17 0

Posted by  in Latest News

நாளைய தினம் சேவைக்கு அறிக்கையிடுங்கள்

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் 

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு நாட்களுக்கும் சம்பளத்துடனான லீவாக கருதி ஊழியர்களுக்கு லீவு வழங்குமாறு மின்சார சபையின் நிருவாக சபைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள் விஷேட செய்தியொன்றினூடாக தொிவித்தார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறுவது போல் அரசாங்கத்துடனும், அமைச்சுடனும், என்னுடனும் பிரச்சினைகள் அவர்களுக்கு இல்லை. அது நிறுவனம் என்ற வகையில் உள்ளக ரீதியில் நிலவும் ஒரு பிரச்சினையாகும். ஆகையால், நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியாக செல்வாக்கு செலுத்தும் மின்சாரத்தை, துண்டிக்காமல் இடையறாது வழங்குவதற்கு, அனைவரையும் நாளைய தினம் (18) சேவைக்கு அறிக்கையிடுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன். பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான கதவுகள் இன்னும் திறந்திருக்கின்றன. 

Leave a comment

* required