சூரிய சங்கிராமயத் திட்டத்தை முன்னெடுப்பதால் விகாரைகளின் மின்சாரத்திற்கான புன்னிய உதவிற்கு முற்றுப்புள்ளி
14 0

Posted by  in Latest News

இன்றும் எமது மக்கள் மத்தியில் பன்சலைகளுக்கு முதலிடம் கிடைத்திருக்கின்றது. பன்சலைதான் எமது கிராம பௌத்த மக்களின் வழிகாட்டி. ஆகையால், இந்த விதத்தில் பன்சலைகளுக்கு சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமைகளைப் பெற்றுக் கொடுப்பதனூடாக, எமது கிராம மக்களை இந்த சூரிய சக்தி மின்னுற்பத்தி தொடர்பில் விழிப்பூட்டச் செய்து அவர்களை அதன் நிமித்தம் நகரச்செய்யலாம். அதே போன்று, எமது பன்சலைகளுக்கு சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமைகள் பெற்றுக் கொடுக்கப்படுவதால் மீண்டும் மின்சாரத்திற்காக நன்கொடை ஏதும் அவசியப்படப் போவதில்லை’ என மின்வலு மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள் குறிப்பிட்டார்கள்.

சூரிய பளசங்கிராமவிற்கு இணையாக அம்பேபுஸ்ஸ மங்கெதர ரஜமகா விகாரைக்கு சூரிய சக்தி மின்னுற்பத்தி முறைமையைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தொிவித்த அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அவர்கள்….

‘நாம் இந்த நாட்களில் பெரும் போரட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். அது தான் சூரிய பளசங்கிராமய. இந்த நாட்டின் மின்னுற்பத்தியில் முடியுமானளவு உள்நாட்டு சக்தி மூலங்களிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. நாங்கள் இன்னும் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தில் அரைவாசி அளவை நிலக்கரியிலிருந்தும் எண்ணெய்களிலிருந்தும் உற்பத்தி செய்கின்றேன். இதனால், அதிகளவான நிதி அந்நிய நாடுகளுக்குச் செல்லுகின்றது. இது ஒரு பெரும் பிரச்சினையாகும். எனினும், பயன்படுத்தப்படாத விலையில் குறைந்த சக்தி வளங்கள் எம்மிடத்தில் இருக்கின்றன. அவைதான் நீர்வலு, சூரிய சக்தி, காற்று சக்தி முதலியவை. இவற்றிலிருந்து ஒரு சதமேனும் லெவில்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மத்திய கோட்டிற்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு நாடு என்ற ரீதியில் சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது எமது நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாகும். நாங்கள் அதில் சற்று தாமதமடைந்து விட்டோம். அந்தத் தாமத்தை ஈடுசெய்வதுதான் நாம் இன்று செய்கின்ற இந்த பளசங்கிராமய. இந்த சங்கிராமயவின் இலக்குதான் குறுகிய எதிர்காலத்தில் பத்து இலட்சம் வீடுகளை சூரிய சக்தி மின்னுற்பத்தி வசதிகளாக மாற்றுவது’ எனவும் குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required