29 0

Posted by  in Latest News

நேற்று ஒரு சவாலை ஏற்க நேர்ந்தது. சகோதரர் ஒருவர் எனக்கு சவால் விடுத்தார், மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என முடியுமானால் ஒழிவு மறைவின்றி கூறுமாறு. அவர் நினைக்கக்கூடும் என்னை சவால்கள் சூழ்ந்திருப்பதால் எனக்கு நேரடியாகக் கூற முடியாது என்று. ஆம் நான் கூறுவதற்கு அஞ்சவில்லை. சவால்கள் எவ்வளவுதான் வந்தாலும் அவற்றுக்கு நாங்கள் தீர்வுகளைக் காண்போம். எனினும், ஒரு போதும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கப் போவதில்லை என விடய அமைச்சர் என்ற ரீதியில் நான் மிகவும் தெளிவாக ஒழிவு மறைவின்றி நாட்டு மக்களுக்கு கூற விரும்புகின்றேன்’  என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் தெரிவித்தார்கள்.

இன்று (29) ஆம் திகதி காலை நேரத்தில் ருவன்வெல்ல ராஜசிங்க வித்தியாலயத்தில் நடைபெற்ற கேகாலை மாவட்டப் பாடசாலை கரப்பந்தாட்ட போட்டியின் போது பிரதான அதிதியாகக் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்…

‘30 ஆண்டுகளின் பின்னர் தான் எமக்கு இவ்வாறு குறைந்தளவான மழை கிடைத்தது. நாட்டில் மழை பெய்தாலும் பருவப்பெயர்ச்சி மழை இன்னும் தொடங்கவில்லை என்பதால் இது வரை மின்சாரத்தை உற்பத்தி செயவதற்கு இருக்கின்ற முழுமொத்த நீரின் அளவு 48% வீதமாகக் காணப்படுகின்றது. ஏனைய ஆண்டுகளில் இந்தக் கால கட்டத்தில் 70% வீதமான நீர் இருக்கும். ஆகையால் டீசலையும் நிலக் கரியையும் பயன்படுத்தி இயக்கப்படும் மின்னுற்பத்திப் பொறித்தொகுதிகளிலிருந்து தான் நாம் மின்சாரத்தை வழங்குகின்றோம். மே மாதமளவில் அதன் நிமித்தம் 33 பில்லியன் ரூபா நிதியை செலவிட நேர்ந்தது. இவை தவிர, உள்ளக ரீதியான பிரச்சினைகள், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு எம்மால் முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆயினும் நான் இவை அனைத்து தொடர்பிலும் அமைச்சரவையுடன் கலந்துரையாடியுள்ளேன். அமைச்சரவையினால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்னவென்றால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காது செயல்பட வேண்டும் என்ற விதம் பற்றியாகும். சவால்களுக்கு முகம்கொடுத்து அத்தகைய சவால்களுக்கு தீர்வுகாணும் வகையில் நாம் எப்பொழுதும் அதற்கான வாய்ப்புகளைக் கட்டியெழுப்பியுள்ளோம். நான் இந்தப் பிள்ளைகளிடமும் கேட்டுக் கொள்கின்றேன், விளையாட்டுக்களினூடாக சவால்களுக்கு முகம்கொடுங்கள்,  அத்தகைய சவால்களுக்கு தீர்வுகளைத் தேடிக்காணுங்கள், புகழைத் தேடிக்கொள்ளுங்கள், உடலாரோக்கியத்தைப் பேணுங்கள், எல்லாத்திற்கும் மேலாக வெற்றி தோல்வியை சமமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a comment

* required