‘நான் ஒரு கருமத்தைக் கொண்டு இரு நன்மைகளை அடைய முயல்பவன்……
03 0

Posted by  in Latest News

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

‘பொதுவாக எடுத்து நோக்கும் போது ஒவ்வொரு வருடமும் இலங்கையில் மின்சாரத்திற்கான கேள்வி 10% வீதத்தால் அதிகரிக்கின்றது. இந்த நாட்களில் நிலவுகின்ற அதிக வெப்பம் காரணமாக இந்த ஆண்டும் மின்சாரத்திற்கான அத்தகைய கேள்வி மேலும் அதிகரித்துள்ளது. மின்னொளிக்காக மாத்திரமன்றி வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கும் என அதிகரித்து வருகின்ற மின்சாரத்திற்கான தேவையை உரிய விதத்தில் பூர்த்தி செய்யக் கூடியவாறு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு வழிமுறைக்கு நாம் நகர வேண்டும். அவ்வாறு நாம் நகரும் அத்தகைய மின்னுற்பத்தி வழிமுறையால் மின்சார கட்டணம் குறைவடைவது மாத்திரமன்றி மக்களுக்கு நன்மைகளும் அதிகளவில் கிடைக்கும். அந்த விதத்தில் ஒரு கல்லில் இரு மாம் பழங்களை ஆய்வது போல் ஒரு கருமத்தை கொண்டு இரு நன்மைகளை பெற்றுக் கொள்வதற்காகவே நான் இந்த சூரியபள சங்கிராமய எனும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன்’ என மின்வலு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

இன்று (03 ஆம் திகதி) காலையில் ரம்புக்கன பின்னவெல மகா வித்தியாலயத்திற்கு சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி முறைமை வசதியை வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்..
‘இன்று வரை நிலவிய மின்சாரத்திற்கான அதிகளவு கேள்வியாக 2611 மெ.வொ. மின்சார தேவை கடந்த மாதத்தில் இருந்ததாக எமக்கு அறிக்கையிடப்பட்டது. வருடாந்தம் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து வருவது போல் சுற்றாடல் நிலைமைகளின் அடிப்படையில் அதிகரிக்கின்ற இத்தகைய மின்சாரத்திற்கான கேள்வியை நாம் தொழில் நுட்ப ரீதியாக பூர்த்து செய்ய வேண்டும். இது வரை நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பிரதான வழிமுறையாக நீர் வளத்தை பயன்படுத்தியுள்ளோம். ஏற்கெனவே ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் 40% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நீர் வளங்களிலிருந்தாகும். இது தவிர, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொருட்டு டீசல் மற்றும் நிலக் கரி போன்ற வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனூடாக வளி மாசடைகின்றது. அது மட்டுமன்றி அதிக அந்நியசெலாவணிகளும் வெளிநாடுகளை சென்றடைகின்றன. அவ்வாறு செலவாகும் நிதிகளை குறைத்துக் கொள்ளக் கூடிய வகையில் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூல வளங்களை பயன்படுத்த வேண்டும். ஆகையால்தான் இந்த சூரியபள சங்கிராமய நிகழ்ச்சித் திட்டமும் மற்றும் காற்று சக்தி மூல மின்சார உற்பத்தி முறைமையும் ஆரம்பிக்கப்பட்டன. நான் விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சராக பதவியேற்ற போது 276,000 மக்களுக்கு மின்சாரம் வசதி இருக்கவில்லை. அந்த மக்களால் மின்சாரத்தை பெற்றுக் கொள்வதிலிருந்த தடைகளையும் கஷ்டங்களையும் தேடிப்பார்த்து நான் அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்தேன். ஆகையால் மின்சாரம் தேவைப்படுகின்ற 100% வீதமானோருக்கு மின்சாரத்தை வழங்கக் கூடிய, 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்கக் கூடிய, தெற்காசியாவில் ஒரேயொரு நாடாக இலங்கையை மாறச் செய்ய எம்மால் முடிந்துள்ளது’ எனவும் குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required