30 0

Posted by  in Latest News

  • 06 மாதங்கள் செல்ல முன்னர் இலங்கை மின்சார சபை விஷேட தரத்திலான ஒரு நிறுவனமாக பரிவர்த்தனை செய்யப்படும்
  • ஏப்ரல் 04 ஆம் திகதியாகும் போது நாட்டில் ஒவ்வொருவருக்கும் என நுகர்வோர் சேவைப் பிரிவு உருவாக்கப்படும்
  • பணியில் ஈடுபடும் போது உயிர்களை இழக்கின்ற இ.மி.ச. ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் ஒரு திட்டம் தயாரிக்கப்படும்
  • இ.மி.ச. ஊழியர்களை காப்புறுதி செய்யும் ஒரு வேலைத்திட்டம் கொண்டுவரப்படும்

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்
“இலங்கை மின்சார சபை நவீனமயப்படுத்தப்படுவது நுகர்வோருக்கு சிறந்த ஒரு சேவையை வழங்கும் அதே வேளையில், எமது நட்டத்தை இலாபத்திற்கு பரிவர்த்தனை செய்து கொள்வதற்காகும். இந்த வருடத்தில் இ.மி.ச. மதிப்பிட்டுள்ள நட்டம் எட்டுக் கோடிகள். இதனை நாமாகவே இல்லாதொழிக்க வேண்டும். எட்டுக் கோடிகள் என்பது ஒரு மகாவலித் திட்டத்தை உருவாக்குவதற்கு செலவு செய்ய வேண்டிய ஒரு செலவு. இது சுமக்கக்கூடிய ஒரு செலவா. இதற்கு பொறுப்புக் கூற வேண்டியது யார். அரசியல்வாதிகள் சரியான காலத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கவில்லை. இலங்கை மின்சார சபையும் (இ.மி.ச.) சரியான முறையில் சரியான தீர்மானத்தை எடுக்க தவறியுள்ளது. எம்மால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க முடியாது. அவ்வாறு மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு நான் இடமளிக்கப் போவதுமில்லை. விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர் என்ற வகையில், நான் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். இலங்கை மின்சார சபை ஒரு நாளும் தனியார்மயப்படுத்தப்படப் போவதில்லை” என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க குறிப்பிட்டார்.
இன்று (30) ஆம் திகதி முற்பகல் தலங்கம இ.மி.ச. நுகர்வோர் சேவை நிலையத்தை திறந்து வைக்கும் வைபவ நிகழ்வில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச அவர்களும் கலந்துகொண்டார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க…,

“ஏப்ரல் 04 ஆம் திகதியாகும் போது ஒவ்வொருவருக்கும் என நுகர்வோர் சேவைப் பிரிவு உருவாக்கப்படவுள்ளது. அதன் பின்னர் நாம் ஒரு பிரிவு தொலைபேசி இலக்கத்தினூடாக இலங்கையில் எந்த இடத்தில் இருந்து கொண்டும், இலங்கை மின்சார சபையின் சேவையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிலையை உருவாக்கக் கூடிய ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்படும். இன்னும் 06 மாதங்கள் கழிய முன்னர் இ.மி.ச. இலங்கையின் விஷேட தரத்திலான ஒரு நிறுவனமாகப் பரிவர்த்தனை செய்யப்படும். நாம் மின்சார உற்பத்தி செலவைக் குறைத்தால், அதன் நன்மையை மின்சார நுகர்வோருக்கு பெற்றுக் கொடுக்க முடியும். அலகு  0 முதல் 120 வரைக்கும் தான், நுகர்வோர்களில் 52‍% வீதமானவர்களினூடாக எமக்கு இலாபம், நட்டம் பரிவர்த்தனையாக்கப்பட்டு எமக்கு கிடைக்கின்றன. சமய ஸ்தலங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றிலிருந்து நாம் அடைவது நட்டம். அதனால்தான், நாம் எமது நுகர்வோரை கவனிக்க வேண்டும்.

நான் இந்த அமைச்சின் பணியை பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் உள்ளிட்ட ஊழியர்களை சந்தித்த வேளையில், கேட்டுக் கொண்டது என்னவென்றால், எமது மின்சார நுகர்வோருக்கு மனத் திருப்தியான சேவையை வழங்க வேண்டும் என்று. அதற்கு அமைவாக நாம் மின்சார நுகர்வோருக்காக மேற்கொண்ட ஒரு மேலதிக முயற்சிதான் இது. எம்மால் நாடு முழுவதற்கும் இவ்வாறு சேவையை வழங்க முடியுமானால், அதுதான் மிகவும் சிறந்தது. 26,163 ஊழியர்கள் இலங்கை மின்சார சபையில் பணியாற்றுகின்றனர். அதே போன்று மேலும் 5000 ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை மின்சார சபையில் பணியாற்றுகின்றனர். ஆகையால், இந்த இலங்கை மின்சார சபை இலங்கையில் காணப்படுகின்ற மிகவும் பெரிய ஒரு நிறுவனமாகும். இலங்கை மின்சார சபை ஏறக்குறைய அறுபத்து ஐந்து இலட்சம் எண்ணிக்கையான மின்சார நுகர்வோருக்கு மின்சார சேவையை வழங்குகின்றது. இந்த எண்ணிக்கை வருடத்திற்கு 6‍%, 7‍% வீதங்களினால் அதிகரிக்கின்றது. இவர்களுக்கு உச்சளவில் மின்சார சேவையைப் பெற்றுக் கொடுப்பதுதான் எமது இலக்கு.

இலங்கை மின்சார சபையில் காணப்படுவது ஒரு ஏகாதிபத்திய நிலை. மின்சார நுகர்வோருக்கு இலங்கை மின்சார சபையை விட்டால், வேறு மாற்று வழி ஏதும் கிடையாது. ஆகையால், நாம் இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும். இலங்கையில் நாள் கணக்காக, வாரக் கணக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த கரும பணிகளை தற்பொழுது பல நிறுவனங்களில் ஒரு சில மணித்தியாலங்களில் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. இலங்கை மின்சார சபையையும் அவ்வாறான வினை்திதறன் வாய்ந்த ஒரு நிறுவனமாக பரிவர்த்தனை செய்ய வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

எமது அரசாங்க வருமானம் 2200 பில்லியன் ரூபா. அதில் 860 பில்லியன் ரூபா அரச ஊழியர்களுக்காக செலவு செய்யப்படுகின்றது. மேலும் 240 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக செலவு செய்யப்படுகின்றது. மேலும் 1200 பில்லியன் ரூபா அரச கடன்களுக்காக செலவு செய்யப்படுகின்றது. இந்த மூன்று வகையான செலவுகளையும் பார்க்கும் போது, நாடு வங்கரோத்து நிலையை அடைவது நிச்சயம். எனவே, நாம் எவ்வாறு நாட்டை முன்னேற்றுவது. எது என்னவாயினும், சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் எங்களுடைய பல்கலைக்கழக மாணவர்கள் பதாகைகளை ஏந்தி எதிர்ப்புகளை தெரிவிக்க செல்வது ஒரு ஜனநாயக செயல். எனினும், இந்த ஜனநாயக செயலுக்கு முடியுமா நாட்டை முன்னேற்ற. அதே போன்று, அத்தகைய பதாகைகளுக்கு முடியுமா தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்க. அதனல் நிகழ்வது பல வருட காலங்கள் எமது வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதேயொழிய வேறொன்றுமில்லை. இத்தகைய நிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

எமது மின்சார நுகர்வோரையும் மற்றும் மின்சார ஊழியர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஒரு வருடத்தில் இ.மி.ச. ஊழியர்கள் வேலை செய்யும் போது அதிகளவான ஊழியர்களின் உயிர்கள் இழக்கப்படுகின்றன. அவ்வாறு உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு எதிர்ப்பாட்டம் தேவையில்லை. அதே போன்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறையையும் மாற்றியமைக்க வேண்டும். அந்த விதத்தில் நுகர்வோருக்கு மிகவும் வினைத்திறன் வாய்ந்த, தரமான சேவையை வழங்குவதற்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து தெய்வந்துறைக்கும் என முழு நாடும் உள்ளடங்கும் வகையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இது ஒரு சவால் நிறைந்த விடயம். இதனை நாம் வெற்றி கொள்ள வேண்டும். இலங்கை மின்சார சபையை (இ.மி.ச.) இலாபத்திற்கு, நட்டத்திற்கு பரிவர்த்தனை செய்வதற்கு ஊழியர்களின் கருத்துக்களையும் பெற்றுக் கொள்வது அவசியம்” எனவும் கூறினார்.

Leave a comment

* required