மின்சாரப் பற்றாக்குறைக்கு செயற்கை மழை மூலம் தீர்வுகாணல்…
26 0

Posted by  in Latest News

அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய
மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்

மழையில்லாத காலநிலையின் காரணமாக நீர் வலு மின்னுற்பத்திற்கு ஏற்படும் தடைகளைத் தாண்டி தொடர்ச்சியாக ஒரு நீர் வலு மின்னுற்பத்தியைப் பேணும் பொருட்டு தாய்லாந்து அரசாங்கம் வழங்கும் தொழில் நுட்ப உதவியைக் கொண்டு இலங்கையில் செயற்கை மழையை உருவாக்கும் கருத் திட்டம் தொடர்பான மாநாடு கடந்த தினங்களில் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் பங்குபற்றலில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்……

”எமது நாட்டின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில் 40% வீதத்திற்கும் அதிகமான அளவு நீர் வலுவிலிருந்து உற்பத்தி செய்யப்படுவது என்பது நாம் பெரும் மகிழ்ச்சி அடைய வேண்டிய ஒரு விடயமாகும். எமது அந்த மின்சார உற்பத்திற்கான செலவு, பல உற்பத்திகளினூடாக பகிர்ந்து செல்வதால் குறைந்த செலவில், சுற்றாடலுக்கு மிகவும் நேயமான முறையில் மின்சாரத்தை எம்மால் உற்பத்தி செய்ய முடியுமாக இருக்கின்ற போதிலும், பல வருடங்களாக நிலவி வருகின்ற மழை பெய்யும் போக்கிலுள்ள வித்தியாசம் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. பல வருடங்களாக பருவப் பெயர்ச்சி மழை சரியாக கிடையாத காரணத்தால் 2016 ஆம் ஆண்டு எமது நாட்டின் மொத்த மின்சக்தி உற்பத்திக் கொள்திறன்  26% வீதம் வரை குறைவடைந்தது. இத்தகைய காரணங்களினால், 1950 ஆம் ஆண்டிலும் கூட செயற்கை மழையை உருவாக்குவது தொடர்பில் ஆக்கவுரிமை சான்றிதழுடைய உலகத்தில் ஒரேயொரு நாடான தாய்லாந்தின் தொழில் நுட்ப உதவியுடன் இலங்கையில் செயற்கை மழையை உருவாக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆதலால் நீர் வலு மின்னுற்பத்தி, விவசாயம் மற்றும் குடி நீர் ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் விஷேடமாக நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக” கூறினார்கள்.

தாய்லாந்தின் தூதுவர் மாண்புமிகு சூலமணி சார்ட்டுவஸ் (Chulamanee Chartsuwar) உள்ளிட்ட விஷேட அதிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இது தொடர்பான தொழில் நுட்ப அறிவைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம், மகாவலி அமைச்சு, இலங்கை விமானப் படை, நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற பல நிறுவனங்களின் பல நிபுணர்களும் மற்றும் தொழில் நுட்ப நிபுணர்களும் பங்குபற்றினர். இந்த மாநாட்டில் மின்வலு மற்றும் மீளப் புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.எம்.எஸ். பட்டகொட அடங்கலாக பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

Leave a comment

* required