15 0

Posted by  in Latest News

மிகவும் அற்பசொற்ப அளவான மின்சார முறிவுகள் மாத்திரம் இடம்பெற்றாலும் நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடிந்தது என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

உற்பத்திப் பிரிவு             – 100%

மின்சார செலுத்துகைப் பிரிவு      – 100%

மின்சாரப் பகிர்ந்தளிப்புப் பிரிவு            -  65%

என்ற அளவுகளில் செயற்பட்டன. அதற்காக ஒத்துழைத்த ஊழியர்களுக்கு தனது நன்றியைத் தொிவிப்பதகாக அமைச்சர் அவர்கள் மேலும் கூறினார்கள்.

மனிதாபிமான நிலையை கருத்திற் கொள்ளாமலும், மருத்துவர்களின் வேண்டுகோளை உதாசீனப்படுத்தி விட்டும் தேசிய வைத்தியசாலையில் மின்சார சபை ஊழியர்களை சேவையிலிருந்து தடுத்தமையானது வேலை நிறுத்தத்தில் பதிந்திருக்கும் மனோநிலையை பிரதிபலிப்பதாக அமைகின்றது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

எந்த விதமான தடைகள் வந்தாலும் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்

Leave a comment

* required