‘எமக்கு இருக்கின்ற பெரும் சவால்தான் நாட்டின் நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைப்பது…..’
08 0

Posted by  in Latest News

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

‘இன்று எமது நாட்டில் 4 இலட்சம் நேரடி வரி கோவைகள் இருக்கின்றன. எனினும், எமது நாட்டின் தலா வருமானத்திற்கு இணங்க 15 இலட்சம் நேரடி வரி கோவைகள் இருத்தல் வேண்டும். ஆயினும் வரி அறவீடு, எளிதான தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் அவற்றின் மீது இருக்கின்ற நம்பிக்கை குறைவு என்பன அவ்வாறு இருப்பதற்கு காரணமாகும். ஆகையால் இது பற்றி தெளிவுபடுத்துவது நாட்டிற்கு மிகவும் முக்கியமாகும். ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு இருக்கின்ற பெரும் சவால் தான் நாட்டின் நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைப்பது’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

கடந்த தினத்தில் கேகாலை கைத்தொழில் மற்றும் வர்த்தக மண்படபத்தில் இடம் பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..
‘ஒரு தொழில்முயற்சியாளர் விரும்பாத சொல்தான் இந்த வரி. ஆனால், நாம் அந்த விரும்பாத சொல்லை விருப்பமான சொல்லாக மாற்ற வேண்டும். உலகத்தில் அதிகளவான சவால்களை பொறுப்பேற்பவர்கள் தான் இந்த மண்டபத்தில் இன்று கூடியிருக்கின்றவர்கள். நான் எதிர்பார்கின்றேன் இவர்களுக்கு இடையில் வரி தொடர்பாக மாத்திரமன்றி சமூகத்திற்கு முக்கியமான ஒவ்வொரு செய்தியும் சமூகமயமாகும் என்று. பொருளியல் விஞ்ஞானத்திற்கு இணங்க உலகம் முன்னேறுவது 4 காரணிகளின் அடிப்படையிலாகும். அவை தான் நிலம், ஊழியம், மூலதனம் மற்றும் தொழில்முயற்சி. இந்த காரணிகளுக்கு இடையில் தொழில்முயற்சி தரப்புகள் தான் கடும் பொறுப்புகளை கொண்டிருக்கும் தரப்புகள். தொழில்முயற்சிதான் நிலம், ஊழியம் மற்றும் மூலதனம் முதலிய அனைத்தையும் உரிய முறையில் பொருந்தச் செய்து உலகத்திற்கு ஏதாவது ஒன்றை பெற்றுக் கொடுப்பது. அது பொருள், பதார்த்தம் அல்லது சேவை என்ற ஒரு வடிவில் இருக்கலாம். தொழில்முயற்சி தரப்புகள் மற்றையவர்களுக்காக பொறுப்பை ஏற்கும் தரப்புகள். அத்தகைய தொழில்முயற்சி தரப்புகள் அவற்றின் பொறுப்புக்களை ஏற்கவில்லையெனில் உலகம் ஒரே இடத்தில் நின்றிருக்கும்’ எனவும் கூறினார்கள்.

Leave a comment

* required