மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி துறையின் மேலும் அபிவிருத்திற்கு பின்லாந்தின் உதவி….
13 0

Posted by  in Latest News

சார்க் வலய நாடுகளுக்கு இடையில் 24 மணித்தியாலமும் தொடர்ச்சியாக இடையறாது மின்சாரத்தை விநியோகிப்பதற்கு ஆற்றலுள்ள, அதே போன்று 100% வீதம் மின்சாரத்தை வழங்கும் ஒரேயொரு நாடு இலங்கையாகும் எனவும், மின்சக்தி நெருக்கடிக்கு நிலையான ஒரு தீர்வாக இலங்கை மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூல வளங்களின் பால் நகர்ந்தமை மற்றும் அதனூடாக ஏற்கெனவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றம் என்பன தொடர்பில் பின்லாந்தின் பொருளாதார உறவுகள் மற்றும் தொழில்கள் பிரதி அமைச்சர் என்ற வகையில் இலங்கைக்கு தனது ஆசிர்வாதத்தை தெரிவிப்பதாகவும், பின்லாந்தின் பொருளாதார உறவுகள் மற்றும் தொழில்கள் பிரதி அமைச்சர் கௌரவ பெட்ரி பெல்டொனென் (Petri Peltonen) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நேற்று (12 ஆம் திகதி) பிற்பகல் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களுடன் அவரின் அமைச்சில் இடம்பெற்ற இரு தரப்பு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற இராஜதந்திர உறவுகளை மேலும் உறுதிசெய்து கொள்ளும் ஒரு நடவடிக்கையாக இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலவளங்கள் தொடர்பில் தனது நாட்டின் மின்சக்தி துறை பற்றி தெளிவுபடுத்தி, அத்தகைய உபாயத்திட்டங்களை பின்பற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடு்பபதாக பிரதி அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள். அதே போன்று மின்சக்தி நெருக்கடிக்கு தீர்வுகளை காணும் பொருட்டு உள்நாட்டு ரீதியில் அனுமதிக்கப்படும் சக்தி பாதுகாப்பு உபாயத்திட்டங்கள் பற்றியும் பிரதி அமைச்சர் அவர்கள், மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சருடன் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள். குறிப்பாக கடல் அலை சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பில் இந்த சந்திப்பின் போது மேலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இதற்கு பின்லாந்து அரசாங்கத்தின் தொழில் நுட்ப அறிவை பெற்றுக் கொடுப்பதற்கும் மற்றும் சலுகை அடிப்படையில் கடன்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் பின்லாந்தின் பிரதி அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.

இந்த விடயங்களுக்கு மேலதிகமாக இந்த நாட்டின் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி கருத் திட்டங்களுக்கும் அதே நேரம் நாடுகளுக்கு இடையில் நட்புறவை மேலும் வளர்ப்பதற்கும் வழங்கக் கூடிய அதிகளவு உதவிகளை செய்வதற்கு தான் உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்கள். கடந்த ஆண்டுகளில் இலங்கையின் மின்சார முறைமைக்கு வலுவூட்டி இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திற்கு பின்லாந்தினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு அமைச்சர் அவர்கள் தனது நன்றிகளையும் மற்றும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

பின்லாந்திற்கும் மற்றும் இலங்கைக்கும் இடையில் மின்சக்தி தொடர்பான கூட்டுறவுகளை மேலும் உறுதிசெய்து கொள்ளல் மற்றும் வளர்த்துக் கொள்ளல் என்பன தொடர்பில் இந்த சந்திப்பின் போது பின்லாந்தின் பிரதி அமைச்சர் அவர்களுக்கும், இலங்கையின் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் அவர்களுக்கும் இடையில் மேலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில், மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a comment

* required