நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் அமைச்சர். எனது பிரதி அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான காத்திரமான ஒரு உறுப்பினர்.   இருந்தாலும் எமக்கு அதனால் எமது பயணத்திற்கு எந்தவிதமான தடையும் கிடையாது………
06 0

Posted by  in Latest News

நேற்று நான் நீல நிற ஆடை அணிந்து மணித்தியால கணக்காக கட்சியின் மாநாட்டிற்காக பெரும் ஊர்வலம் சென்றேன். இன்று நாங்கள் இந்த இடத்தில் அமர்ந்து இந்த நாட்டிற்கு, மின்சார சபைக்கு தேவையான ஒரு கைத்தொழிற்சாலையை திறப்போம். இதில் ஏதாவது பிரச்சினை, தவறு இருக்கின்றதா. தம் பாதங்களில் நின்று முன்னேற முயற்சிக்கின்றவர்கள் இருக்கின்ற, அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாட்டில் இது தான் எமக்கு தேவை. நாம் எத்தனை தசாப்தங்களாக அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று கூறுகின்றோம். இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடு என்று கூறும் நிலைக்கு நாங்கள் கொண்டு செல்ல வேண்டும். எமது முக்கிய நோக்கம் அதுவாக தான் இருக்க வேண்டும். அதன் பின்னர் எமக்கு அரசியல் செய்ய முடியும். எமக்கு ஒரு அசியல் இருக்க வேண்டும். சுயாதீனமாக இருக்க வேண்டும். கட்சியை நேசிக்க வேண்டும். கட்சியைப் பாதுகாக்க வேண்டும். என்றாலும் அதற்கு எல்லாம் மேலாக இந்நாட்டு மக்களையும் எங்களது எதிர்கால சந்தியினரையும் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் அமைச்சர். எனது பிரதி அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான காத்திரமான ஒரு உறுப்பினர். இருந்தாலும் அதனால் எமது பயணத்திற்கு எந்தவிதமான தடையும் கிடையாது என அமைச்சர் குறிப்பிட்டார்.

நல்லிணக்க அரசாங்கத்திற்கு 02 வருடங்கள் நிறைவை முன்னிட்டு இன்று (04* களிகமுவ கைத்தொழிற்சாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாணிவாசிப்பு பெட்டிகளை உற்பத்தி செய்யும் கைத்தொழிற்சாலையை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட நேரத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா அவர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டார்கள்.

150 மில்லியன் ரூபா முதலீட்டு ஆகுசெலவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கைத்தொழிற்சாலையின் மூலம் பிரதேச இளைஞர் யுவதிகள் பலருக்கு தொழில்வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை மின்சார சபையுடன் முற்றிலும் இணைந்திருக்கின்ற ஸ்ரீ லங்கா எனெர்ஜீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இந்தக் கைத்தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது. இந்தக் கைத்தொழிற்சாலை மணித்தியாலத்திற்கு 100 மாணிவாசிப்பு பெட்டிகளை உற்பத்தி செய்யக் கூடிய கொள்திறனை கொண்டுள்ளது. மிக நவீன இயந்திர உபகரணங்களைக் கொண்டுள்ள இந்த புதிய கைத்தொழிற்சாலை மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் மாணிவாசிப்பு பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ.பீ. கனேகல, சபரகமுவ மாகாண சபை உறுப்பினரும் ஆளும் கட்சிப் பிரதான அமைப்பாளருமான ஹர்ஷ சியம்பலாபிட்டிய, மாகாண சபையின் எதிர் கட்சித் தலைவர் டப்ளியூ.ஏ. சோமதாச ஆகியோர் அடங்கலாக பலரும் கலந்து கொண்டனர். 

Leave a comment

* required