870 மெகொவொட்டு மின்சாரத்தை உற்பத்தி செய்வது தொடர்பில் கேள்வி விலை மனுக்களை அழைப்பதற்கு சகல ஒழுங்குகளும்….
15 0

Posted by  in Latest News

இயற்கைத் திரவநிலை எரிவாயு தொடர்பான முதலாவது கேள்வி விலை மனு திறக்கப்பட்டது

நேற்றைய தினமும் எமக்கு மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும். நாம் முதல் தடவையாக சூரிய சக்தி தொடர்பில் 1 மெகாவொட் வீதம் 20 நிலையங்களுக்கு 60 மெகாவொட்டு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் நிமித்தம் கேள்வி விலை மனுக்களை அழைத்தோம். இது பல விதத்திலும் பேசப்பட்டது. பேசுவதற்கு எதுவுமே இல்லாததால்தான் மின்சக்தி உற்பத்தித் துறையிலும், மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி உற்பத்தித் துறையிலும் இவ்வளவு தூரம் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு பேசப்பட்டதற்கு காரணம். அனுபவம் வாய்ந்த முதலாவது சவாலை நேற்று வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர முடிந்தமையைிட்டு நாம் சந்தோஷப்படுகின்றோம். அதன் பிரதிபலன்கள் இறுதியில் மக்களையே சென்றடையும். ரூ.23.10 இற்கு இது வரை கொள்வனவு செய்யப்பட்ட சூரிய சக்தி அலகொன்றுக்கான ஆகக் குறைந்த விலை ரூ.12.73 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதன் சராசரி விலை ரூ.17.01 வரை குறைந்துள்ளது. இந்த வெற்றி முழுமொத்த மக்களினதும் 55 இலட்சம் மின்சார நுகர்வோரினதும் வெற்றியாகும். பேசப்பட்ட திரவநிலை எரிவாயுவுக்கான முதலாவது கேள்வி விலை மனுவுக்கான சில தொழில் நுட்பப் பிரேரணைகள் திறக்கப்பட்டன. இதன் நிமித்தம் 6 தரப்புகள் போட்டியிடுகின்றன. அதே போன்று எதிர்வரம் 2 மாதங்களினுள் நாம் இந்த நாட்டின் எஞ்சியிருக்கும் காலத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொருட்டு கேள்வி விலை மனுக்களை அழைப்பதற்கு ஆயத்தமாகவிருக்கின்றோம். 870 கொவொட் அளவினுள் 200 மெகாவொட் சூரிய சக்தியும், 170 மெகாவொட்டு காற்றுமூல சக்தியும் அடங்கும். இதற்கு பலரும் பல கதைகளைக் கதைக்கலாம். ஆயினும் நாம் வெளிப்படையாக செயல்படுவோம். அநீதி இழைக்கப்படும் தரப்புகளுக்கு மேன்முறையீட்டு சபையும் நீதிமன்றங்களும் இருக்கின்றன” என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இன்று (15) ஆம் திகதி மின்சாரப் பகிர்ந்தளிப்புப் பிராந்திய இலக்கம் 04 இனது தலைமை அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் முகமாக தெஹிவளைப் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்,

“இன்று அமைச்சுக்கு மாத்திரமன்றி இலங்கை மின்சார சபைக்கும் விஷேட தினமாகும். இன்று மின்சாரப் பகிர்ந்தளிப்புப் பிராந்திய இலக்கம் 04 இன் தலைமை அலுவலகத்தை 20 மாத காலத்தினுள் கட்டி முடிக்கும் கனவை நனவாக்கும் பொருட்டு மிகவும் வினைத்திறன் வாய்ந்த திட்டத்திற்கு அமைய பணிகளை ஆரம்பிக்கும் நாளாகும்.  20 மாதங்கள் என்பது 20 மாதங்களேயாகட்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம். அதுதான் முக்கியமானது. எமது இலக்கை அடைவதற்கு முடியுமானளவு முயற்சிக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டார்கள்.

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்திப் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரோ, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர்கள் அடங்கலாக அதிக பல அலுவலர்களும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required