14 0

Posted by  in Latest News

இ.மி.ச. ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்திய போது மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி அவர்கள் குறிப்பிட்டார்கள்.

தொழிற் சங்கங்கள் மூலம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தும் வேலை நிறுத்ததிற்கு செல்வது அவ்வளவு நியாயமானதல்ல என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள். மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் வளாகத்தில் ஏற்கெனவே இடம்பெற்று வரும் விஷேட பேச்சுவார்த்தையின் போது கலந்து கொண்ட இ.மி.ச. தொழிற் சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (14) இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள், ஊழியர்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அதற்கு தீர்வைப் பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள். எழுந்திருந்த சில பிரச்சினைகள் கடந்த அரசாங்கம் விட்டுச் சென்றவை எனவும், அன்று இது பற்றி கதைப்பதற்கு எந்த ஒரு மேடையும் இல்லாதிருந்தவர்களுக்கு அவ்வாறு கதைப்பதற்கு மேடையொன்று உருவாகும் போது ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தான் நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்ட அவர், இந்த நிலைமையில் மின்சார நுகர்வோருக்கு எந்தவிதமான பிரச்சினையும் நிகழ்வதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தெளிவாக குறிப்பிட்டுக் கூறினார்கள்.

இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Leave a comment

* required