“2050 ஆம் ஆண்டளவில் எண்ணெய் எரிபொருள் நீங்கிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களில் சுயதேவைப் பூர்த்தியடைய ஓர் மின்சார உற்பத்தி…”
23 0

Posted by  in Latest News

நான் காலத்துடன் எப்பொழுதும் சவால்கள் நிறைந்த உறுதிமொழிகள், பொறுப்புக்கள், கடமைகள் என்பவற்றை ஒரு போதும் மறவாத ஒரு அரசியல்வாதி. அதே போன்று பிரபலம் அடைவதை தேர்ந்தெடுக்காத, அதிலும் பார்க்க மிகவும் வித்தியாசமான அரசியல் வரையறையில் பணியாற்றும் ஒரு அரசியல்வாதி. நான் எப்பொழுதும் நினைப்பது, என்னால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளை. ஆகையால் தான், இந்த சூரியபள சங்கிராமய நிகழ்ச்சித் திட்டத்தை நான் ஆரம்பித்தேன்.  2050 ஆம் ஆண்டளவில் எண்ணெய்யின் பாவனை நீங்கிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியில் சுயபூர்த்தியுடைய மின்சார உற்பத்தி முறைமை இலங்கையில் எற்படுத்தப்படும்” என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள்.

கடந்த தினத்தில் கேகாலை மாவட்டத்தின் சுவர்ண ஜயந்தி பாடசாலைக்கு சூரிய சக்தியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்சார உற்பத்தி முறைமை வசதியை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,

“இன்று நாம் இந்த சுவர்ண ஜயந்தி பாடசாலையை சூரியபள சங்கிராமய நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பங்காளர் தரப்பாக ஆக்கினோம். இன்று முதல் இந்த பாடசாலை ஒரு மின்னுற்பத்தி நிலையமாக விளங்கும். இந்த நாட்டில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய பத்து இலட்சம் சூரிய சக்தி பலகை முறைமை வசதியுடைய மின்னுற்பத்தி நிலையங்களை உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சித் திட்டத்தை பொது மக்கள் மத்தியில் பிரபல்லியப்படுத்தும் நோக்கில் மக்கள் அதிகளவில் கவனம் செலுத்தும் பாடசாலைகள், பன்சலைகள், அரசாங்க அலுவலகங்கள் என்பவற்றுக்கு இலவசமாக குறித்த சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமை வசதிகளை நிறுவ நாம் திட்டமிட்டோம். எமது முக்கிய நோக்கம் யாதெனில் இலங்கையில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியை சுயதேவை பூர்த்தியுடையதாக ஆக்குவதாகும்” எனவும் குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required