சூரிய சக்திக் கிராமங்களைத் தாபிப்பதற்கு இணையாக குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு சலுகைத் திட்டத்தின் கீழ் சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகைகளைப் பெற்றுக் கொடுத்தல்
29 0

Posted by  in Latest News

நாம் சூரிய பளசங்கிராமயத் திட்டத்தின் கீழ் 03 முறையியல்களை அறிமுகப்படுத்தினோம். அவைதான் தேறிய மாணிவாசிப்பு, தேறிய கணக்கீடு (நெட் எக்கவுண்டிங்) மற்றும் நெட் ப்ளஸ் முதலிய முறையியல்கள். குறிப்பாக குறை வருமானமுடைய மக்களுக்காகத்தான் நாம் இந்த நெட் ப்ளஸ் முறையியலை அறிமுகப்படுத்தினோம். இதன் விஷேடத்துவம்தான் குறை வருமானமுடையவர்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பது. மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் இந்த ஆண்டை வறுமை ஒழிப்பு ஆண்டாகப் பிரகடனப்படுத்தியுள்ளார். ஆகையால், குறைந்த வருமானமுடையவர்களுக்கு குறைந்த விலையில் சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகைகளைப் பெற்றுக் கொடுத்து, அவர்களின் மின்சாரக் கட்டணத்தை அவற்றினூடக அணவச் செய்து, அவர்கள் மேலதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு திட்டத்தையும் நாம் நடைமுறைப்படுத்த ஆயத்தமாகவிருக்கின்றோம். மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வினையடுத்து, எலஹர மற்றும் பக்கமுண ஆகிய பிரதேசங்களில் நெட் பள்ஸ் என்றழைக்கப்படும் இந்தக் கருமப்பணித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நாம் திட்டமிடுகின்றோம்’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நேற்று (28) காலையில் மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சில் சூரிய சக்திக் கிராமங்களைத் தாபிப்பது தொடர்பில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட வேளையில் அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தொிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்….

‘நெட் ப்ளஸ்’ திட்டத்தின் கீழ் ஒரு அலகு சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது ரூ.4.50 தொகையான ஒரு விலையிலாகும். எனினும், சூரிய சக்திப் பலகைகளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நபர்களிடமிருந்து நாங்கள் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் போது அலகொன்றுக்கு பொதுவாக ரூ.22.00 என்ற ஒரு விலையில் கொள்வனவு செய்கின்றோம். இவ்வாறு நன்மைகள் இருந்தும், சமூகத்தில் குறை வருமானமுடையவர்கள் இந்த நன்மைகளைப் பெற்றுக் கொள்வதில் அவ்வளவு அக்கறை காட்டுவதாகவில்லை. அதற்குக் காரணம்தான் அத்தகையவர்களின் பொருளாதாரக் கஷ்டம் இத்தகைய நன்மைகளைப் பற்றி சிந்திக்கவிடுவதில்லை. அத்தகையவர்களுக்கு இருப்பது இதை விடவும் முக்கியமான அடிப்படைப் பிரச்சினை. ஆகையால், அத்தகைய குறை வருமானமுடைய நபர்களின் மின்சாரக் கட்டணத்தை அணவச் செய்யும் வகையிலும், ஒரு தொகைப் பணம் அவர்களின் கைகளுக்குக் கிடைக்கக்கூடிய வகையிலும், குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகைக்கான கட்டணத்தை நீங்கள் அறவிட்டுக் கொள்ளும் வகையிலும் அவர்களுக்கு சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகைகளைப் பெற்றுக் கொடுத்து, அவர்களின் வீடுகளை சூரிய சக்தி மின்னுற்பத்தி வசதிகளாக ஆக்கும் வகையில் உதவுமாறு சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகை உற்பத்தி நிறுவனங்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்’ எனவும் குறிப்பிட்டார்கள்.

மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, இலங்கை மின்சார சபையினதும் மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபையினதும் அதிகாரிகளும், தனியார் துறை சூரிய சக்தி மின்னுற்பத்திப் பலகை உற்பத்திக் கம்பனிகளின் பிரதிநிதிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required