“நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு தேசிய ரீதியில் ஒரு தேவை நிலவுவதால் எதிர்காலத்தில் சுற்றாடல் அதிகார சபையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் சுற்றாடல்நேயமாக அந்த மின்னுற்பத்தி நிலையத்தை பேணிச் செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்…..”
14 0

Posted by  in Latest News

இந்த நாட்டின் மின்சாரத்திற்கான தேவையையை பூர்த்தி செய்யும் பொருட்டு அதிகளவில் பங்களிப்பை செய்கின்ற நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையம் தேசிய ரீதியில் அவசியம் என்பதால், அந்த அனல் மின்னுற்பத்தியின் மூலம் சுற்றாடலுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்படும் என கூறப்படும் பாதிப்புகள் மற்றும் இடையூறுகள் முதலியவற்றை குறைக்கும் வகையில், சுற்றாடல் அதிகார சபையின் முழுமையான கண்காணிப்பின் கீழ் அதனை மிகவும் சுற்றாடல்நேயமான முறையில் பேணிச் செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலைய வளாகத்தினுள் சுற்றாடலுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் ஏற்படும் என கூறப்படுகின்ற தாக்கங்கள் பற்றி கலந்துரையாடும் பொருட்டு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் வழங்கிய அறிவுரைகளின் பிரகாரம் இன்று (14 ஆம் திகதி) பிற்பகல் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் சாம்பலின் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்படுவதாக கூறப்படும் தாக்கங்களை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய பல நடவடிக்கைகளை எற்கெனவே செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் சுற்றாடல் அதிகார சபையினால் விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தை சுற்றாடல் அதிகார சபையினது சிபாரிசகளின் அடிப்படையில் மிகவும் சுற்றாடல்நேயமான முறையில் பேணிச் செல்லும் பொருட்டு சுற்றாடல் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள். அதன் பிரகாரம், எதிர்காலத்தில் காற்று தடைசாதனங்களை பாவித்தல், அனல் மின்னுற்பத்தி நிலையத்திலிருந்து வெளியாகும் அனைத்து சாம்பல்களையும் மூடிவைத்தல் மற்றும் மிகவும் உயர்ந்த தரத்தில் நிலக் கரிகளை பாவித்தல் முதலிய விடயங்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள். அதற்கு அமைய, உரிய காற்று தடைசாதனங்களை நிறுவும் கருமம் இந்த மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.

இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா, அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசேன தசநாயக்க ஆகியோர் அடங்கலாக மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை நிலக் கரி கூட்டுத்தாபனம் மற்றும் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின்னற்பத்தி நிலையம் போன்ற நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required