“அன்று விமலசுரேந்திர அவர்கள் நீர் வலு மின்னுற்பத்தியை சமூகத்திற்கு அறிமுகப்படுத்தியது போல் சூரியபள சங்கிராமய ஊடாக மின்சார நுகர்வோருக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கச் செய்ய வேண்டும்….”
20 0

Posted by  in Latest News

அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

“நன்மையான ஒரு செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். நீர் வலு மின்னுற்பத்தி, நீர் வலு மின்சாரம் என்பன சிறந்தது என்ற நன்மையான செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்வதற்கு அன்று விமலசுரேந்திர அவர்கள் பெரும் பாடுபட்டார்கள். விமலசுரேந்திர அவர்கள் இது தொடர்பான திட்டங்களை தயாரித்து முன்வைத்தாலும் அன்றிருந்த வெள்ளையர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. விமலசுரேந்திர அவர்கள் இறுதியாக தேர்தலில் வாக்குகளை கேட்டு, வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்று, அதிலிருந்துதான் இந்த நீர் வலு மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தார்கள். சூரியபள சங்கிராமயவும் அது போன்ற ஒன்றுதான். அன்று விமலசுரேந்திர அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு நீர் வலுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முயற்சியை வெற்றி காணச் செய்தார்கள். எனினும் இன்று நான் பாராளுமன்றத்திலிருந்து அவ்வாறான ஒரு கொள்கையை செயல்படுத்தினாலும் வெற்றி அடைவது என்பது கடினமான விடயமாகும்” என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

அமைச்சர், கடந்த நாட்களில் கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி முறைமை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே இவ்வாறு தெரிவித்தார்கள்.

இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்..,

“நாம் எரிவாயுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது என்றால் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ரூ. 40.00 தொகைக்கும் அதிகமாக செலவு செய்ய வேண்டும். எனினும், நீரிலிருந்து அத்தகைய ஒரு மின்சார அலகை உற்பத்தி செய்வதற்கு ரூ. 4.00 தொகையை செலவிட்டு உற்பத்தி செய்யலாம். எரிவாயுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படும் சுற்றாடல் விளைவுகள் மிகவும் அதிகம். இன்று, நாம் நீர் வலு மின்னுற்பத்தியில் உச்சளவை அடைந்துள்ளோம். இன்று வரையில் நீர் வலு மின்சார உற்பத்திற்கான நீர்த்தேக்கங்கள் அனைத்தும் குறைந்து வருகின்றன. ப்ரோட்லேண்ட் நீர்த்தேக்கத்தை அமைத்து, மொரகொல்ல நீர்த்தேக்கத்தையும் அமைத்து, இறுதியாக சீதவாக்கை மின்னுற்பத்திக் கருத் திட்டத்தை அமைத்தால் நீர் வலு மின்னுற்பத்திற்காக பயன்படுத்தக் கூடிய சகல நீர் மூலங்களும் முடிவடைந்து விடும். சிறிய நீர் வலு மின்னுற்பத்தி நிலையங்களும் இன்று வரை அதிகளவு தாபிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளன. ப்ரோட்லேண்ட் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட நேரத்தில், நீர் ராப்ட்டிங்களுக்கு தடை ஏற்படும் எனக் கூறி ஒரு பெரும் பிரச்சினை எழுந்தது. எனினும், முன்பிலும் பார்க்க சிறந்த முறையில் நீர் ராப்ட்டிங் செய்ய முடிந்துள்ளது. அந்த சம்பவத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நன்மையான கருமங்களை செய்ய முயற்சிக்கும் போது, புரிந்துணர்வுடன் செயல்பட்டு, நன்மையான கருமங்களை சமூகத்திற்கு எடுத்துச் செல்ல உதவியாக நின்று, நாட்டிற்கும் தமக்கும் நன்மைகளை பெற்றுக் கொள்ள ஒன்றிணைவதற்கு எம் அனைவருக்கும் வலிமையும் சக்தியும் தைரியமும் கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்’ எனக் கூறினார்கள்.

உரிய பிரதேச அரசியல்வாதிகள், இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கலாக அதிகளவான பிரதேச மக்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required