09 0

Posted by  in Latest News

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சூர்யபள சங்கிராமய கருத்திட்டத்தின் கீழ் சமய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சூரிய சக்திப் பொதிகளை விநியோகிக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் இன்று கலந்துகொண்ட தஹம் புத்திரர் மேன்மை தங்கிய ஜனாதிபதி சிறிசேன அவர்கள் பொலன்னறுவை கல்தம்பகம ஸ்ரீ விஜயராம விகாரைக்கும், திம்புலாகல ரஜ மகா விகாரைக்கும், பொலன்னறுவை கல் விகாரைக்கும், மெதிரிகிரிய வட்டதாகெயவுக்கும் சூரிய சக்திப் பொதிகளை வழங்கி வைத்து இந்தத் தேசிய கரும பணிக்குப் பங்களித்தாரர்.

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்களின் எண்ணக்கருவுக்கு இணங்க செயற்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் பல கட்டங்களின் கீழ் நாட்டிலுள்ள சமய வழிபாட்டு ஸ்தலங்களுக்கு சூரிய சக்தி முறைமைகள் வழங்கப்படவுள்ளன.

இங்கு கருத்துத் தெரிவித்த தஹம் புத்திரர் சிறிசேன அவர்கள் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி இந்த நாட்டிற்கு அவசியமான ஒரு சக்தி மூலமாகும் எனக் கூறினார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் 2020 ஆம் ஆண்டளவில் 200 மெகாவொட்டு சக்திக் கொள்திறளை தேசிய மின்சார முறைமைக்கு சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்கள்.

இந்த நிகழ்வில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரட்ன அவர்கள் அடங்கலாக பல அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Leave a comment

* required