Posted by superadmin in Latest News
“ஆகையால் இந்த அமைச்சில் ஏதாவது ஊழல் மோசடி இருக்கிறதா, நடக்கிறதா என்று தேடிப்பார்ப்பதற்கு சிவில் சமூகத்திலுள்ள காத்திரமான குழுக்களுக்கு, பொறுப்பு சாட்டுவதற்கு தீர்மானித்தேன்…”
ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்
“எங்களுடைய சமூகத்தில் ஒரு சிலர் இருக்கின்றார்கள், ஊழல்களுக்கும் மற்றும் மோசடிகளுக்கும் எதிராக செயல்படுவதற்கு. அத்தகையவர்களின் திறன்களையும் ஆற்றலையும் பயன்படுத்தி, இந்த மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சில் ஏதாவது ஊழல்கள் மற்றும் மோசடிகள் இருக்கிறதா, நிகழ்கின்றதா என தேடிப்பார்க்க நான் நினைத்தேன். அதன் நிமித்தம் வணக்கத்திற்குரிய உலபனே தேரர், ரஞ்ஜித் விதானகே, நிகால் கிரியெல்ல, சட்டத்தரனி பிரதீப் பெரேரா, விமுக்தி துஷாந்த போன்ற நபர்கள் அடங்கிய ஒரு குழுவை ஈடுபடுத்த எனக்கு தேவைப்பட்டது. இவர்களுக்கு, குறைந்த பட்சம் மாத்திற்கு ஒரு தடவையாவது, இந்த அமைச்சின் விவகாரங்களை தேடிப்பார்த்து, ஆராய்ந்து, ஊழல்கள் மற்றும் மோசடிகள் இருந்தால், அத்தகைய ஊழல்கள் மற்றும் மோசடிகள் பற்றி கதைக்கும் வகையில் ஒரு வாய்ப்பை அளிக்க எனக்கு தேவைப்பட்டது. நான் நம்புகின்றேன், இதற்கு முன்னர் எந்த ஒரு அமைச்சிலும் இது மாதிரியான ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று. இந்த அமைச்சின் நிதி விவகாரங்களை வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக மேற்கொள்வதற்கு தேவை போலவே, பொய், பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை தவிர்ப்பதற்கும் இந்தத் திட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு திட்டமாகும். அதே போன்று, இவ்வாறான ஆரம்ப முயற்சி ஏனைய அமைச்சுகளின் மூலம் பின்பற்றப்படுமாயின், அதனூடாக ஊழல்களையும் மற்றும் மோசடிகளையும் ஒழித்து, நாட்டிற்கு பயனுள்ள ஒரு சேவையை செய்ய முடியும் என நான் நம்புகின்றேன். ‘எல்லாவற்றுக்கும் ‘ஆமாம்’ ஐயா, ‘இல்லை’ ஐயா என்று சொல்பவர்கள் எனக்கு தேவையில்லை’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்தார்.
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சில் அல்லது அதற்கு சொந்தமான நிறுவனங்களில் நிகழ்ந்துள்ளது என கூறப்படும் அல்லது சந்தேகிக்கப்படும் ஊழல்கள், மோசடிகள் அல்லது முறைகேடுகள் ஏதும் இருக்குமாயின், சிவில் சமூகத்திலுள்ள காத்திரமான நபர்களுடன் இணைந்து அது தொடர்பில் கலந்துரையாடி, அத்தகைய முறைகேடுகளை குறைத்து, இந்த அமைச்சை படிப்படியாக மற்றும் மிகவும் வினைத்திறன் வாய்ந்த ஒரு அமைச்சாக பரிவர்த்தனை செய்து, அதனூடாக நாட்டு மக்களுக்கு பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில், இன்று (05) ஆம் திகதி பிற்பகல் இந்த அமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க,
“எமக்கு சுதந்திரம் கிடைத்து இன்று 71 ஆண்டுகள். எனினும், எமக்கு உண்மையான பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளதா என்பது ஒரு கேள்விக் குறியாகும். நாம், வெள்ளையர்களின் காலனித்துவ ஆட்சியில் இருந்திருந்தால் கூட நல்லது என்று கூறும் நபர்களும் இருக்கின்றனர். எங்களுக்கு தெரியும், வேலை செய்பவர்களுக்குதான் சேறுபூசப்படுவது என்று. ஆகையால், அது தொடர்பில் ஊடகங்களை பயன்படுத்தி சேவை செய்யும் நபர்களுக்கு தடை ஏற்படாத வகையிலான ஒரு செயற்பாட்டில் கால்வைக்கத்தான் இந்த முயற்சி. மின்சாரத்தை வழங்கினாலும் தவறு. வழங்காவிட்டாலும் தவறு. இலங்கை மின்சார சபையில் திறமையான பொறியியலாளர்கள் இருக்கின்றனர். இவர்களிடமிருந்து தகவல்களை பெற்றுக் கொண்டுதான், நாங்கள் செயல்படுவது. நாய் குரைப்பதால் மலை இடிந்து விழப்போவதில்லை. எமது ஜனாதிபதியும், பிரதமரும், நானும், ஒரு அரசாங்கம் என்ற வகையில் வாக்குறுதி அளித்திருக்கின்றோம், எந்த விதத்திலும் மின்சாரக் கட்டணம் அதிரிக்கப்பட மாட்டாது என்று. அதே போன்று, நாங்கள் அநாவசியமாக அச்சப்படப் போவதில்லை. மிகவும் கஷ்டமான ஒரு நிலை எழுந்தால் மட்டுமே, அவசரமாக மின்சாரத்தை கொள்வனவு செய்ய நேரிடும். அதையும் கூட நாம் செய்யப் போவதில்லை. மின்சார சபைக்கே அத்தகைய விடயங்களை செய்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்படும். எமக்கு தேவை, இந்த நாட்டின் மின்சார உற்பத்தியை 100% வீத அளவில் அதிகரிப்பதுதான். அதன் நிமித்தம், இ.மி.ச. பொறியியலாளர்கள் சமர்ப்பித்திருக்கின்ற திட்டம் 99% வீதம் வெற்றிகரமான திட்டம். தூரநோக்கு, நாடு, மக்கள் மற்றும் அவர்களுக்காக என எண்ணி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அங்கீகரித்துள்ளது. நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முற்படும் போது தடைகள் ஏற்படுவது விஷேடமானது. தவிர்க்க முடியாதது. பிரச்சினைகள் இருக்கின்றன. அத்தகைய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து, செயல்படுவதற்கு தவறினால், ஒரு நாளும் எம்மால் ஒரு நாட்டை முன்னேற்றி, கட்டியெழுப்ப முடியாது” எனவும் கூறினார்.
இந்த ஊடக சந்திப்பின் போது, நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய முன்னணியின் தலைவர் ரன்ஜித் விதானகே, ஊடகவியலாளரும் மற்றும் சிவில் சமூகத்தில் அக்கறையுடையவருமான நிகால் கிரியெல்ல முதலிய பிரமுகர்களும் இந்தப் புதிய திட்டம் பற்றி ஊடக முன்னிலையில் தத்தமது கருத்துக்களை தெரிவித்தனர்.