Posted by superadmin in Latest News
ஈரானுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த நாட்களில் ஒரு இராஜதந்திர சந்திப்பு மின்வலு, மின்சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் கட்டிட வளாகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களை சந்தித்த, ஈரானின் தூதுவர் ஹுசைன் இப்றாகிம் கானி அவர்கள் அடங்கிய தூதுக் குழு, இந்த நாட்டின் மின்சக்தித் துறையின் உன்னத முன்னேற்றத்திற்கு, தனது அரசாங்கத்தின் உதவியை பெற்றுத் தருவதற்கு இணக்கத்தைத் தெரிவித்துள்ளது.
இலங்கை ஏற்கெனவே மின்சக்தித் துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் தனது பாராட்டுக்களை தெரிவித்த ஈரானின் தூதுவர், மின்சக்தித் துறையில், எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டங்கள் பற்றியும் அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களிடம் வினவினார். இலங்கை ஏற்கெனவே மீளப்புதுப்பிக்கத்தகு சக்திக்கு நகர்ந்துள்ளது என்றும், எதிர்காலத்தில் எழும் மின்சாரத்திற்கான தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, அதிக விலை வாய்ந்த சக்தி மூலங்களை தவிர்த்து, சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி போன்ற விலை குறைந்த மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் மின்சக்தி உற்பத்தி அதே போன்று மின்சாரத்தை பகிர்ந்தளித்தல் என்பன தொடர்பில் ஏற்கெனவே பின்பற்றப்படுகின்ற உபாயத்திட்டங்கள் பற்றியும் வினவிய தூதுவர், நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படுகின்ற மின்சார மாணிவாசிப்பு கருவிக்கு பதிலாக, தொழில் நுட்பத்தில் உயர்ந்த தரமான நேர்த்தியான மாணிவாசிப்பு கருவிகளின் (Smart Meters) பாவனைக்கு இலங்கை பரிட்சயப்படுதல் வேண்டும் எனவும், அதன் நிமித்தம் தனது நாட்டு தொழில் நுட்ப அறிவை தன்னால் பெற்றுத் தர முடியும் எனவும் கூறினார். ஈரானில் தாபிக்கப்பட்டுள்ள மாணிவாசிப்பு கருவிகள் உற்பத்தி நிலையங்கள் தொடர்பாக மேலும் விளக்கமளித்த தூதுவர், இலங்கையிலும் அத்தகைய உற்பத்தித் தொழிலை தாபிப்பதிலுள்ள சாத்தியம் மற்றும் அதனூடாக நாட்டிற்கு அடைந்து கொள்ளக் கூடிய பொருளாதார நன்மைகள் என்பன பற்றியும் விடயப் பொறுப்பு அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இலங்கையின் கைத்தொழில் துறையை ஊக்குவிப்பது தொடர்பான கருத்துக்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான ஏதாவது விஷேட கருத்துக்கள் மற்றும் மனோபாவங்கள் என்பவற்றை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், தனது நாட்டின் கைத்தொழிற்சாலைகளை கண்கூடாகப் பார்ப்பதற்கு ஈரான் நாட்டிற்கு வருமாறும், ஈரானின் தூதுவர், விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார்.
குறிப்பாக தனது நாட்டின் முதலீட்டுத் தரப்புகள் இலங்கையில் தமது முதலீடுகளை செய்வதற்கு தயாராகவுள்ளன என்றும், இலங்கை மின்சக்தித் துறையிலும் அதே போல் கைத்தொழில் துறையிலும் முன்னேற்றத்தை அடைந்து கொள்ளும் நிமித்தம் அத்தகைய முதலீட்டுத் தரப்புகளை எதிர்காலத்தில் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பான ஒரு வேலைத் திட்டத்தை தயாரிப்பது அவசியம் என்றும், ஈரானிய தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது, மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட அவர்களும் கலந்துகொண்டார்கள்.