09 0

Posted by  in Latest News

காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய கூறினார்.

“நாம் இன்று காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்தை தேசிய ரீதியில் ஆரம்பித்து வைத்தோம். நாம் இன்று செய்வது இதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னர் செய்ய வேண்டியிருந்தவற்றை. ஆகையால் தான் நாம் இப்போது ஆரம்பிக்கும் தேசிய கருமங்களுக்கு சங்கிராமய, முன்னெடுப்பு போன்ற பெயர்களை சூட்டுகின்றோம். இவற்றை ஆரம்பிக்க வேண்டிய காலம் முடிவடைந்திருந்ப்பதால், நாம் இவற்றை சிங்கிராமய அடிப்படையில் மிகவும் துரிதமாகவும் ஒற்றுமையாகவும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது இலங்கையின் மின்சக்தி உற்பத்தியில் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படுகின்ற பிராதன மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி மூலவளங்களாக நீர், சூரிய ஒளி மற்றும் காற்று என்பவற்றை குறிப்பிடலாம்.  இன்று பார்க்கும் போது, நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நீரை உச்சளவில் பயன்படுத்தியுள்ளோம். அதே போன்று சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள் மிகவும் துரிதமாக இலங்கை முழுதிலும் பரந்து வருகின்றன. அதற்கு இடையில் தான் இந்த காற்று சக்திமூல முன்னெடுப்புத் திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். எமது இலக்கு யாதெனில்  2020 ஆம் ஆண்டாகும் போது இந்த நாட்டின் மின்சார உற்பத்தியில் 30% வீதத்தை மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களிலிருந்து உற்பத்தி செய்வதாகும். 2030 ஆம் ஆண்டில் இதனை 50% வீதம் வரை அதிகரிக்க வேண்டும். ஆகையால், காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்திற்கு அதிகளவு பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்”  என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அம்பாந்தோட்டை பெரத்தகந்தவில் நிர்மாணிக்கப்பட்ட காற்று சக்திமூல மின்னுற்பத்திப் பேட்டையைத் திறந்து வைக்கும் தேசிய வைபத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்..,

“எமது நாடு ஒரு தீவாகும். நாட்டை சூழ கடல்கள். ஆகையால் காற்று அதிகளவு கிடைக்கின்றது. இன்றிலிருந்து மக்களுக்கு முடியும் சூரிய சங்கிராம நிபந்தனைகளின் பேரிலேயே காற்று சக்திமூல மின்னுற்பத்திற்கு பங்களிப்பதற்கு. நாம் பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம் இந்தக் கருமத்தில் அதிகம் அதிகம் பங்குகொள்ளுமாறு. அதே போன்று காற்று சக்திமூல மின்னுற்பத்தி முன்னெடுப்புத் திட்டத்திற்கு தேவையான டேர்பைன்களை இந்த நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு எமது உற்பத்தித் தரப்புகளை அதிகளவு ஊக்குவிப்போம். நிகழும் மற்றுமொரு விஷேடத்துவம் தான் இன்று வரை காணப்பட்ட பெரகந்த சூரிய சக்தி மின்னுற்பத்திப் பேட்டை இன்றிலிருந்து மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி உற்பத்திப் பேட்டையாக மாறுவது. எமது சிறார்களுக்கும் மற்றும் முதியோர்களுக்கும் இதனை ஒரு அறிவு விருத்தி, ஆராச்சிப் பேட்டையாக ஆக்கிக் கொள்ளலாம் ” எனவும் குறிப்பிட்டார்கள்.

மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சினதும், இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினதும், இலங்கை மின்சார சபையினதும் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கலாக பல பிரதேச மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required