24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்கும் ஆற்றலுடைய எமது பிராந்தியத்தில் ஒரேயொரு நாடு இலங்கை என சார்க் பிராந்திய அமைப்பின் செயலாளர் நாயகம் பாராட்டுகின்றார்…
12 0

Posted by  in Latest News

சார்க் பிராந்தியத்திலுள்ள நாடுகளில் 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிக்கும், அதேபோன்று 100% மின்சார வசதியையுடைய ஒரேயொரு நாடு இலங்கையே எனவும், சார்க் பிராந்திய அமைப்பின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் அதையிட்டு தான் இலங்கைக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும், சார்க் பிராந்திய கூட்டுறவுக்கான மாநாட்டின் செயலாளர் நாயகம் எச்.எப். அஹமட் ஹுசைன் பீ சியால் அவர்கள் குறிப்பிட்டார்கள்.  நேற்று (13) ஆம் திகதி காலை நேரத்தில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களுடன் அமைச்சு வளாகத்தில் இடம்பெற்ற இரு தரப்புப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சார்க் பிராந்திய நாடுகளுக்கு இடையில் மின்சக்தி தொடர்பான கூட்டுறவை உறுதிசெய்து கொள்ளல் மற்றும் மேம்படுத்திற் கொள்ளல் பற்றி இந்த சந்திப்பின் போது செயலாளர் நாயகத்திற்கும் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சருக்கும் இடையில் மேலும் கலந்துரையாடப்பட்டது. சார்க் பிராந்திய மின்சக்திற்கான கூட்டுறவு தொடர்பில் தலைமை வகித்து செயல்படுமாறும் செயலாளர் நாயகம் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

சார்க் பிராந்திய நாடுகளுக்கு இடையில் காணப்படும் சர்வதேச இராஜதந்திர உறவுகளை மேலும் உறுதிசெய்துகொள்ளும் ஒரு நடவடிக்கையாக இந்த நாட்டினுள் பயன்படுத்தப்படும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்கள் பற்றி சார்க் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளினது சக்தித் துறைகளுக்கும் அறியப்படுத்தி, அத்தகைய உபாயத்திட்டங்களைப் பின்பற்றுவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். அதே போன்று மின்சக்திப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொருட்டு பின்பற்றப்படும் சக்திப் பாதுகாப்பு தொடர்பான உபாயத்திட்டங்கள் பற்றியும் செயலாளர் நாயகம் விடய அமைச்சருடன் நீண்டநேரம் கலந்துரையாடினார்.

இந்த விடயங்கள் தவிர சார்க் பிராந்திய நாடுகளுக்கு இடையில் நட்புறவை உறுதிசெய்து கொள்வது தொடர்பிலும் விடய அமைச்சருடன் மேலும் கலந்துரையாடிய செயலாளர் நாயகம், இந்த நாட்டின் மீளப்புதுப்பிக்கத்தகு சக்திக் கருத்திட்டத்திற்கும் இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்துவதற்கும் வழங்கக்கூடிய ஆகக்கூடிய உதவிகளை வழங்குவதற்கு தான் உறுதியளிப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த ஆண்டுகளில் இலங்கையின் மின்சார முறைமையை வலுப்படுத்தி இந்த நாட்டின் பொருளாதார அபிவிருத்திற்கு சார்க் பிராந்திய அமைப்பினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் அமைச்சர் சார்க் பிராந்திய நாடுகளுக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இந்த சந்திப்பை நினைவுபடுத்தும் முகமாக நினைவுச்சின்னங்களும் இங்கு பரிமாறிக்கொள்ளப்பட்டன.

சார்க் பிராந்திய கூட்டுறவுக்கான மாநாட்டுப் பிரதிநிதிகள், இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியூ.பீ. கனேகல, மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சரின் அந்தரங்க செயலாளர் ஜனத் பொ்னாந்து ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required