01 0

Posted by  in Latest News

  • பொது மக்களை மின்சாரத்தை பாதுகாக்கும் உபாயத்திட்டங்களில் பங்கெடுக்கச் செய்தல்
  • எதிர்காலத்தில் முறையான ஒரு வேலைத்திட்டம்
  • மின்சக்தித் துறையை ஊக்குவிப்பதற்காக நோர்வே அரசாங்கத்தின் தொழில்நுட்ப உதவி

நோர்வே அரசாங்கத்திற்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நோர்வே நாட்டு தூதுவர் தொர்ப்ஜோர்ன் கவுஸ்டாட்சயேதெர் அவர்கள் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களுடனான நட்புறவு சந்திப்பில் கலந்துகொண்டார்.
நேற்றைய தினம் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் கட்டிட வளாகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இலங்கை இது வரை மின்சக்தி உற்பத்தி தொடர்பில் பயன்படுத்தும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்கள், அவற்றின் பயன்பாடுகள், மின்சக்தி உற்பத்திற்கு ஏற்படும் செலவுகள், அதனூடாக ஏற்படும் சமூகத் தாக்கங்கள், சுற்றாடல் காரணிகள் முதலிய அம்சங்கள் பற்றி நோர்வே நாட்டு தூதுவர் வினவினார். அதே போன்று, மின்சக்தி உற்பத்தி தவிர, மின்சக்தியைப் பாதுகாக்கும் உபாயத்திட்டங்களை பின்பற்றுவதனூடாக மின்சாரத்திற்கான கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை விநியோகிக்கக் கூடிய சாத்தியம் பற்றியும் இதன் போது நோர்வே தூதுவர் வினவினார்.
தூதுவர் வினவிடய விடயங்களுக்கு பதிலளிக்கையில், மின்சாரத்திற்கான கேள்விக்கு ஏற்ப, குறைந்த விலையில், தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமானால், மின்சக்தித் துறையின் பல்லினத்துவம் வாய்ந்த மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களுக்கு நகர்வதிலும், அதே போன்று, அதிகரித்து வருகின்ற மின்சாரத்திற்கான கேள்விக்கு ஏற்ப மின்சாரத்தை விநியோகிப்பதிலும், மின்சக்தியைப் பாதுகாக்கும் உபாயத்திட்டங்களை பின்பற்றுவதிலுள்ள முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்திய அமைச்சர் ரவி கருனாநாயக்க, எதிர்காலத்தில் மக்களை அத்தகைய உபாயத்திட்டங்களை பின்பற்றச் செய்யக் கூடிய முறையான ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொருட்டு பயன்படுத்தப்படுகின்ற பாரம்பரிய மற்றும் பிரதான சக்தி மூலம் நீர் வளமாகும் எனவும், அதனை பயன்படுத்தி, ஆகக்குறைந்த செலவில், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின்சார நுகர்வோருக்கு வினைத்திறன் வாய்ந்த ஒரு மின்சார விநியோக சேவையை வழங்க முடியும் எனவும், காணப்படுகின்ற சகல நீர் வளங்களும் ஏற்கெனவே மின்னுற்பத்தி சார்ந்த செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். அகையால், மின்சாரத்திற்காக நாளாந்தம் அதிகரித்து வருகின்ற தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு எரிபொருள், நிலக்கரி போன்ற ஏனைய பிற சக்தி மூலங்களின் பால் நகர்ந்மை பற்றியும், அவற்றுக்கு நிலவுகின்ற விலைகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் என்பவற்றின் விளைவாக, இலங்கையின் மின்சக்தித் துறை சூரிய சக்தி, காற்று சக்தி போன்ற மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களுக்கு நகர்த்தப்பட்டமை பற்றியும் தூதுவருக்கு, அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.

ஏற்கெனவே, இலங்கையின் மிகவும் வெற்றிகரமான மீளப்புதுப்பிக்கத்தகு மின்சக்தி உற்பத்தி உபாயத்திட்டம் சூரிய சக்தியாகும் எனவும், அதனை பயன்படுத்தி, ஆக்குறைந்த விலையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின்சார நுகர்வோருக்கு மின்சாரத்தை விநியோகிக்க முடிந்துள்ளது எனவும், அத்தகைய மின்னுற்பத்தியில் எஞ்சியிருக்கின்ற மேலதிக மின்சாரத்தை தேசிய மின்சார முறைமைக்கு சேர்ப்பதன் மூலமாக, பொருளாதார ரீதியில் நன்மைகளை மின்சார நுகர்வோரால் அடைந்து கொள்ள முடிந்துள்ள எனவும் அமைச்சர் ரவி கருனாநாயக்க தெளிவுபடுத்தினார்.

மின்சார விநியோகத்தினூடாக இலங்கை மிகவும் உன்னத நிலையில் இருக்கின்றது என குறிப்பிட்ட தூதுவர், மேலும் மின்சக்தித் துறையை அபிவிருத்தி செய்யும் பொருட்டு தேவையான தொழில்நுட்ப  உதவிகளையும் மற்றும் நிதி உதவிகளையும் பெற்றுத் தருவதற்கு, நோர்வே அரசாங்கத்தின் சார்பாக தான் உடன்படுவதாகவும் கூறினார். அதே போன்று, மின்சக்தித் துறையினூடாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் நோர்வே அரசாங்கத்தின் கவனத்தை செலுத்தி, உரிய உபாயத்திட்டங்களை பின்பற்றுவது பற்றி அந்தந்த உரிய தரப்புளுடன் பேச்சுவாரத்தைகளை மேற்கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் தூதுவர், அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களிடம் கூறினார்.

Leave a comment

* required