10 0

Posted by  in Latest News

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய

 

காலநிலை மாற்றங்களின் அடிப்படையில் மழை கிடைத்தாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவுகள் அதிகளவில் அதிகரிக்காததால் மின்சாரத்தை சிக்கமாகப் பாவிக்குமாறு அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.

கடந்த ஒரு சில தினங்களில் மழை கிடைத்தாலும் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவுகள் குறிப்பிட்டளவில் அதிகரிக்கவில்லை. ஆகையால், மாற்றுவழி சக்தியைப் பயன்படுத்தி எமக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிடும். அவ்வாறு நேரிடுவது மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காகும். எனவே மின்சார நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவித்தால் இந்தப் பிரச்சினையை சமாளிக்க முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொத்துவில் கடல்கரை மகா விகாரைக்கு சூரியபள சங்கிராமயக் கருத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தி முறைமையை வழங்கி வைக்கும் சம்பிரதாய வைபவத்தில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment

* required