“சூரிய சக்தி மூல மின்னுற்பத்தியை சமூகமயப்படுத்தும் முகமாக புனித ஸ்தலங்களுக்கும் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி முறைமை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தல்…”
12 0

Posted by  in Latest News

அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

“சூரிய சக்தி மூல மின்னுற்பத்தியானது நாட்டிற்கும், சுற்றாடலுக்கும் அதே போன்று தனிப்பட்ட ரீதியில் மக்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு செயற்பாடாகும். எமது பிரதான நோக்கம் தான் பத்து இலட்சம் வீடுகளை கூரை மீது வைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி வளாகங்களாக மாறச் செய்வது. சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த எண்ணக்கரு மிகவும் சிறந்த, பயன் தரும் ஒரு எண்ணக்கருவாகும். ஆயினும், மக்கள் இது பற்றி அவ்வளவு சிந்திப்பதில்லை. பொதுவாக ஈர்க்கப்பட்ட ஒரு சம்பவம் சமூகமயமாகுவதற்கு அவ்வளவு காலம் எடுப்பதில்லை. துரதிர்ஷ்டமாக பயனற்ற விடயங்கள் சமூகமயாகுகின்றன. எனினும், இவ்வகையான ஒரு எண்ணக்கருவை சமூகமயமாக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். ஆகையால், ஒவ்வொரு வீட்டையும் மேலே கூறியது போல் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னிலையமாக மாறச் செய்வதுடன், நாட்டிலுள்ள புனித ஸ்தலங்களுக்கும் மற்றும் பிரதானமாக அரச நிறுவனங்களுக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி முறைமை வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதனூடாக மக்களை இது பற்றி விழிப்பூட்டுவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். இன்று, நாங்கள் கேகாலை மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கும் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி முறைமை வசதிகளைப் பெற்றுக் கொடுத்தோம். இன்றிலிருந்து, இந்த அலுவலகங்களின் மின்சாரக் கட்டணம் ரூ.0 தொகையாகுவது போல், இங்கு பணியாற்றுகின்ற அலுவலர்கள் மத்தியிலும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த எண்ணக்கருவை சமூகமயப்படுத்தும் பணியை மிகவும் சிறந்த முறையில் மேற்கொண்டு இலங்கையிலுள்ள வீடுகள் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை செய்யும் வளாக நிலையங்களாக விரைவில் மாறும்”  என மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சுட்டிக் காட்டினார்.

கடந்த தினங்களில் கேகாலை மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கும் சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய மின்னுற்பத்தி முறைமை வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்..,

“சூரியபள சங்கிராமய என்றழைக்கப்படும் ஒரு அனுகூல எண்ணக்கருவை நாம் இன்று சமூகமயப்படுத்தி வருகின்றோம். எமது நாட்டில் 40% வீதமான மின்சாரம் நீர் வலு மின்சாரமாகும். எனினும், எமக்கு கிடைக்கின்ற மழைவீழ்ச்சியில் 03 வருடாங்களாக ஏற்றத்தாழ்வு நிலவி வருகின்றது. இதற்கு இடையில், நாம் நீர்த்தேக்கப் பிரதேசங்களுக்கு மழையை பெய்விக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு செயற்கை மழையை உருவாக்கக் கூடிய ஆக்கவுரிமை சான்றிழ் இருப்பது தாய்லாந்து நாட்டிற்காகும்.  1950 ஆம் ஆண்டுகளிலிருந்து அந்த நாட்டில் செயற்கை மழை பெய்விக்கப்பட்டு வருகின்றது. மழை மேகங்கள் நிறைந்த வானத்தில் அந்த மழை மேகங்கள் கலைந்து செல்வதற்கு இடமளிக்காது, எமக்கு தேவையான இடத்தில் அந்த மழையை இந்த செயற்கை மழை உருவாக்கும் திட்டத்தின் மூலம் பெய்விக்க முடியும். சூரியபள சங்கிராமய என்பது அது போன்று ஒரு செயற்பாடுதான். சூரிய சக்தியிலிருந்து உச்சளவில் பயன் பெறுவதற்குதான் இந்த ஒவ்வொரு சூரிய கதிரிலிருந்தும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு நாம் இந்த சூரியபள சங்கிராமய எனும் திட்டத்தை ஆரம்பித்தோம். ஒரு வீட்டில் இந்த மின்னுற்பத்தி முறைமை வசதிகளினால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின்சார அலகுக்கு ரூ. 22.00 தொகையான கட்டணத்தை செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபை உடன்பட்டுள்ளது. இது நல்லதொரு கட்டணத் தொகையாகும். தனியார் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு இந்த விலை கொடுக்கப்படுமாயின், அந்த நிலையங்கள் வரிசையில் வந்து நிற்கும்” என குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required