18 0

Posted by  in Latest News

அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

உரிய காலத்திற்கு மழை நீர் கிடைத்து, மின்சாரத்தை உரிய முறையில் உற்பத்தி செய்து பெற்றுக் கொள்ளும் வகையில் ஜய ஸ்ரீ மகா போதியை மதித்து வணங்கி, ஸ்ரீ மகா போதிக்கு சத்தர வாஹல்கட பால் பொங்கி கண்ணியப்படுத்தும் முகமாக சம்பிரதாய வணக்க வழிபாடு மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் கௌரவ ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் தலைமையில் இன்று (18 ஆம் திகதி) கால வேளையில் இடம்பெற்றது.

ஏற்கெனவே மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக பயன்படும் நீர்வீழ்ச்சிகளில் நீர் கொள்ளளவு 60% அளவில் காணப்படுகின்றது. ஆகையால், தொடர்ச்சியான மின்சார உற்பத்தியில் மிகவும் சிறந்த ஒரு பங்களிப்பு மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி என்ற ரீதியில் நீர்வலு மின்சாரத்தின் மூலமாக கிடைக்கின்றது.

அமைச்சர் அவர்கள் இந்த உன்னத சமய வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கூறியது யாதெனில் ‘இலங்கை மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களை வளர்க்கும் பொருட்டு தேவையான திட்டங்கள் ஏற்கெனவே தயாரித்துள்ளதாகவும், இதனூடாக மிகவும் பயனுள்ள விதத்தில் துரிதமாக பெறுபேறுகளை அடைந்து கொள்ள முடியும்’ என்றாகும். 2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் மரபுரீதியற்ற மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சக்தி கொள்ளவை 20% வரை கொண்டு வருவது தனது அபிப்பிராயமாகும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a comment

* required