“உலக வங்கி எமக்கு துரத்தித் துரத்தி பணம் வழங்காது. எமது பங்குப் பணமும் உல வங்கியிலுள்ளது…”
12 0

Posted by  in Latest News

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

உலக வங்கி அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளுக்கு குறிப்பாக உதவுகின்றது. எனினும் அந்த உலக வங்கி இந்த உதவியை செய்வது வெறுமனேயல்ல. இந்த நிதி உதவியை வழங்குவது கடனாக. குறைந்த வட்டியில் அல்லது வட்டியின்றி கடனை வழங்குவதுதான் ஒரேயொரு சலுகையாக இருக்கின்றது. எந்த ஒரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்தாலும், வரவுசெலவுத்திட்டம் தோக்கடிக்கப்பட்டால் நாம் அதனை வெலுத்தித் தீர்க்க வேண்டும். குறிப்பாக மக்களின் பங்குபற்றலில் மேற்கொள்ளப்படுகின்ற சமூக கூட்டுறவு கருத் திட்டங்களை செயற்படுத்துவது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். எனினும், அரசாங்கத்தின் ஒரு எண்ணக்கரு என்ற ரீதியில், உலக வங்கியினது கடன் உதவியி்ன் அடிப்படையில் செயற்படுத்தப்படும் இத்தகைய கருத் திட்டங்களை வெற்றி கொள்ளும் பொருட்டு கட்சி, நிற பேதங்களின்றி ஒன்றாக செயல்பட வேண்டும். உலக வங்கி என்பது எம்மை தேடிக் கொண்டு துரத்தித் துரத்தி எமக்கு உதவி செய்யும் ஒரு நிறுவனமல்ல. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளினால் நிதி முதலிடப்பட்டு, தமது நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வங்கி. நாம் அதற்கு எமது பங்கையும் கொடுத்து அதன் உறுப்புரிமையை பெற்றிருக்கின்றோம். என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ரம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்ற நீர் வழங்கல் மற்றும் துப்புரவேற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் ஒரு கருத் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள். நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினது கண்காணிப்பின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த கருத் திட்டத்தை ஒரு வருட காலப் பகுதிற்குள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக, குறித்த பிரதேசத்திலுள்ள 759 குடும்பங்களின் நீர் சார்ந்த தேவை பூர்த்தியாகும்.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,

“நான் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சை பொறுப்பேற்ற போது இரண்டரை இலட்சம் மக்களுக்கு மின்சார வசதி இருக்கவில்லை. மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கு அவர்களிடம் பணம் இருக்கவில்லை. எனக்கு ஒரு எண்ணக்கரு தோன்றியது இந்த நாட்டின் சகல மக்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு. அவர்களுக்கு பணம் இல்லையெனில் இலகு தவணை கட்டண அடிப்படையில் மின்சாரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு. நான் அந்த எண்ணக்கருவை அமைச்சரவைக்கு முன்வைத்தேன். அனுமதியை பெற்று, மின்சார சபையின் ஒட்டுமொத்த ஊழியர்களும் பகல் இரவு பாராது அந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்கு பாடுபட்டார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் எண்ணக்கரு தோன்றலாம். எனினும், அந்த எண்ணக்கருவை நடைமுறைப்படுத்த சக்தியும், ஆற்றலும் இருப்பது அரசாங்கத்திற்கு அல்லது அரசாங்கத்தின் அனுசரணையுடைய நிறுவனத்திற்கு மாத்திரமாகும்.” எனவும் குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required