சகல அரச நிறுவனங்களினதும் கூரைகளை சூரிய சக்தி மின்னுற்பத்தி வசதிகளாக ஆக்குவோம் …..
08 0

Posted by  in Latest News

“இந்த நாட்களில் செயற்படுத்தப்படுகின்ற ஒரு கருத்திட்டம் தான் சூரியபள சங்கிராமய. எனது முயற்சிதான் 10 இலட்சம் வீடுகளின் கூரைகளை மின்னுற்பத்தி வசதிகளாக ஆக்குவது. இதன் நிமித்தம் அனைவரையும் ஊக்குவிக்குவிப்பதற்காக பல உபாயங்களைப் பயன்படுத்தினோம். சகல பௌத்த விகாரைகளுக்கும் சூரிய சக்தி மின்னுற்பத்தி வசதிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. நான் கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுக் கொண்டேன் சகல அரசாங்க நிறுவனங்களினதும் கூரைகளை மின்னுற்பத்தி வசதிகளாக ஆக்குவதற்கு. இன்னும் 2 மாதங்களில் புனித மகளிர் பாடசாலையினது கூரையையும் சூரிய சக்தி மின்னுற்பத்தி வசதியாக ஆக்குவோம்” என அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் கூறினார்கள்.

கேகாலை புனித யோசப் மகளிர் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்………..

” ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது எமது நாட்டின் கல்வி மட்டம் உயர்ந்த அளவில் காணப்படுகின்றது. எமக்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது. இன்று கல்விக்கும் நாட்டின் தேவைக்கும் இடையில் பரந்தவொரு இடைவெளி காணப்படுகின்றது. ஒரு இலட்சம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கினோம். இதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறிருந்தாலும் தற்பொழுதும் அத்தனை எண்ணிக்கையான பட்டதாரிகள் இருக்கின்றனர். இந்த விடயங்கள் இவ்வாறிருப்பதற்கு கல்விக்கும் நாட்டின் தேவைக்கும் இடையில் பரந்தவொரு இடைவெளி இருக்க வேண்டும். எல்லா கல்விப் பிரிவுகளும் இறுதியில் தொழிலாக மாறவேண்டும் என்றில்லை. அவ்வாறிருந்தால் உலகம் முன்னோக்கிச் செல்லாது. கலை, உரை போன்ற பல பிரிவுகள் இருக்க வேண்டும். எல்லோருக்கும் தொழில் வாய்ப்பை நோக்கிய கல்விப் பிரிவொன்று காணப்படுமாயின் இன்றிருக்கின்ற நன்மை ஏற்படாது. உலகத்தில் பல நாடுகள் கல்வியை இன்று அந்த நிலைக்கு உயர்த்தியுள்ளன. தொழிலுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தொழிலற்ற பட்டதாரி சங்கங்கள் உருவாகப் போவதுமில்லை. அதற்கு எமது நாட்டில் செய்ய வேண்டிய ஒரேயொரு விடயம் தான் பிள்ளைகளை தொழில்நுட்பத்தின் பால் நகரச்செய்வது. இது அந்த நாட்களில் எடுக்கப்பட்ட சிறந்த செயல்முறை ரீதியான ஒரு தீர்மானமாகும். இது இலகுவானவொரு காரியமல்ல. அரசாங்கத்தின் கொள்கையை மாற்றி நாம் அனைவரும் ஒன்றாக இணைந்த செய்ய வேண்டிய ஒரு கருமமாகும். இது தொழில்நுட்பத்தை நாட்டிற்கும், மற்றும் பிள்ளைகளுக்கும் பெற்றுக் கொடுப்பது போலவே பிரபல பாடசாலைகளை நோக்கி ஈர்த்தெடுப்பதற்குமுள்ள ஒரு நடவடிக்கையாக மாறியது. பிரபல்லியம் அடையாத பாடசாலைகளுக்குத் தான் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் வழங்கப்படுகின்றன. சட்டத்தை மாற்ற முடியாது. இதில் இரண்டு அபிலாஷைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் தொழில்நுட்பத்தைக் கற்பித்தல் மற்றையதுதான் நாட்டின் கடும் போட்டிற்குத் தீர்வுகாணுதல்” எனவும் குறிப்பிட்டார்கள்.

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் 

 

Leave a comment

* required