இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக் குறிக்கோளை வெற்றி கொள்ளும் பொருட்டு  சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் உதவியைப் பெற்றுக் கொள்ளல்…. சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தினது (IAEA) பணிப்பாளர் நாயகம் யுக்கியா அமானோ அவர்களின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம்….
15 0

Posted by  in Latest News

விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களுடன் இடம்பெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடல்

இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக் குறிக்கோளை வெற்றி கொள்ளும் பொருட்டு சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் தொழில் நுட்ப உதவியின் ஊடாக அணு சக்தித் தொழில் நுட்பத்தை வியாபிக்கும் நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசு அரசாங்கத்தினது அழைப்பின் பேரில், சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் யுக்கியா அமானோ அவர்கள் ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் அடிப்படையில் நேற்று (14) இலங்கைக்கு வருகை தந்தார்.
மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் அழைப்பிலும் அவரின் பங்குபற்றலிலும் குறித்த பணிப்பாளர் நாயகம் இன்று (15) காலை அணு சக்தி சபையின் புதிய அலுவலக வளாகத்திற்கான அவதானிப்பு சுற்றுலாவில் இணைந்து கொண்டார்.
இன்று வரை, சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் தொழில் நுட்ப உதவியின் ஊடாக, இலங்கை அணு சக்தித் தொழில் நுட்ப பாவனையை நோக்கி நகர்ந்து பாராட்டத்தக்க அளவில் வெற்றி இலக்கை அடைந்துள்ளது. இலங்கை மக்களுக்கு பெரும் சேவையை வழங்குகின்ற பேராதெனிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து இயங்குகின்ற அணு மருத்துவப் பிரிவு, இலங்கை காமா கதிரியக்க நிலையம், நிலையான பரிசோதனைக்கான தேசிய நிலையம் என்பன இவற்றுக்கு இடையில் பிரகாசிக்கின்றன. மேலும் பொது சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் ஊடாக இலங்கை விஞ்ஞானிகளினதும், மருத்துவர்களினதும், பொறியியலாளர்களினதும், உடலியல் மருத்துவர்களினதும் அறிவையும் மற்றும் திறன்களையும் விருத்தி செய்யும் முகமாக பல மட்டங்களிலும் வெளிநாட்டுப் பயிற்சிகள், மாநாடுகள் முதலியவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
மேலும், அதிக பெறுமதியான தொழில் நுட்பத்துடன் கூடிய விஞ்ஞான உபகரணங்களும் மற்றும் இயந்திரங்களும் பெருமளவில், சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்திலிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளன. இங்கு விஷேடத்துவம் யாதெனில் இத்தகைய சில உபகரணங்கள் உள்நாட்டு சந்தையில் கொள்வனவு செய்யக் கூடியதாக இல்லாதிருக்கின்றமையாகும்.
இந்தத் தொழில் நுட்ப வேலைத் திட்டம், சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் மூலம் அதன் உறுப்பு நாடுகளில் அணு சக்தித் தொழில் நுட்ப சாத்தியத்தை அதிகரிக்கின்ற பிராதான பொறிமுறைத் திட்டமாகும். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக, உறுப்பு நாடுகளின் பிரதான குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் பொருட்டு, மனித வளங்களும் மற்றும் பௌதீக வளங்களும் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. இந்த அணு சக்தித் தொழில் நுட்பத்தினது அமைதியான பிரயோகத்தின் அடிப்படையில் மக்களின் சுகாதாரத்தையும் மற்றும் போஷாக்கு நிலையையும் மேம்படுத்துவதற்கும், உணவு மற்றும் விவசாயக் கருத் திட்டங்களுக்கும், நீர் வளங்கள் மற்றும் நீர் மூலங்கள் முகாமைத்துவத்திற்கும், சுற்றாடல் மற்றும் கைத்தொழில் பிரிவுகளின் மேம்பாட்டிற்கும் அது பயன்படுத்தப்படுகின்றது.
சர்வதேச அணு சக்தி முகவர் நிலையம் 1957 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்து, சர்வதேச ரீதியில் இராஜாங்க விவகாரங்கள் மேற்கொள்ளப்படுகின்ற விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப உன்னத மேம்பாட்டிற்கு அர்ப்பணிப்புடன் தொழிற்படும் ஒரு சுயாதீன நிறுவனமாகும். மேலும், இந்த முகவர் நிலையம் உலக கேந்திர நிலையமாக தனது உறுப்பு நாடுகளின் சமூகப் பொருளாதார குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் பொருட்டு அணு சக்தித் தொழில் நுட்பத்தினதும் மற்றும் அணு விஞ்ஞானத்தினதும் அமைதியான பிரயோக நோக்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இடையில், அணு சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் இந்தத் தொழில் நுட்பத்தையும் மற்றும் அறிவையும் சுயதேவைப் பூர்த்தி இலக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் பயன்படுத்துவது முக்கியத்தும் பெறுகின்றது. சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் ஒரு ஆரம்ப உறுப்பு நாடு என்ற ரீதியில்  1957 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகின்ற அதனது தொழில் நுட்ப கூட்டுறவு வேலைத் திட்டங்களின் ஊடாக, நாட்டின் அணு விஞ்ஞானம் மற்றும் அணு சக்தித் தொழில் நுட்பம் என்பவற்றின் முன்னேற்றகரமான பயணத்திற்கு அதிகளவு தொழில் நுட்ப உதவிகளும் நன்மைகளும் இந்த சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
யுக்கியா அமானோ அவர்கள் இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை அணு சக்தி சபையுடன் இணைந்த நிறுவனமாகிய இலங்கை காமா நிலையத்தையும் மற்றும் நிலையான பரிசோதனைக்கான தேசிய நிலையத்தையும் சென்று பார்வையிடவுள்ளார். மேலும், சர்வதேச அணு சக்தி முகவர் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் யுக்கியா அமானோ அவர்கள் இலங்கை அணு சக்தி ஒழுங்குறுத்துகை சபைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

Leave a comment

* required