“விழுகின்ற ஒவ்வொரு சூரிய ஒளிக் கதிரையும், ஒவ்வொரு நீர் துளியையும் வீணாகாமல் பயன்படுத்த நிலைபெறுதகு வலு அதிகார சபை ஆயத்தமாகவுள்ளது…” “புதிய மின்வலு சக்தி இராஜாங்க அமைச்சருக்கு எனது வாழ்த்துக்கள்…”
14 0

Posted by  in Latest News

அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

“நிலைபெறுதகு வலு அதிகார சபை இவ்வளவு காலமும் நிருவகித்துச் செல்லப்பட்டிருப்பது மற்றைய தரப்புகளின் கட்டிடங்களிலாகும். இந்த அதிகார சபையை நிரந்தரமான ஒரு கட்டிடத்திற்கு கொண்டு வருவதால் இதன் பணிகள் மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கு பெறும். இந்தக் கட்டிடம் ஒரு விஷேட நிர்மாணமாகும். நிலைபெறுதகு வலு அதிகார சபை மிகவும் சிறந்த சுற்றாடல் நேயமான முறையில் நிர்மாணிக்கப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு வரப்போகுகின்றது. இந்தக் கட்டிடம் மிகவும் சுற்றாடல் நேயமான கட்டிடமாகும். விழுகின்ற ஒவ்வொரு சூரிய ஒளிக் கதிரையும் மற்றும் விழுகின்ற ஒவ்வொரு நீர் துளியையும் வீணாகாமல் பயன்படுத்த நிலைபெறுதகு வலு அதிகார சபை ஆயத்தமாகவுள்ளது. அது மிகவும் முக்கியமானதாகும். இந்த அதிகார சபையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகையால், உண்மையில் நிலைபெறுதகு வலு அதிகார சபை மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதற்கு முன்மாதிரியாக இயங்க வேண்டும். மேலும் ஒரு விஷேடத்துவம் இருக்கின்றது. இன்று, மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்கள், அவர்களின் புதிய பதவியுயர்வு கிடைத்த பின்னர் கலந்து கொள்ளும் முதலாவது வைபவம் இதுவாகும். அனைவரினதும் ஆசீர்வாதம் இத்தருனத்தில் அவருக்கு கிடைக்கும்” என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

நிலைபெறுதகு வலு அதிகார சபைக்காக நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றாடல் நேயமான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள். இந்தப் புதிய சுற்றாடல் நேயமான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 550 மில்லியன் ரூபா தொகையான நிதி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்….

“இந்த நாட்டிலுள்ள சட்டங்களில் மிகவும் ஆக்கபூர்வமான ஒரு சட்டமாக இந்த நிலைபெறுதகு வலு அதிகார சபையினது சட்டத்தை நான் பார்க்கின்றேன். அது போன்ற ஆக்கபூர்வமான பரந்த ஒரு சட்டத்தை நான் காணவில்லை. இந்தத் துறைக்குரிய பல விடயங்களையும், இந்தத் துறையை முன்னேற்றுவதற்குரிய பல விடயங்களையும் மேற்கொள்வதற்கு குறித்த சட்டத்தில் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இந்தப் புதிய கட்டிடத்தில் இருந்து கொண்டு மேலும் ஆக்கபூர்வமான பல விடயங்களை மேற்கொள்ள ஆசீர்வாதம் கிட்டுவதற்கு நான் பிரார்த்திக்கின்றேன். நாம் அநேகமாக ஒரு விடயத்தை ஆரம்பித்தால், அந்தக் கருமத்தை நிறைவு செய்வதற்கு பல பரம்பரை காலம் செல்லும். எனினும், இந்தக் கட்டிடத்தின் விஷேடத்துவம் தான், மிகவும் குறுகிய அதே போன்று குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டமை. அதன் பிரகாரம் இந்த ஆண்டு திசம்பர் மாதம் அளவில் இந்தக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தார்கள்.

Leave a comment

* required