கடந்த கால அனர்த்தங்களின் போது மின்சாரத்தை விநியோகிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இ.மி.ச. ஊழியர்களின் சேவைக்கு பாராட்டு…
30 0

Posted by  in Latest News

இலங்கை மின்சார சபையின் ஊழியர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு வைபவம் நேற்று (29) ஆம் திகதி காலை நேரத்தில் இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த கால அனர்த்தங்களின் போது உயிரை துச்சமாக மதித்து தொடர்ந்தும் மின்சாரத்தை மின்சார நுகர்வோருக்கு வழங்கும் நிமித்தம் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இ.மி.ச. ஊழியர்களுக்கு அவர்களை மதித்துப் பாராட்டும் முகமாக இந்த வைபவத்தில் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்…..

‘ஒரு பிரச்சினையை பல கோணங்களில் பார்க்கலாம். அவ்வாறு பல கோணங்களில் பார்க்கும் போது அந்தப் பிரச்சினை பல விதங்களில் தென்படும். அது ஒரு நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும். ஆகையால், ஒரு நிறுவனம் என்ற ரீதியில் ஒரு பிரச்சினையை ஒரே கோணத்தில் பார்க்க வேண்டும். எல்லா பிரச்சினைகளுக்கும், எப்பொழுதும் எல்லா தரப்புகளினாலும் 100% வீதம் தீர்வுகண்டு நன்மையடைய முடியாது. ஆயினும், ஒரு நிறுவனம் என்ற ரீதியில் நாங்கள் எப்பொழுதும் சிந்திக்க வேண்டும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வுகாண்பதற்கு. நாட்டில், அலுவலகத்தில் போன்று வீட்டிலும் பிரச்சினைகளுக்கு கூட்டாக தீர்வுகாண வேண்டும்’ என அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் கூறினார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் சியம்பலாபிட்டிய அவர்கள்……

‘இன்று உழியர் தினம். நான் நினைக்கின்றேன் இலங்கை மின்சார சபையின் ஒவ்வொரு நாளும் ஊழியர் தினம் என்றுதான். இந்த 22,000 ஊழியர்கள் இல்லையென்றால் மின்சார சபை இயங்க முடியாது. மேலும் எமது இந்தப் பயணத்திற்கு வலுவூட்டுவதுதற்காகத்தான மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் இது மாதிரியான ஒரு விஷேட தினத்தையும் பிரகடனப்படுத்தியிருக்கின்றார். ஊழியர்களை மதித்து கௌரவிப்பதற்கும், ஊக்குவிப்பதற்கும், அவர்களின் குறைகளைக் கேட்டறிவதற்கும் வாய்ப்பளிக்கக்கூடிய ஒரு தினத்தை ஒதுக்க வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் நினைத்தார்கள். நாங்கள் இன்று இந்த ஊழியர்களை மதித்து பாராட்டினோம். ஊக்குவித்தோம். அடுத்ததாக அவர்களின் குறைகளைக் கேட்டறிவோம். எம் எல்லோருக்கும் குறைகள் பிரச்சினைகள் இருக்கின்றன. சில நேரங்களில் சில குறைகளை முன்வைத்தால் அவற்றுக்குத் தீர்வுப் பரிகாரம் கிடைப்பதில்லை. ஆனாலும் இவற்றை முன்வைத்து, உயர் அதிகாரிகளுக்கு அறியப்படுத்தினால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். கடந்த நாட்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது இ.மி.ச. ஆற்றிய பணியைப் பற்றி அனைவரும் பாராட்டிப் பேசியிருந்தனர். அரசியல் வாதிகளும் கூட இ.மி.ச. ஊழியர்களைப் பாராட்டியிருந்தனர். பிரதிப் பொது முகாமையாளர் தொடக்கம் பயிற்சி பெறும் தொழில்நுட்ப ஊழியர்கள் வரை உயிரையும் மதியாது கூட்டுப் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டமையே இந்தப் பாராட்டுக்குக் காரணமாகும். மக்களுக்காகவும், மின்சார நுகர்வோருக்காகவும், இலங்கை மின்சார சபையின் புகழுக்காகவும் ஒரே குழுவாகக் களமிறங்கியமையால்தான் இத்தகையவொரு நிலைமையை சமாளித்து வெற்றி பெற முடிந்தது. ஒரு நிறுவனத்திற்கு இவ்வாறனவொரு கூட்டுப் பொறுப்பு மிகவும் அவசியமாகும். நாங்கள் இன்று எமக்கிருக்கின்ற பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதும் இவ்வாறானவொரு கூட்டுப் பொறுப்புடனாகும்’ என கூறினார்கள்.

Leave a comment

* required