‘மின்சார உற்பத்தியின் நிமித்தம் இன்று வரை நாம் நீர் வளங்களை உச்சளவில் பயன்படுத்தியுள்ளோம்….’
05 0

Posted by  in Latest News

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

நான் இன்று இவ்வாறு முயற்சிப்பது, ஒரு விடத்தை நிறைவேற்றி இரண்டு குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காகும். மின்சாரம் இல்லாத இடங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்காக மாத்திரமல்ல இந்த முயற்சி. இன்று தொடக்கம் இந்த பாடசாலையை ஒரு மின்சார உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்காகவே நாம் இவ்வாறு முயற்சிக்கின்றோம். இது எமது நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய ஒரு கருமமாகும். எமது நாட்டில் இன்று மின்சாரம் இல்லாத வீடுகளை எம்மால் காண முடியாது. இந்தியாவில் நாளொன்றுக்கு 06 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. பாகிஸ்தானில் 5 ½ மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. எனினும், தெற்காசியாவில் 100% வீதம் மின்சாரத்தை வழங்கிய, 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்கும் ஒரேயொரு நாடு இலங்கை தான் என இன்று எம்மால் மிகவும் பெருமையுடன் கூற முடியும்.  இவ்வாறு சிறந்த ஒரு மின்சார விநியோகத்திற்கு மிகவும் அனுகூலமான ஒரு விதத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய வழிமுறையை கண்டுகொள்ள வேண்டும். ஆகையால் தான் நான், சூரியபள சங்கிராமய எனும் நிகழ்ச்சித் திட்டத்தையும் மற்றும் காற்று மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்சார உற்பத்தி முறைமை வசதியையும் ஆரம்பித்தேன்.  அதே போன்று மின்சார உற்பத்திற்கு நாம் இன்று நீர் வளங்களை உச்சளவில் பயன்படுத்தியுள்ளோம்என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.  

இன்று (02 ஆம் திகதி) காலையில், கேகாலை ஸ்ரீசமன் வித்தியாலயத்திற்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி முறைமை வசதியை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,
நாம் தற்பொழுது முயற்சிப்பது நீர் வளங்களை தவிர்து அடுத்து நிலவுகின்ற விலை குறைந்த மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வள முறைமைகளை உபயோகிப்பதற்காகும். அது தான் சூரிய சக்தியும் காற்று சக்தியும். சூரியபள சங்கிராமய நிகழ்ச்சித் திட்டம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளது. அதே போன்று நன்மை பயக்கக் கூடியது. ஒவ்வொருவருக்கும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இந்த மின்சார முறைமை வசதியை பெற்றுக் கொள்ள முடியும். அதனை பெற்றுக் கொள்வதற்கு பண வசதியில்லை எனில், வங்கிக் கடன்கள் பெற்றுக் கொடுக்கப்படும். வங்கிகளுக்கு செல்வதும் கடினம் என்றால் தமது வீட்டு கூரைகளில் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய இந்த முறைமை வசதியை நிறுவிக் கொள்ளும் பொருட்டு வாடகைக்கு கொடுக்க முடியும். அதனூடாக மக்களுக்கு நல்ல வருமானத்தையும் பெற்றுக் கொள்ள முடியும். மக்களுக்கு அதே போல் வருமான வழி பிறக்கும். நான் அரசியல் ரீதியில் இதனை நிறைவேற்றுவது ஏனென்றால் எனக்கு கடமையும் பொறுப்பும் இருக்கின்றது. கேகாலை மக்கள் 18 ஆண்டுகள் என்னை தொடர்ச்சியாக தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். ஆகையால் அவர்களுக்கு செய் நன்றியாக கேகாலை மாவட்டத்தின் ஒவ்வொரு வீட்டையும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய வீடாக மாற்றுவதற்கு என்னால் நடவடிக்கை எடுக்க முடியும்எனவும் கூறினார்கள்.

Leave a comment

* required