16 0

Posted by  in Latest News

இன்று இலங்கை மின்சார சபையில் எமது சகோதர்கள் சிலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பல காரணங்களை முன்வைத்திருந்தார்கள். அவற்றில் ஒன்றுதான் இலங்கை மின்சார சபையின் மோசடியையும் வீண்விரயத்தையும் ஒழிப்பது. இந்த சகோதரர்களுக்கு என்னால் பொறுப்புடன் கூற முடியும் எனது பதவி காலம் தான் மின்சார சபையின் மோசடியும் வீண்விரயமும் குறைந்த காலம். கொள்வனவு செய்ய முடியுமான எதுவாக இருந்தாலும் போட்டி விலையில் தான் நாங்கள் கொள்வனவு செய்கின்றோம். அதன் நோக்கம் தான் போட்டியினூடாக வீண்விரயத்தைக் குறைப்பது. உதாரணமாக, அவசரநிலையிலான மின்சக்திக் கொள்வனவாக இருந்தால், அமைச்சருக்கு அதிகாரம் இருக்கின்றது கொள்வனவு செய்து விட்டு அதன் பின்னர் அமைச்சரவைக்கு அறியப்படுத்துவதற்கு. என்றாலும், எல்லா நேரங்களிலும் நான் என்ன செய்தேன் என்றால் சர்வதேச ரீதியில் கேள்வி விலைகளை அழைத்து மின்சக்தியை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்தேன். இது வரை இருந்த சூரிய சக்தி, காற்று மூல சக்தி ஆகியவற்றை போட்டி விலையில் கொள்வனவு செய்து ரூ. 23.00 என்ற விலையிலிருந்தவற்றை 12.00 ரூபாவாவுக்கும் 11.00 ரூபாவாக்கும் குறைத்துள்ளோம். பிரச்சினைகள் இருக்கலாம். மேலும் நாம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். என்றாலும் என்னால் பொறுப்புடன் கூற முடியும், இந்தக் காலப் பகுதி தான் இலங்கை மின்சார சபையின் வீண்விரயமும் மோசடியும் குறைந்த காலம் என்று.

இரண்டாவது விடயம் தான் ஊழியர் சேமலாப நிதியத்தின் நிதிகள் தகாத முறையில் பயன்படுத்தப்பட்டமை.  இது தொடர்பில் நான் நடவடிக்கை எடுத்தேன். 2008 – 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தான் இது நிகழ்ந்திருந்தது. எனக்கு கிடைத்த முதலாவது தகவலை அடிப்படையாக் கொண்டு நான் விசாரணைகளை ஆரம்பித்தேன். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணையும் நடத்தப்பட்டது. ஒரு குற்றவியல் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அது மட்டுமன்றி தொழில் அமைச்சில் ஒரு விசாரணையும், ஒரு உள்ளகக் கணக்காய்வு விசாரணையும் நடத்தப்பட்டன. இவை தவிர ஒரு சிவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே மத்திய வங்கி உடன்பட்டுள்ளது அதில் அரைவாசியை எங்களுக்கு செலுத்துவதற்கு. அந்த அரைவாசியை நாம் பெற்றாலும், நாங்கள் கலந்துரையாடி எஞ்சிய அரைவாசியை வழக்கு தாக்கல் செய்தாவது பெற்றுக் கொள்வோம். அந்த நிதியை பெற்றுக் கொள்வதும், குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதும் இந்த யுகத்திலேயே தான் ஆரம்பமாகின.

மூன்றாவது, அவர்கள் கூறுகின்றார்கள் கட்டண அதிகரிப்பு பற்றி. இந்த யுகத்தில் தான் இலங்கை மின்சார சபை நிதி சவால்களுக்கு அதிகளவில் முகம்கொடுத்தது. அது யாருடைய குற்றத்தினாலும் அல்ல. காலநிலை, வானிலை ஆகியவற்றில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. 30 வருடங்களின் பின்னர் அதிக வரட்சி ஏற்பட்டது. ஆதலால் தான், இந்த வருடம் ஆரம்பத்தில் நாம் மதிப்பீடுகளை தயாரித்தோம், 100% மின்சாரத்தை விநியோகித்த நாடு என்ற ரீதியில் இடையறாமல் மின்சாரத்தை விநியோகிப்பதற்கு எரிபொருளுக்காக மேலதிக செலவு ஏற்படும் என. இது பற்றி நான் அமைச்சரவைக்கு அறிவித்தேன். இது தொடர்பில் பிரதியீடாக மின்சாரக் கட்டணத்தை நாம் ஒரு போதும் அதிகரிக்க தயாரில்லை என.

இதனை இடர் முகாமைத்துவ நிதியாக அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இவ்வாறு மேலதிகமாக செலவாகும் தொகையை திறைசேரியிலிருந்து செலுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் எனக்கு உறுதுணையாக இருந்தனர். ஏற்கெனவே 6 பில்லியன் நிதி திறைசேரியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டுமானால் அவ்வாறு அதிகரிக்க வேண்டிய காலத்தை நாம் தாண்டி விட்டோம். முதலாவது தடவையாக அரசாங்கத்தின் திறைசேரியிலிருந்து நிதிகளைப் பெற்று பொது மக்களுக்கு சுமையை திணிக்காமல் செயல்பட்ட யுகம் இது தான்.

அடுத்ததாக அவர்கள் கூறுவது மின்சார சபையின் NVQ மட்ட சேவையை நிறுத்துமாறு. ஏறக்குறைய 7000 ஊழியர்கள் தமது சேவையில் நிரந்தரமாக்கப்படாமல் இருந்தனர். அவர்கள் தற்பொழுது நிரந்தர சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது NVQ மட்ட ஊழியர்கள் பயிலுநர்களாக ஆட்சோ்த்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் நிரந்த சேவைக்கு ஒரு ஆவணத்துடன் இலங்கை மின்சார சபையின் தரத்தையும், தொழிலையும் பாதுகாக்கும் வகையில் இந்த நாட்டில் தொழில்நுட்ப அறிவு இன்றிய இளைஞர் யுவதிகளுக்கு தொழில்நுட்ப அறிவுடன் இலங்கை மின்சார சபையின் நிரந்தர சேவையில் இணைவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமான விடயம் தான் அவர்கள் பேசும் சம்பள முரண்பாடு. 2014 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட சம்பள முரண்பாடு பற்றி தான் இப்போது கதைக்கப்படுகின்றது. இது மிகவும் சிக்கல் வாய்ந்தது. ஒரு குழுவினர் கூறுகின்றனர் அந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கக் கூடாது என. ஏனைய குழுவினர் கூறுகின்றார்கள் இல்லை, எமக்கு சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்று. இந்த இரண்டு குழுவினரும் பெரும் இழுபறியில் இருக்கும் போது, இந்த அனைத்து குழுக்களுடனும் பேச்சுவார்த்தையை நடத்தி, அமைச்சின் செயலாளரினது தலைமையில் குழுவொன்றை நியமித்து, அந்தக் குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் மிகவும் ஜனநாயக ரீதியில் ஒவ்வொரு தொழிற் சங்கத்திற்கும் இது பற்றி கருத்துக்களை முன்வைக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில் தான் வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது.

எமக்கு பொறுப்பு இருக்கின்றது. நாங்கள் ஐம்பத்து ஐந்து இலட்சம் மக்களுக்கு மின்சாரத்தை வழங்கியிருக்கின்றோம். இந்த அனைத்து மக்களினதும் தேவையை பாதுகாப்பது எங்களுடைய பொறுப்பு. நான் மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன் இந்த சகோதரர்களிடமிருந்து, இலங்கை மின்சார சபையின் நன் மதிப்பை பாதுகாக்குமாறு. தயவு செய்து சேவைக்கு அறிக்கையிடுங்கள். நாங்கள் எப்பொழுதும் மிகவும் சுமுகமாக பேசித்தீர்க்கும், அந்தப் பேச்சுவார்த்தையின் பிரகாரம் தீர்மானம் எடுக்கும் குழுக்களாக எம்மை அவர்கள் இனங்கண்டிருக்கின்றார்கள். ஆகையால், இந்த நாட்டிலுள்ள நுகர்வோருக்கு எங்களது உள்ளகப் பிரச்சினையினால் அசௌகரிகங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம். ஒவ்வொரு பிரச்சினையையும் செயல் சாத்தியமான முறையில் பாருங்கள். இரண்டு குழுக்கள் இரண்டு பக்கங்களாக நின்று முடிவின்றி கண்மூடித்தனமாக கதைக்கும் போது, அதற்காக ஒரு நடுநிலையான தீர்மானத்தை எட்டுவது மிகவும் கடினமாகும். அந்த கடினமான விடயத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு எல்லோரும் ஒத்துழைத்து அதிகளவில் உதவுங்கள்.

Leave a comment

* required