமைக்கு இணைக்கவும் உத்தேசிப்பதாக அமைச்சர் கூறினார்.
ஏற்கெனவே, முழு நாடும் உள்ளடங்கும் வகையில் மின்சார விநியோகம் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், 60 ரூபாவுக்கு குறைந்த மாதாந்த மின்சாரக் கட்டணங்களை செலுத்துவது அண்ணளவாக 03 மில்லியன் அளவான இ.மி.ச. நுகர்வோர்களே எனவும், முறையற்ற விவகாரங்களை தவிர்த்து இலங்கையின் மின்சக்தித் துறையை மிகவும் நிலையான ஒரு நிலைக்கு பரிவர்த்தனை செய்வதற்கும், அதனூடாக சிறந்த பொது மக்கள் சேவையை விநியோகிக்கும் நிறுவனமாக தத்தமது நிறுவனங்களை பரிவர்த்தனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் விடய அமைச்சர் ரவி கருனாநாயக்க அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.