Posted by superadmin in Latest News
- இலங்கையின் மின்சக்தித் துறையை நவீனப்படுத்துவதற்கு தேவையான அறிவு
எதிர்காலத்தில் மின்சக்தித் துறையை மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களின் பால் நகரச் செய்யும் நவீன உபாயத்திட்டங்கள் மற்றும் அத்தகைய உபாயத்திட்டங்கள் தொடர்பில் நவீன தொழில் நுட்ப அறிவைப் பயன்படுத்துதல் என்பன பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க, மின்சக்தி முகாமைத்துவம் தொடர்பான விஷேட கோட்பாடு மற்றும் செயன்முறை ரீதியான அமர்வில் கலந்துகொண்டார்.
இந்த அமர்வின் போது, வீடுகளிலும் மற்றும் வர்த்தக கட்டிடங்களிலும் காணப்படும் சக்தி முகாமைத்துவம், சுயமாக இயக்குதலை டிஜிட்டல் தொழில் நுட்ப உபாயத்திட்டங்களின் மூலமாக செய்து கொள்ளும் விதம், அதன் நிமித்தம் பயன்படுத்தக் கூடிய மென்பாகங்கள் என்பன பற்றி விரிவாக வினவப்பட்டது. அதே போன்று, நடுத்தர மின்விசை மற்றும் சுயமாக இயக்கும் முறைமையினூடாக ஒன்றிணைக்கக் கூடிய வினைத்திறன் வாய்ந்த தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் உபாயத்திட்டங்கள் தொடர்பிலும் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டது.
சிங்கபூரில் தாபிக்கப்பட்டுள்ள நேர்த்தியான மாணிவாசிப்பு ஆய்வு கூடங்களினுள் மேற்கொள்ளப்படுகின்ற கருமங்கள் தொடர்பான இந்த செயன்முறை ரீதியான வேலையரங்கு அமர்வின் செயற்பாடுகளில் கலந்து கொண்டதனூடாக, இலங்கையின் மின்சக்தித் துறையை நவீனப்படுத்த தேவையான அறிவையும் ஞானத்தையும் பெற்றுக் கொள்ள முடிந்தது எனவும், மின்சக்தி முகாமைத்துவத்தினூடாக மின்சக்தியை பாதுகாத்தல் மற்றும் அதிக விலை உயர்ந்த சக்தி வளங்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதை குறைக்கும் வழிகளில் பயணிக்கக் கூடிய வழிமுறைகள் பற்றி செயன்முறை ரீதியில் அறிந்து கொள்ள முடிந்தது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தான் சிங்கபூருக்கு மேற்கொண்ட பயணத்தினூடாக, இலங்கையின் மின்சக்தித் துறையினுள் புதிய பல தொழில் நுட்ப அங்கங்களை செயற்படுத்துவதற்கும், தற்பொழுது மின்சக்தித் துறையில் பயன்படுத்தப்படுகின்ற உபாயத்திட்டங்களை நவீன முறைக்கு உட்படுத்துவதற்கும் தேவையான தொழில் நுட்ப அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.