01 0

Posted by  in Latest News

“இந்த நாட்களில் குறிப்பாக பலர் பேசிக் கொள்கின்றனர் மின்வெட்டு அமுலாக்கப்படுமா, மின்வெட்டை அமுலாக்கத் தயாரா, ஒத்திகையா என்றெல்லாம்.  நாம் மிகவும் சவால்கள் நிறைந்த நிலைக்கு முகம்கொடுத்திருக்கின்றோம். குறிப்பாக இன்று, இது வரை நிலைமையைப் பார்க்கும் போது, நாளாந்த மின்சாரத் தேவை 44 ஜி.வொ.ம. என்ற அளவை விஞ்சிச் சென்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த நாட்களில் நாளாந்த மின்சாரத் தேவை இருந்தது 40 ஜி.வொ.ம. என்ற அளவிலாகும். இந்த நிரலில் பார்க்கும் போது 10% வீத மின்சாரத் தேவை அதிகரிப்பு ஒன்று இந்த வரண்ட காலநிலை காணரமாக ஏற்பட்டுள்ளது. எமது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நீர் கொள்ளளவு 36% வீதம் வரை குறைவடைந்துள்ளது. ஒரு சில நீர்த் தேக்கங்களின் நீர் கொள்ளளவு 20% வீதம் வரை குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. எமது மிகப் பிரதான  மின்னுற்பத்தி நிலையமாக விளங்கும் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தில் 300 மெ.வொ. மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு இயந்திரம் பழுதுபார்ப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அதே போன்று தனியார் துறை மின்னுற்பத்தி நிலையமான சொஜிஸ்டிஸ் மின்னுற்பத்தி நிலையத்திலும் 60 மெ.வொ. மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு இயந்திரம் பழுதுபார்ப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து வகையான சவால்களுக்கு மத்தியிலும் நீர் வலு மின்னுற்பத்தி குறைவது என்பது எமக்கு குறிப்பாக அனல் மின்னுற்பத்தி அனைத்தையும் இயங்கச் செய்ய நேரிடும். நாம் இது பற்றி மக்களுடனும் அதே போன்று அரசாங்கத்துடனும் கதைத்தோம். எமக்கு இந்த 2017 ஆம் ஆண்டு முதாலவது 6 மாத காலத்தினுள் நீண்டகாலம் தொடர்ச்சியாக வரட்சி நிலவினால் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க வேண்டுமானால் 51 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை செலவிடுவதற்கு நேரிடும் என நாம் கணிப்பிட்டிருந்தோம். நாம் ஒரு விதத்தில் மகிழ்ச்சியடைகின்றோம். அவ்வாறு கணிப்பிடப்பட்ட 52 பில்லியன் ரூபா மேலதிக செலவை முதலாவது 6 மாதத்தில்   38 பில்லியன் ரூபா வரை குறைக்க முடிந்தமைக்கு. விஷேட முகாமைத்துவம், விஷேட முறைகள் ன்பவற்றின் மூலம், முடியுமான எல்லா நேரங்களிலும் செலவு தொடர்பில் தீர்மானமெடுத்தல், நாம் எந்தவொரு கொள்வனவாக இருந்தாலும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விதத்தில் அதனை மேற்கொள்ளல் போன்றவற்றின் காரணமாகத்தான் எம்மால் இந்த நிலையை அடைய முடிந்தது. அதே போன்று எதிர்காலத்திலும் அவ்வாறான சவால்களுக்கு மத்தியில் நாம் எதிர்பார்க்கின்றோம் திறைசோியினதும், அரசாங்கத்தினதும் உதவியுடன் மின்வெட்டை அமுல்படுத்தாமல் அல்லது மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்  

Leave a comment

* required