28 0

Posted by  in Latest News

  • எனக்கும், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தேவை அச்சமின்றி திடகாத்திரமான அரசியல் தீர்வுகளை எடுப்பதுதான்.
  • இன்று சரியான ஒரு அரசியல் தீர்வை எடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இருள் நிறைந்த ஒரு பயணத்தில்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கும்.  

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

“நாங்கள் தாவர மூல சக்தியை பாவித்தாக வேண்டும். அது மிகவும் சிறந்த சக்தி வளம். என்றாலும், அதில் செயல்முறை ரீதியான பல பிரச்சினைகள் இருக்கின்றன. இது எனக்கு புதிய ஒரு விடயம். என்றாலும், நான் மிகவும் சந்தோஷத்துடன் இந்த சவாலை ஏற்று முன்னெடுத்து செல்கின்றேன். நானும் எனது செயலாளரும் உள்ளிட்ட எமது குழுவினர் செல்லும் இந்தப் பயணத்தில் பல தடைகளும் மற்றும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றன. அந்தத் தடைகள் சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். எனினும், இந்த சந்தர்ப்பத்தில் சரியான அச்சமின்றிய திடகாத்திரமான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்த தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது இதற்கு 05 வருடங்களுக்கு முன்னர். அதற்கான காரணம்தான் 2015,2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேசிய மின்சார முறைமைக்கு ஒரு மெகாவொட்டு மின்சார அலகாவது சேர்க்கப்படாமை. எனினும், மின்சாரத்திற்கான கேள்வி 6%, 7% வீதங்களினால் அதிகரித்து வருகின்றது. அதனால், நாம் உண்மையாகவே பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கின்றோம். இதற்கு இன்று சரியான ஒரு அரசியல் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் இருள் நிறைந்த ஒரு பயணத்தில்தான் நாம் பயணிக்க வேண்டி ஏற்படும். எமக்கு இருக்கின்ற பாரிய பிரச்சினைதான் தலைவர்கள் அச்சமின்றி திடகாத்திரமான அரசியல் தீர்வுகளை எடுக்காமை. ஒருவர் தனக்கிருக்கின்ற பொறுப்பை மற்றவருக்கு சாட்டி விட்டு, சாட்டுப்போக்குகளை சொல்லி நழுவுவதுதான் வழமையாக நடக்கின்றது. எனினும் எனக்கும், ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தேவை, அச்சமின்றிய சரியான திடகாத்திரமான அரசியல் தீர்மானத்தை எடுப்பதுதான். எந்த வகையான அரசியல் விளைவுகளை சந்திக்க நேர்ந்தாலும், எதிர்காலத்திற்காக இன்று நாம் முதலீடு செய்ய வேண்டும். எனினும், அதனை சரியான முறையில் குறைந்த செலவில் செய்ய வேண்டும் என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்” என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க குறிப்பிட்டார்.
இன்று (28) ஆம் திகதி முற்பகல் கொழும்பு 03 எனும் முகவரியில் அமைந்துள்ள ஜேர்மனியினது தூதுவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ‘தாவர சக்தி வீரர் – 2019’ என்ற போட்டியை பிரகடனப்படுத்தும் வைபவ நிகழ்வில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.  இந்தப் போட்டிகளினூடாக ஒரு புத்தாக்க மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை தேர்ந்தெடுத்து, அதற்கு தேவையான நிதி வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளது. அரச மற்றும் தனியார் ஆகிய துறைகளிலிருந்தும் அதே போன்று சிவில் அமைப்புகளிடமிருந்தும் கருத்திட்டப் பிரேரணைகளை பெற்று சேகரித்துக் கொள்ள முடியும். நிலைபெறுதகு வலு அதிகார சபையினால் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க,
“நான் மின்வலு சக்தி அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட முதல் வாரத்தினுள், பல இளைஞசர்கள் வந்து என்னிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தனர். அதுதான் எங்களுடைய சிறிய மின்னுற்பத்தி நிலையங்களை பாதுகாருங்கள் என்று. புதிதாக பாதகமான எதனையும் நிகழ்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று. காற்று சக்தி மூல மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க வேண்டாம் என்று. இதனால் எமது பறவை இனங்கள் பாதிக்கப்படுகின்றன என்று. இதை எல்லாம் பற்றி நாம் சிந்தித்தால், எமக்கு செய்ய வேண்டியிருப்பது மிகவும் மட்டுப்பட்ட அளவிலான அற்ப சொற்ப பணி மாத்திரம்தான். நாம் ஒரு மின்சார அலகை உற்பத்தி செய்வது ரூ.22.73 போன்ற ஒரு செலவில். என்றாலும், அந்த மின்சாரத்தை நாம் விற்பனை செய்வது ரூ.16.32 போன்ற ஒரு விலையில். இதனூடாக ஏற்படுகின்ற அநியாயத்தை அறிந்து கொண்டும், அதே விடயத்தை நாம் செய்வது என்றால், அதனை நாம் செய்கின்ற ஒரு பாவ செயல் என்றுதான் நான் கருதுகின்றேன். எமது இளைஞர்கள் யுவதிகளின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசியல்வாதிகள் என்ற ரீதியில் எமது பொறுப்பும் கடமையும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை முன்னேற்றுவதற்கு ஒரு வழியை தேடிக் கொள்ள வேண்டும். ஒரு கேள்வி மனு ஒப்பந்தம், கேள்வி மனு தாரர் தரப்புகளுக்கு இடையில் ஒரு தரப்புக்கு மட்டுமே கிடைக்கின்றது. அந்த கேள்வி மனு ஒப்பந்தம் கிடையாத மற்றைய கேள்வி மனு தாரர்கள் கூடி, அந்தத் தீர்மானத்தை விமர்ச்சிப்பதும், அதன் மீது கேள்விகளை தொடுப்பதும் தான் வழமையான பிரச்சினைகளாக இருந்து வருகின்றன. நாம் இத்தகைய மனப்பாங்கிலிருந்து விலகி நடக்க வேண்டும். எதிர்காலத்தை நாம் வளமையானதாக பார்க்க வேண்டுமானால் இந்தியா, பங்காளதேஷம், மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகள் துரிதமான முன்னேற்றம் அடைவதற்கு, அந்த நாடுகள் எடுத்த தீர்மானம் போல் சரியான முறையில் அச்சமின்றி திடகாத்திரமான தீர்மானங்களை நாடும் எடுக்க வேண்டும். அப்போதுதான் நாமும் அவ்வாறான வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும்” எனவும் கூறினார்.

Leave a comment

* required