நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவு, நீர் வலு மின்னுற்பத்திற்கு ஓர் சவால்……
28 0

Posted by  in Latest News

“சற்று எளிதாகப் பார்த்தால், குறைந்தளவான வளங்களை அதிக தேவைகளுக்கு மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்துவது சக்தி முகாமைத்துவமாகும். மின்சக்தியின் பால் பார்த்தாலும் அது மிகவும் முக்கியமானதாகும். நான் எப்பொழுதும் காலையில் எமது மின்சார சபைக்கு சொந்தமான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களை அறிவது  வழக்கம். காலையில் வந்தவுடனேயே அமர்ந்து அது பற்றிய அறிக்கையைத் தான் பார்ப்பேன். இன்று வெள்ளப் பெருக்குகள் முடிவடைந்து பாதிப்புகளுக்கான நிவாரணங்களை கணக்கிட்டு வருகின்றோம். ஆனால் எங்களிடம் நாட்டிலுள்ள நீர்த் தேங்கங்களில் நீர் இருக்கும் அளவு 36.4% வீதமே. விக்டோரியா, ரந்தெனிகல ஆகிய நீர்த் தேக்கங்களின் நீர் மட்டங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. மழை கிடைக்காமை இதற்கான காரணமாகும். அமைச்சரவைக்கும் இது பற்றி அறிவித்திருக்கின்றேன்.  பெப்ருவரி மாத்தில் இவ்வாறான ஒரு நிலைமையில் எமக்கு எந்தளவு மேலும் மேலதிகமாக செலவு செய்ய நோிடும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

இன்று (28) ஆம் திகதி காலையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த சக்தி முகாமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…..
“இந்த நாட்டில் 100% வீத மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது. நாம் ஒரு நொடிப்பொழுதும் மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை. இப்பொழுது கடந்த 2 நாட்களில் தொழில்நுட்ப ரீதியில் எனக்கு ஒரு யோசனை எழுந்தது. 2 மணித்தியாலங்களாவது உச்சநேரத்தில் (Peak Time) மின்வெட்டை அமுல்படுத்தலாமா என்று. காரணம் டீசல் பிரச்சினை. என்றாலும் நாட்டின் தேவையில் எல்லாம் சமாளித்து, எந்த விதமான பிரச்சினையும் இன்றி அந்த நிலைமையை எம்மால் சமாளிக்க முடிந்தது. சரி, தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் பொருட்டு நாம் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற விடயங்களை நான் அமைச்சரவைக்கு முன்வைத்தேன். நாம் சாதாரணமாக கணிப்பிட்டோம். எமக்கு 52 பில்லியன் நிதி மேலதிகமாக செலவு செய்ய நேரிடும் என்று. நல்ல நேரத்திற்கு காசல்ரியிலிருந்து சிறிதளவு கிடைத்ததால், அதனைக் குறைத்து இப்பொழுது 38 பில்லியன் வரை செலவைக் குறைக்க எம்மால் முடிந்து்ளளது. அமைச்சரவை எனக்கு உதவதாகக் கூறியது. எனினும் இந்தக் குறைந்தளவான வளங்களைக் கொண்டு எவ்வாறு நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்வது என்று சிந்திக்க வேண்டிய ஒரு யுகம் இது. ஆகையால், உங்களது வழிகாட்டல்கள், தூரநோக்கு என்பன எமக்கு மிகவும் முக்கியமாகும். ஆதலால் இத்தகைய மாநாடு, இத்தகைய குழு, இத்தகைய ஒழுங்கமைப்பு என்பன நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியம்” எனவும் குறிப்பிட்டார்கள்.

ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர்  

Leave a comment

* required